நாட்டுப்புறக் கதைகளும் மக்கள் வாழ்வியலும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal
Volume-5 Issue-1
Year of Publication : 2023
Authors : Dr.Seaman Ilayaraja


Citation:
MLA Style: Dr.Seaman Ilayaraja, "Folktales and Folklore" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 98-106.
APA Style: Dr.Seaman Ilayaraja, Folktales and Folklore, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 98-106.

சுருக்கம்:
ஒரு நாட்டுப்புறக் கதை ஒரு கதைசொல்லியிலிருந்து இன்னொரு கதைசொல்லிக்கு மிக எளிதாக பயணிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கதையானது அதன் வாய்மொழி வடிவத்தைக் காட்டிலும் அதன் அடிப்படை வடிவத்தாலும் கதைக் கருப்பொருளாலும் வகைப்படுத்தப்படுவதால், அது மொழி எல்லைகளை சிரமமின்றி கடந்து செல்கிறது. ஒரு புனைகதையை உரைநடையின்வழி வாய்வழியாகச் சொல்லுதல் நாட்டுப்புறக் கதைகளாகும். பொதுவாக மிருகங்கள் மனிதர்கள் பற்றிய வீரத்தைக் கதைகளாகக் கூறுவர். அதே சமயம் கொள்கைக்காரர்கள் பற்றிக் கதைகளும் இருக்கும். கதைகளினுள் இடையில் உபகதைகளும் வரும், சமூகச் சடங்குகளை வலியுறுத்தும் கதைகள், சமயக் கதைகள், விளையாட்டுக் கதைகள், நீதிக்கதைகள் போன்ற உபகதைகளும் நாட்டுப்புறக் கதைகளில் அடங்கும். வாய்வழி கற்பனைக் கதை, எந்த இறுதி தோற்றத்திலிருந்து வந்தாலும், காலத்திலும் இடத்திலும் நடைமுறையில் உலகளாவியது. சிலர் மிகவும் எளிமையான கதைகளையும் மற்றவர்கள் பெரும் சிக்கலான கதைகளையும் கூறுகிறார்கள். உண்மைக்கும், புனைகதைக்கும் இடையேயான வேறுபாடு கதை சொல்பவரின் நம்பிக்கைகளையும் கதை கேட்பவரது நம்பிக்கைகளையும் ஒப்பீடாகப் பிரதிபலிக்கிறது. ஒரு சமூகத்திலிருந்து மற்றொரு சமூகத்திற்கு புராணக்கதையும், மரபுவழிக்கதையும் ஊடுருவும் போது நம்பிக்கையற்று ஏற்றுக் கொள்ளப்படுவதுண்டு. இவை ஊடுருவிய சமூகத்தில் நாட்டுபுறக் கதைகளாய்ப் பிரதிபலிக்கின்றது.

முக்கிய வார்த்தைகள்:
தாதாஜி கொண்டதேவ், பாபிரியஸ், நாட்டுப்புறக் கதைகள், ஏட்டிலக்கியங்கள், பரமார்த்த குரு கதை.

துணைநூற்பட்டியல்:
[1] தமிழ்நாட்டு நாடோடிக்கதைகள் – கி.ராஜநாராயணன்
[2] வட்டார வழக்குச் சொல்லகாரதி – கி.ராஜநாராயணன்
[3] திராவிட மத்திய காலக்கதைகள் – பண்டித நடேச சாஸ்திரி
[4] இந்தியக் கதைமரபு – சோ.நடராஜன்
[5] தமிழ்க் காப்பியங்களில் கதைவழிக்கல்வி – முத்துச்சண்முகம்@பிரேமா
[6] பஞ்சதந்திரக்கதைகள் – ஓர் ஆய்வு – அ.ம.சத்தியமூர்த்தி
[7] நரிவிருத்தம் ஆராய்ச்சித் தொகுதி – மு.இராகவையங்கார்
[8] பரமார்த்த குருவின் கதை, இலக்கியத்திறானாய்வு– ஜோசப் சுந்தர்ராஜன்
[9] இலக்கியமரபு – மு.வரதராஜன்
[10] நாட்டுப்புறக்கதைகள் – கா.அப்பாதுரை
[11] தமிழக நட்டுப்பாடல்கள் – மு.வை.அரவிந்தன்
[12] தொல்காப்பியம் – இளம்பூரணர்
[13] சமுதாய நோக்கில் பழமொழிகள் – இளந்திரையன்
[14] ஈசாப் குட்டிக்கதைகள் – வை.கோவிந்தன்
[15] நாட்டுப்புற இலக்கியவரலாறு – சு.சண்முகசுந்தரம்
[16] கம்பராமாயணம், சுந்தரகாண்டம் – கம்பர்