நான்மணிக்கடிகை காட்டும் சமூகம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-1
Year of Publication : 2025
Authors : V. Antonyraja


Citation:
MLA Style: V. Antonyraja, "A society that shows the four o'clock" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 21-30.
APA Style: V. Antonyraja, A society that shows the four o'clock, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 21-30.

சுருக்கம்:
செம்மொழியாம் தமிழ்மொழிக்கு அணிசேர்க்கும் இலக்கியங்கள் பல்வேறு வடிவங்களில் உள்ளன. அவற்றுள் நவீன இலக்கியங்கள் இன்றையகால சமூகத்தின் பாடு பொருளாகவிளங்குகின்றன. மனிதன் கூடிவாழக் கற்றுக் கொண்ட காலத்திலிருந்து தற்போது வரையிலான மாற்றங்கள், வளர்ச்சி, நம்பிக்கைகள் ஆகியவற்றைச் சமூகவெளியில் காணமுடிகிறது. பண்டையவாழ்வியல் பழக்கவழக்கங்கள், சமூகத்தின் முன்னேற்றத்திற்குச் சான்றுகளாக இருந்தன. ஒரு நல்ல சமூகத்திற்கு சீறயநெறியைக் காட்டக் கூடிய இலக்கியங்களாக அற இலக்கியங்கள் அமைந்துள்ளன. முக்கியமாக சமூக ஒழுங்கு, தனிமனித ஒழுங்கு ஆகியவற்றைப் பாடு பொருளாகக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் வெளிப்பட்டுள்ளன. தனிமனிதன் சமூக அறத்திலிருந்து எவ்வாறுதனக்கான அறத்தைக் கட்டமைத்துக் கொள்வது, தனிமனித அறம் எவ்வாறு சமூக அறமாகக்கட்டமைகிறது என்பதை இப்பாடு பொருள்கள் வெளிப்படுத்தியுள்ளன. களப்பிரர்கள் அதிகாரத்தைக் கட்டமைத்துக் கொண்டசங்கம் மருவியகாலகட்டத்தில் தோற்றம் பெற்ற இந்நூல்கள் சங்ககாலவாழ்வியல் கடைபிடித்த சிலவாழ்வியல் விழுமியங்களை மறுத்தன. அதே போல பேரரசு அதிகாரத்தின் கீழ்மக்களை நிலை கொள்ளச்செய்தன. இந்த அடிப்படையில் உருவான அறநூல்களில் நான்மணிக்கடிகை முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
தமிழ், மக்கள், சமூகம், மொழி, குடும்பம், கல்வி பொருளாதாரம்.

துணைநூற்பட்டியல்:
[1] வாழ்வியல்கலைக்களஞ்சியம், தமிழ்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
[2] சமூகநாவல், இரா.தண்டாயுதம், தமிழ்புத்தகாலயம், சென்னை -17
[3] தொல்காப்பியம்பொருளதிகாரம், இளம்பூரணார்உரை, சாரதாபதிப்பகம், திருச்சி -01
[4] நான்மணிக்கடிகைஉரையும்மூலமும், சாரதாபதிப்பகம், திருச்சி -01
[5] திருக்குறள்பரிமேலழகர்உரை, கங்கைபுத்தகநிலையம், தி.நகர்சென்னை 17