பாரதி ஆய்வுகள் – நட்பு முரணும் பகை முரணும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-3
Year of Publication : 2022
Authors : Dr. D. Vettichelvan


Citation:
MLA Style: Dr. D. Vettichelvan, "Bharti Studies – Friendship vs Enmity" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I3 (2022): 42-50.
APA Style: Dr. D. Vettichelvan, Bharti Studies – Friendship vs Enmity, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i3), 42-50.

சுருக்கம்:
பாரதியியல் ஆய்வுகள் என வருகிறபோது இரண்டு சிந்தனைப் பள்ளிகள் இயங்குதளம் கொண்டிருப்பதைக் காணலாம். வ.ரா, தொடங்கி, தொ.மு.சி. ரகுநாதன், பெ.சு.மணி உள்ளிட்டு சமகாலத்தில் சலபதி, ய.மணிகண்டன் வரையான கல்விப்புல ஆய்வுகள் மிகக் காத்திரமானவை. ஆய்வுகள் என்றில்லாவிட்டாலும் நினைவுக்குறிப்புகள், நிகழ்வுக்கோவைகள் எனப் பகிரப்பட்டுள்ள வகையில், ‘என்குருநாதர் பாரதியார்’ நூலெழுதிய கனகலிங்கம், யதுகிரி அம்மாள்.. எனப் பட்டியல் ஒருபுறமும், வெகுமக்கள் தளத்தில் காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி உணர்ச்சி பூர்வமாக பாரதியை விதந்தோதிய வகையில், கம்பனுக்கு ஒரு கம்பன் கழகம் போல, பாரதிகிருஷ்ணகுமார் இன்னொருபுறமுமாக இந்த சிந்தனைப் பள்ளிகளை அடையாளம் காணலாம். மாறாக, வே.மதிமாறன் எழுதிய பாரதீயஜனதா பார்ட்டி, வாலாசா வல்லவன் எழுதிய திராவிடர் இயக்கப் பார்வையில் பாரதி நூல்கள் முன்வைக்கும் காத்திரமான நுண்அரசியல் கருத்தாடல்களும் பகைமுரண் துலங்கல்களும் கவனத்தில் கொள்ளவேண்டியவையே.

முக்கிய வார்த்தைகள்:
நட்பு முரண், பகை முரண், சிந்தனைப்பள்ளி, அல்புனைவு, தீயர்.

துணைநூற்பட்டியல்:
[1] குருசாமி.ம.பொ, கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள், தமிழ்ப் பல்கலைக் கழகம், 1987
[2] வாலாசாவல்லவன், திராவிடர்இயக்கப் பார்வையில் பாரதி, நிகர்மொழிவெளியீடு,2018
[3] கனகலிங்கம், என் குருநாதர் பாரதியார் ,மூப்பனார் அறக்கட்டளை,கும்பகோணம் ,1931
[4] யதுகிரி அம்மாள் ,பாரதி நினைவுகள், சந்தியா பதிப்பகம், 2019
[5] மதிமாறன். வே. பாரதீயஜனதா பார்ட்டி, அங்குசம் பதிப்பகம், 2013