தேவாரப்பாடல் பாடப்பெற்ற நடுநாட்டுத்தலங்கள் அவற்றின் தல விருட்சங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2022 by IRJTSR Journal
Volume-4 Issue-1
Year of Publication : 2022
Authors : T.Nimalan


Citation:
MLA Style: T.Nimalan, Thevarapadal padapetra nadunattu thalangal avatrin thala virutchangal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V4.I1 (2022): 35-46.
APA Style: T.Nimalan, Thevarapadal padapetra nadunattu thalangal avatrin thala virutchangal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v4(i1), 35-46.

சுருக்கம்:
சைவ சமய கடவுளான சிவப்பெருமானின் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படும். தேவாரங்கள் பதிக வடிவில் பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டதாகும். தேவாரப்பாடல் பாடப்பெற்ற திருத்தலங்கள் என்பவை சைவசமய குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் ஆகிய இருவரும் ஏழாம் நூற்றாண்டிலும் சுந்தரர் எட்டாம் நூற்றாண்டிலும் தாம் இயற்றிய தேவாரப்பாடல்களில் பாடிய 276 சிவத்தலங்கள் ஆகும். இத்தலங்களில் உள்ள சிவனைப் பற்றி பத்து பாடல்கள் கொண்ட பதிகங்களாக ஒருவரோ, இருவரோ, மூவரோ பாடல்களை பாடியுள்ளனர். தேவாரப்பாடல் பாடப்பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாட்டு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாட்டு காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் உள்ள 276 சிவன் கோயில்கள் அடங்கும்.

முக்கிய வார்த்தைகள்:
தேவாரப்பாடல்கள், நடுநாட்டுத்தலங்கள், தல விருட்சங்கள், கொன்றை மரம், வன்னி மரம், ஆலமரம், செண்பக மரம், கல்லால மரம், வெள்ளை எருக்கஞ்செடி, நாவல்மரம், புன்னை மரம், வில்வமரம், மருத மரம், மூங்கில்மரம், பாதிரிமரம், பனை மரம், மகிழமரம்.

துணைநூற்பட்டியல்:
[1] ஸ்ரீரங்கம் பிரசன்னா, (2020). சம்பந்தர் தேவாரம். சென்னை: அமராவதி பதிப்பகம்.
[2] நடராஜன், பி.ரா. (2019). திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம். சென்னை: உமா பதிப்பகம்.
[3] முனைவர் சுப்பிரமணியன், ச.வே. (2015). பன்னிரு திருமுறை. சென்னை: மணிவாசகர் நூலகம்.
[4] கணபதி பிள்ளை, (2002). தேவாரம் திருமுறை – திரட்டு. சென்னை: மணிமேகலை பிரசுரம்.
[5] இளையபெருமாள், இரா. (2019). பலன் தரும் பதிகங்கள். சென்னை: சகுந்தலை நிலையம்.
[6] சுவாமி சிவராம்ஜி, (2012). திருமுறை திருத்தலங்கள். சென்னை: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்.
[7] கயல்விழி, மு. பத்துப்பாட்டில் விருட்சங்கள், தமிழ் ஆய்வு ஆராய்ச்சியின் சர்வதேச நடுவர் இதழ் (ஐ.ஆர்.ஜே.டி.எஸ்.ஆர்.), தொ2.வெ2., (2020), 58-71.
[8] முனைவர் பரணி, சு. கலித்தொகையில் சிவத்தொன்மம், தமிழ் ஆய்வு ஆராய்ச்சியின் சர்வதேச நடுவர் இதழ் (ஐ.ஆர்.ஜே.டி.எஸ்.ஆர்.), தொ3.வெ2., (2021), 60-63.
[9] முனைவர் தனலெட்சுமி, க. நற்றிணை பாடல்களில் வரும் ஊரின் சிறப்புகள், தமிழ் ஆய்வு ஆராய்ச்சியின் சர்வதேச நடுவர் இதழ் (ஐ.ஆர்.ஜே.டி.எஸ்.ஆர்.), தொ2.வெ4., (2020), 76-80.