சுருக்கம்:
இந்துப் பண்பாட்டு வரலாற்றில் இந்துக்களின் மருத்துவப் பாரம்பரியத்துக்கும் தனித்த இடமுண்டு. நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாதவைகளாகும். ஒவ்வொரு மனித சமுதாயமும் தனக்கென ஒரு மருத்துவ அமைப்பு முறையைக் கொண்டுள்ளது. இந்துக்களைப் பொறுத்தவரையில் ஆயர்வேதம், சித்த மருத்துவம் என இருபெரும் அறிவுப்புலங்களாக வளர்ச்சியுற்றது. மிகப்பழமையான மருத்துவமுறை என ஆயர்வேத மருத்துவ முறையைக் குறிப்பிடுவர். தென்னிந்திய மரபோடு குறிப்பாக தமிழகத்தின் பதினெண் சித்தர் மரபோடு தொடர்புற்று வளர்ந்த மருத்துவப் புலமாக சித்த மருத்துவம் விளங்குகின்றது. சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமாகும். தொன்மையுள் தொன்மையான இந்தியப் பெருநாட்டில் அண்மைக்காலம் வரை வெகுவாக வழங்கிவந்த இம்மருத்துவ முறை, இந்துக்களுக்கேயுரிய தனிச்சிறப்பு வாய்ந்தது. பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ்மொழியில் உருவாக்கித் தந்துள்ளனர். உண்மைத் தவநெறியில் பிறழாது உன்னதநிலையில் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் அருள்ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். அவர்கள் கூற்றுக்கள் அனுமானங்கள் அல்ல. மறுக்கமுடியாத அனுபவ உண்மைகள், நாளுக்கு நாள் மாறக்கூடியவை அல்ல: நாள் எல்லைக்குள்ளும் நாழிகை வரையறைக்குள்ளும் தீர்க்கக் கூடியவை. நவீன மருத்துவ வளர்ச்சிக்கெல்லாம் முன்னோடி தமிழ்ச்சித்தர்கள் கண்ட இலக்கியங்களே. அந்தவகையில், சித்த மருத்துவப் பாரம்பரியத்துக்கு ஒளியூட்டிய பெருமையுடையவராக தேரையர் என்னும் சித்தர் திகழ்கின்றமையானது அடையாளங் காணப்பட்ட நிலையில், இவ்வாய்வுக் கட்டுரையானது அமைந்துள்ளது. இவ்வாய்வுக் கட்டுரையானது முழுக்க விபரண ஆய்வு முறையியலுக்கு அமைவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. தேவையான சந்தர்ப்பங்களில் பெறப்பட்ட தரவுகள் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையியலுக்கு உட்படுத்தி முடிவுகள் பெறப்பட்டன. இன்றைய மருத்துவ உலகில் பயில்நிலையிலுள்ள மருத்துவ முறைகள் தேரையருடைய பனுவல்களில் சொல்லப்பட்டுள்ளதை அடையாளப்படுத்துவதனூடாக சித்த மருத்துவத்துறையில் தேரையரின் வகிபாகம் காத்திரமானது என்பதை வெளிப்படுத்த விழைவாதாகவும் இக்கட்டுரை அமைந்துள்ளது.
|
துணைநூற்பட்டியல்:
[1] இலட்சுமண நாயகர், தேரையர் வைத்தியம் 1001, சென்னை, சாரதா புத்தகசாலை, 1925.
[2] முகம்மது அப்துல்லா சாயபு, ஹக்கீம் பா., (1973), இராஜ வைத்திய மகுடமென்னும் தேரையர் அருளிச்செய்த யமக வெண்பா (விருத்தியுரையுடன்), (வெளியீடு கு.வி).
[3] தியாகராசன்,ஆர்., தேரையர் வெண்பா மூலமும் உரையும், சென்னை, சித்த மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்குழு, 1974.
[4] இராமநாதன், பொன்., சித்தமருத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், யாழ்ப்பாணம், ஸ்ரீ சாயி ஒவ்செற் பிறிண்டேர்ஸ், கோண்டாவில், 2008.
[5] Sambasivam Pillai,V.T., Siddha Medical Dictionary Vol. 04 – Part 02, Chennai – 106, Dept. of Indian Medicine Homoeopathy, 1998.
[6] தியாகராசன்,ஆர்., தேரையர் மகா கரிசல் மூலமும் உரையும், சென்னை, சித்த மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்குழு, .1974
[7] இராமநாதன்.பொன்., மருத்துவ நோக்கில் சித்தர்களும் தத்துவ சிந்தனைகளும், கைதடி, சித்த மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2009.
|