தமிழ் வெல்லும்! – முத்தமிழ் அறிஞர்கருணாநிதி |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-2 Year of Publication : 2025 Authors : Dr. T. Samuthiraraj |

|
Citation:
MLA Style: Dr. T. Samuthiraraj, "Tamil will win! – Muthamil scholar Karunanidhi" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I2 (2025): 5-9.
APA Style: Dr. T. Samuthiraraj, Tamil will win! – Muthamil scholar Karunanidhi, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i2), 5-9.
|
சுருக்கம்:
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி. இவருக்கு இருசகோதரிகள் இருந்தனர். தொடக்கக் கல்வியைத் திருக்குவளையில் கற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக் கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரைபயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார், பள்ளியிறுதித் தேர்வில் இவர்தேர்ச்சியடையவில்லை. கருணாநிதி, தமதுபள்ளிப்பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தமதுவளரிளம் பருவத்தில், வட்டாரமாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944 ஆண்டு உருவாக்கினார். அவரே அதன் தலைவராக மு.கருணாநிதியும் அமைச்சராக கே.வெங்கடாசல என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக் கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக ‘மாணவநேசன்’ என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். சில காலத்துக்குப்பின், அவ்வமைப்பு மாநில அளவிலான "அனைத்து மாணவர்களின் கழகம்" என்ற அமைப்பாக உருப்பெற்றது. மு.கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப்பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். பின்னாளில் முத்தமிழ் மீது கொண்ட பற்றின்காரணமாக தாய் மொழியான தமிழுக்கு தொண்டுகள் பல செய்து அரசியல் வாழ்வோடு’ தமிழ்வெல்லும்’ வாழும் என்பதற்கு சான்றாக வாழ்ந்த முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஐயா அவர்களை பற்றிய் செய்தியினை இக்கட்டுரையில்காண்போம்.
|
முக்கிய வார்த்தைகள்: நாகப்பட்டினம், முத்தமிழ், கருணாநிதி, நாடகம், கவிதை, இலக்கியம், மறுமலர்ச்சி, மாணவநேசன்.
|
துணைநூற்பட்டியல்:
[1] கலைஞர் கருணாநிதி மு., கலைஞரின் இலக்கிய ஆளுமை, பக், 1-22, 2021, கெளரா பதிப்பகம், சென்னை.
[2] கலைஞர் கருணாநிதி மு., சங்கத்தமிழ், பக், 2-23, 2021, திருமகள் நிலையம், சென்னை.
[3] கலைஞர் கருணாநிதி மு., இளைய சமுதாயம் எழுகவே, பக், 8-33, திருமகள் நிலையம், சென்னை.
[4] கலைஞர் கருணாநிதி மு., நெஞ்சுக்குள் நிதி, சுயசரிதை, குங்குமம் பதிப்பகம், சென்னை.
[5] googlewikipedia
|