திருக்குறள் மற்றும் இஸ்லாத்தின் பார்வையில் வாழ்க்கைத் துணைநலம் -ஓர் ஒப்பியல் ஆய்வு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal Volume-5 Issue-1 Year of Publication : 2023 Authors : ALM Mujahid |

|
Citation:
MLA Style: ALM Mujahid, "Spousal welfare from the perspective of Thirukkural and Islam - A comparative study" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I1 (2023): 54-60.
APA Style: ALM Mujahid, Spousal welfare from the perspective of Thirukkural and Islam - A comparative study, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i1), 54-60.
|
சுருக்கம்:
ஆண், பெண் இருபாலாரும் தமது வாழ்க்கைத் துணையை சரியாகத் தெரிவு செய்து கொள்வதில்தான் இல்லற வாழ்வின் வெற்றியும், மகிழ்ச்சியும் தங்கியுள்ளது. திருமணத்திற்கான அவர்களது தெரிவில் தவறுகள் விடப்படுகின்றபோது அது அவர்களது வாழ்வில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். மனவாழ்வில் புரிந்துணர்வின்மை ஏற்பட்டு விவாரத்து கூட ஏற்படலாம். எனினும் தம்பதியர் இருவரும் தத்தமது கடமைகளை உணர்ந்து சரிவர நிறைவேற்றும் போது அவர்களது குடும்ப வாழ்வு செழிக்கவும், சிறந்த சந்ததிகள் உருவாகவும் வழி ஏற்படுகின்றது. எனவே ஒரு ஆண் தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போது மகிழ்ச்சியான, இல்வாழ்க்கைக்குப் பொருத்தமான பண்புகளைத் தன்னகத்தே கொண்ட பெண்ணைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும் என மதவழிகாட்டல்கள் மூலம் அறிவுறுத்தப்படுகின்றான். ஓர் ஆணோ, பெண்ணோ தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போது நடைமுறையில் கவனத்திற் கொள்ளும் பல அம்சங்கள் காணப்படுகின்றன. அவை பணம், பதவி, குலம், கோத்திரம், அழகு போன்;றவைகளாகும். ஒரு நல்ல மனைவிக்குரிய இலக்கணம், பண்புகளை பல இலக்கியங்கள் எடுத்தியம்பினாலும் திருக்குறள் மற்றும் இஸ்லாத்தினுடைய வழிகாட்டல்களை ஆராயுமிடத்து அவைகளில் பல ஒற்றுமைத்தன்மைகளை அவதானிக்கலாம். ஒரு நல்ல மனைவி எத்தகைய குணவியல்புகளை அணிகலன்களாகக் கொண்டிருக்க வேண்டும் என திருக்குறள் மற்றும் இஸ்லாத்தின் வழிகாட்டல்களிலுள்ள ஒற்றுமையை வெளிக்கொணர்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். இவ்வாய்வுக்காக திருக்குறளும் அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களும் முதன்மைத் தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு விவரணப்பகுப்பாய்வு முறை பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பியல் நோக்கில் திருக்குறள் மற்றும் அல்குர்ஆனை ஆய்வு செய்பவர்களுக்கும் மனைவியின் அணிகலன்களை அறிந்து கொள்ள எத்தணிப்பவர்களுக்கும் சமயப் போதனைகளுக்கு அமைவாக திருமணத்திற்காக எவ்வாறான பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என முயற்சிப்பவர்களுக்கும் இவ்வாய்வு வழிகாட்டியாக அமையும்.
|
முக்கிய வார்த்தைகள்: திருக்குறள், வாழ்க்கைத்துணைநலம், இஸ்லாம், மனைமாட்சி, ஒப்பியல் ஆய்வு.
|
துணைநூற்பட்டியல்:
[1] அல்ஹஜ்ஜாஜ், முஸ்லிம். (2004). ஸஹீஹ் முஸ்லிம். (மொ.பெ), சென்னை, றஹ்மத் பதிப்பகம்.
[2] ஈஸா, முஹம்மது. (2012). ஜாமிஉத் திர்மிதி. (மொ.பெ), சென்னை, றஹ்மத் பதிப்பகம்.
[3] புகாரி, இஸ்மாயீல். (1999). ஸஹீஹுல் புகாரி. ஐந்தாம் பாகம், (மொ.பெ), சென்னை, றஹ்மத் பதிப்பகம்.
|