![]() |
Editor in Chief | : | Dr.C.Ravisankar | |
ISSN No. | : | 2582-5313 | ||
Frequency | : | Quarterly | ||
Submit Paper at | : | editorirjts@gmail.com | ||
Publication Fee | : | Free | ||
Language | : | Tamil | ||
Publisher | : | Mahizhini publication |
அறிமுகம்
தமிழ் ஆய்வு ஆராய்ச்சியின் சர்வதேச நடுவர் இதழ் (ஐ.ஆர்.ஜே.டி.எஸ்.ஆர்) என்பது தமிழ் மொழியானது, உலகில் பல நாடுகளில் பேசப்படுகிறது. தமிழகத்திற்கு வெளியே பல பல்கலைக்கழகங்களிலும், மேலைநாட்டுக் கல்வி நிறுவனங்களிலும் தமிழாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இயல், இசை, நாடகம் என்ற வரையறையில் இருந்து விலகி, மொழியியல், சமூகவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், வரலாறு, ஊடகவியல், கலையியல் எனப் பல்துறை சார்ந்து, தமிழாய்வு விரிவடைந்துள்ளது. இத்தகு சூழலில் தமிழாய்வினுக்கெனப் புதிய ஆய்விதழ்கள் நிரம்பத் தேவையாக உள்ளன. எனவே தான் தமிழ் ஆய்வு ஆராய்ச்சியின் சர்வதேச நடுவர் இதழ் (ஐ.ஆர்.ஜே.டி.எஸ்.ஆர்) என்ற பெயரில் புதிதாக ஆய்விதழ் வெளியிட விழைந்துள்ளோம்.
தமிழாய்வுடன் தொடர்புடைய பிற துறை வல்லுநர்கள், பேராசிரியர்கள் காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பிட வேண்டுகின்றோம். கல்விப்புலம் சார்ந்தவர்கள் மட்டுமின்றி, தீவிரமாகத் தமிழாய்வில் ஈடுபட்டுள்ள வேறு பணியிலுள்ளவர்களும் தங்களுடைய கட்டுரைகளை அனுப்பினால், ஆய்விதழின் நோக்கம் முழுமையடையும். சிறுபத்திரிக்கை சார்ந்தவர்களும் தமிழாய்வு குறித்துக் கட்டுரைகள் அனுப்பும்போது, ஆய்விதழின் பரப்பு விரிவடையும். ஆய்விதழ் தரத்துடன் வெளிவர தமிழாய்வில் அக்கறையுள்ளவர்கள், ஒத்துழைப்பு நல்கிட வேண்டியது அவசியம்.