இலங்கையில் தொற்றுநோய்கள் குறித்த சமூக நம்பிக்கைகள் மற்றும் சிகிச்சை அணுகுமுறைகள்: ஒரு மருத்துவ மானிடவியல் ஆய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-2
Year of Publication : 2025
Authors : T. Yujanthan


Citation:
MLA Style: T. Yujanthan, "Social Beliefs and Health-Seeking Practices Regarding Infectious Diseases in Sri Lanka: A Medical Anthropological Study" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I2 (2026): 1-11.
APA Style: T. Yujanthan, Social Beliefs and Health-Seeking Practices Regarding Infectious Diseases in Sri Lanka: A Medical Anthropological Study, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i2), 1-11.

சுருக்கம்:
இலங்கை ஒரு பல்சமூக, பல்மத, பல்பண்பாட்டு பின்னணியைக் கொண்ட நாடாக இருப்பதால், தொற்று நோய்கள் குறித்த மக்களின் புரிதலும் சிகிச்சை தேடல் நடைமுறைகளும் உயிரியல் மருத்துவக் கோட்பாடுகளால் மட்டுமன்றி சமூக, பண்பாட்டு மற்றும் மத நம்பிக்கைகளாலும் ஆழமாகப் பாதிக்கப்படுகின்றன. இவ்வாய்வு, மருத்துவ மானிடவியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் தொற்று நோய்கள் (மலேரியா, டெங்கு, காசநோய், கொவிட்-19 போன்றவை) குறித்த சமூக நம்பிக்கைகள் மற்றும் சிகிச்சை அணுகுகிமுறைகளை ஆராய்வதையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வு ஞரயடவையவiஎந ஆய்வாக வடிவமைக்கப்பட்டு,ஆழமான நேர்காணல்கள், குழு விவாதங்கள் மற்றும் பங்கேற்பு அவதானிப்பு ஆகிய முறைகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டன. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகிய சூழல்களில் வாழும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் இதில் இணைக்கப்பட்டனர். நோய் காரணங்கள் குறித்து மக்கள் கொண்டிருக்கும் விளக்கங்கள், தெய்வீக சக்திகள், சுற்றுச்சூழல் மாசு, உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் தூய்மை-அசுத்தம் போன்ற பண்பாட்டு கருத்துக்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன என்பது ஆய்வில் வெளிப்பட்டது. மேலும்,சிகிச்சை தேடலில் இலங்கையில் “மருத்துவ பல்துறை நடைமுறை” (ஆநனiஉயட Pடரசயடளைஅ) பரவலாகக் காணப்படுவதும், மக்கள் ஒரே நேரத்தில் அரசு உயிரியல் மருத்துவம், பாரம்பரிய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவம், மதச் சடங்குகள் மற்றும் வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டது. சமூக நம்பிக்கைகள் மற்றும் மருத்துவ அமைப்புகளின் மீதான நம்பிக்கை, சிகிச்சை தொடங்கும் காலத்தையும் அதன் தொடர்ச்சியையும் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. இவ்வாய்வு, தொற்று நோய்களை வெறும் உயிரியல் பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் அணுகுமுறை போதியதல்ல என்பதை வலியுறுத்துகிறது. பொது சுகாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் சமூக அறிவு அமைப்புகள் மற்றும் பண்பாட்டு சூழல்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை இவ்வாய்வு முன்வைக்கிறது. மருத்துவ மானிடவியல் பார்வையில், இலங்கையின் தொற்று நோய் மேலாண்மையை மேலும் பயனுள்ளதாக்க உதவும் என ஆய்வு முடிவுறுகிறது.

முக்கிய வார்த்தைகள்:
மருத்துவ மானிடவியல், தொற்று நோய்கள், சமூக நம்பிக்கைகள், சிகிச்சை தேடல் நடத்தை, மருத்துவ பல்துறை நடைமுறை, இலங்கை.

துணைநூற்பட்டியல்:
[1] பி. என், ஸ்ரீஸன், ஜி. ஏ.எ. என்., ஜெயசிறி, ஏ. ஏ. ஜே. (2025). இலங்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் பாரம்பரிய சிங்கள மருத்துவத்தின் பயன்பாடு.
[2] தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம்(Nஐஐனு) - ளுசi டுயமெய புழஎநசnஅநவெ ர்நயடவா ளுநசஎiஉநள.
[3] Farmer, P. (1999). Infections and Inequalities: The Modern Plagues. Berkeley: University of California Press.
[4] Kleinman, A. (1980). Patients and Healers in the Context of Culture. Berkeley: University of California Press.
[5] Kleinman, A. (1988). The Illness Narratives: Suffering, Healing, and the Human Condition. New York: Basic Books.
[6] Nichter, M. (2008). Global Health: Why Cultural Perceptions, Social Representations, and Biopolitics Matter. Tucson: University of Arizona Press.
[7] Scheper-Hughes, N., & Lock, M. (1987). “The Mindful Body: A Prolegomenon to Future Work in Medical Anthropology.” Medical Anthropology Quarterly, 1(1), 6–41.
[8] Weiss, M. G. (1997). “Cultural Models of Tuberculosis: Lessons from South Asia.” Medical Anthropology Quarterly, 11(4), 1–20.
[9] World Health Organization. (2020). Managing Epidemics: Key Facts about Major Deadly Diseases. Geneva: WHO