ஆதி கிரேக்க மெய்யியலாளர் பைதகரசின் மனித நல்வாழ்க்கைக்கான வழிகாட்டல்கள் - ஒரு சமகால நோக்கு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-3 Year of Publication : 2024 Authors : Marimuthu Prakashan |

|
Citation:
MLA Style: Marimuthu Prakashan, "The Ancient Greek Philosopher Pythagoras' Guidelines for Human Well-Being - A Contemporary Perspective" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 31-40.
APA Style: Marimuthu Prakashan, The Ancient Greek Philosopher Pythagoras' Guidelines for Human Well-Being - A Contemporary Perspective, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 31-40.
|
சுருக்கம்:
சோக்கிரடீசிற்கு முந்தைய மெய்யியலாளர்கள் மரபில் பைதகரஸ் முக்கியமான இடத்தினை பெறுகின்றார். இந்த ஆய்வுக்கட்டுரையானது எவ்வாறு ஆதிகிரேக்ககால மெய்யியலாளர் பைதகரசின் வழிகாட்டல்கள் சமகால வாழ்க்கை முறைக்கு பொருத்தமான வகையில் பயன்படுத்தப்பட முடியும் என்ற தேடலை மேற்கொள்வதாக உள்ளது. பைதகரஸ் பொதுவாக கணிதம், மெய்யியல் முதலான துறைகளில் மேற்கொண்ட பங்களிப்புக்காக அறியப்படுகின்றார். மெய்யியலின் பௌதீக அதீத சிந்தனையுடன் ஒழுக்கவியலை இணைத்து இவ்வுலக வாழ்க்கையில் உடல், உள ஆரோக்கியத்துடன், ஆன்ம மேம்பாடு கொண்ட வாழ்க்கைக்கான வழிகாட்டலை மேற்கொள்வதாக இவருடைய சிந்தனைகள் உள்ளன. குறித்த புராதன வழிகாட்டல்களின் சமகால பொருத்தப்பாட்டுத்தன்மை எவ்வாறு உள்ளது என்பதே இந்த ஆய்வினை மேற்கொள்வதற்கான பிரச்சினையாக அமைந்துள்ளது. இதன்படி இதனடிப்படையில் வாழும் கலையுடன் தொடர்புடைய வகையில் பைதகரசின் அடிப்படையான கொள்கைகள் எவை?, எவ்வாறு பைதகரசும் அவருடைய சீடர்களும் குறித்த கொள்கைகளை தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றினார்கள்?, எவ்வாறு குறித்த கொள்கைகள் சமகால வாழ்க்கை முறைக்குள் வாழ்க்கை நலனையும், ஒழுக்க நடத்தையினையும் மேம்படுத்துவதற்காக உள்வாங்கப்பட முடியும்?, பைதசரசின் தத்துவார்த்த, ஆன்மீக கொள்கைகளும், நடைமுறைகளும் சமகாலத்தில் ஒருங்கிணைந்த நல்வாழ்க்கைக்கு எவ்வாறு பங்களிப்பு செய்யக்கூடியவையாக உள்ளன? என்பன இந்த ஆய்வினை முன்நகர்த்தும் வினாக்களாக அமைந்துள்ளன. பௌதீகஅதீத தளத்தில் கட்டமைக்கப்பட்ட ஒழுக்க வழிகாட்டல் சமகால வாழ்க்கையில் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது என்பதனை ஆய்வு செய்வது இங்கு இலக்காக அமைந்துள்ளது. இரண்டாம் நிலைத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பண்பு சார்ததாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பைதகரசின் தத்துவங்களை வெளிப்படுத்தும் மூலநூல்களும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் இதன்பொருட்டு வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக புராதன மூலங்களில் நவீன வாழ்க்கைக்காக உள்ள படிப்பினைகளை மீள்பரிசீலனை செய்யும் ஒரு செயற்பாடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: பைதகரஸ், வாழும் கலை, புராதன மெய்யியல், நல்வாழ்க்கை.
|
துணைநூற்பட்டியல்:
[1] Barnes, J. (1982). The Pre Socratic-Philosophers. USA: Routledge Publications
[2] Barnes, J. (2002). Early Greek Philosophy. England: Penguin Books
[3] Batchelor, S. (2008). Ancient Greeks for Dummies. England: Jahn Wiley & Sons, Lts
[4] Burnet, J. (1920). Early Greek Philosophy. England: Elibron Classics
[5] Gill, A. L., & Pellegrin, P. (2006). Blackwell Companions to Ancient Philosophy. USA: Blackwell Publishing
[6] Gottlieb, A. (2016). The Dream of Reason – A History of Western Philosophy from the Greek to the Renaissance. England: W. W. Norton & Company
[7] Hermann, A. (2004). To Think Life God – Pythagoras and Parmenides the Origin of Philosophy. USA: Parmenides Publishing
[8] Johansen, K, F. (2005). A History of Ancient Philosophy – From the Beginnings to Augustine. USA: Routledge Publications
[9] Kenny, A. (2004). Ancient Philosophy. USA: Oxford University Press
[10] Laertius, D. (1925). Lives of Eminent Philosophers – Volume II. G.P.Putnam’s Sons UK
[11] Luchte, J. (2011). Early Greek Thought – Before the Dawn. USA: Continuum
[12] Malone, J. C. (2009). Psychology – Pythagoras to Present. England: A Bradford Book Publications
[13] Olivet, F. (1917). The Golden Verses of Pythagoras. England: G. P. Putnam’s Sons
[14] Raven, J. E, & Kirk, G, S. (1957). The Pre Socratic-Philosophers – A Critical History with a Selection of Texts. USA: Cambridge University Press
[15] Waterfield, R. (2000). The First Philosophers - the Pre-Socratic and Sophist. USA: Oxford University Press
|