சங்கத்தமிழ் இலக்கியங்களில் தமிழரின் உணவுக் குறிப்புகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-1
Year of Publication : 2023
Authors : Dr.K.C.Kumaran


Citation:
MLA Style: Dr.K.C.Kumaran, "Tamil Food References in Sangha Tamil Literature" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 113-116.
APA Style: Dr.K.C.Kumaran, Tamil Food References in Sangha Tamil Literature, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 113-116.

சுருக்கம்:
“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே --- குடபுலவியனார்
ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகத்தின் அசைவியக்கங்களை உணர அவர் தம் உணவுப் பழக்க வழக்கங்களைக் கூர்ந்து நோக்க வேண்டும். உணவுப் பழக்க வழக்கங்கள் ஒரு சமூகம் வாழும் பருவச்சூழ்நிலை, வாழ்நிலத்தின் விளைபொருள்கள், சமூகப் படிநிலைகள், உற்பத்திமுறை, பொருளாதாரநிலை ஆகியவற்றைப் பொருத்து அமையும்.மனிதனின் அடிப்படைத்தேவைகளுள் முதன்மையானது உணவு. பழங்கால மனிதன் விலங்குகள் போல கிடைத்த உணவுகளை உண்டு வாழ்ந்தான்.பின்பதப்படுத்திய உணவுகளை உண்டான். உணவின் பல்வேறு சுவைகளையும் அறிந்து தன் விருப்பத்துக்கு ஏற்ப உணவுகளைத் தயாரிக்கவும் கற்றுக்கொண்டான்.

முக்கிய வார்த்தைகள்:
வேட்டை உணவுக் காலம், கால்நடை வளர்ச்சிக் காலம், எளிய வேளாண் முறைக் காலம், பண்பட்ட வேளாண்மைக் காலம்.

துணைநூற்பட்டியல்:
[1] இருங்கள்அடுக்கத்தென்னையர் உழுத கரும் பெனக் கவினிய பெருங்குரல் ஏனல் - அகநானூறு - 320-9-10
[2] சிறுதினை கொய்த விருவி வெண்காற் காய்த்த லவரை - குறுந்தொகை - 82-4-5
[3] வாழைஅம் சிலம்பில் துஞ்சும் நாடன் - அகநானூறு - 332-9
[4] கலைகை யற்ற காண்பி னெடுவரை நிலைபெய் திட்ட மால்பு நெறி யாகப் பெரும்பயன் றொகுத்ததேங்கொள் கொள்ளை - மலைபடுகடாம்-315-17
[5] தேன் நெய்யொடு கிழங்கு மீன் நெய்யொடு நறவுமறுகவும் மாறியோர் - பொருநராற்றுப்படை - 214-15
[6] இருள்துணிந்தன்னஏனம்காணிண் முளீகழை இழைந்தகாடுபடுதீறன் நளிபுகை கமழாது, இறாயுனர்மிசைந்து - மலைபடுகடாம் - 243 – 49
[7] முடந்தை வரகின் வீங்குபீள் அருந்துபு அகநானூறு- 284 – 3
[8] இரும்பனிப்பருவத்த மயிர்க்காய் உழுந்தின் அகல் இலைஅகலவீசிநற் - 89-4-6
[9] .... ... அகல் வயல்கதிர் வார் காய்நெல் கட்கு இனிதுஇறைஞ்ச - அகநானூறு- 294 - 9 - 10