பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சமண சமயச் சிந்தனைகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2021 by IRJTSR Journal Volume-3 Issue-1 Year of Publication : 2021 Authors : Dr.C.Ravisankar
|

|
Citation:
MLA Style: Dr.C.Ravisankar " Patinen Kilkkanakku Nulkalil Samana Samayach Sintanaikal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V3.I1 (2021): 69-73.
APA Style: Dr.C.Ravisankar, Patinen Kilkkanakku Nulkalil Samana Samayach Sintanaikal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v3(i1), 69-73.
|
சுருக்கம்:
சமயம் இன்று அனைத்து நாடுகளிலும் தனக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன. இந்தியாவில் பல சமயங்கள் இருந்தாலும் இன்று இந்து, முஸ்லீம், கிறித்துவம் பெரும் பான்மையான மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தொடக்க காலங்களில் சமணம் பௌத்தம் போன்ற சமயங்கள் பெரும் செல்வாக்கைப் பெற்று இருந்துள்ளன. அந்த வகையில் தமிழ்
நாட்டில் 6ஆம் நூற்றாண்டில் களப்பிரர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் சமண சமயம் தமது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொண்டிருந்தன. அந்தக் காலத்தில் உருவான இலக்கியங்களில் சமணத்தாரின் கொள்கைகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சமணர்கள் தமிழ் நாட்டில் பல ஆண்டுகள் சிறந்து விளங்கினர் என்பதை தமிழ்ச் சரித்திரம் பகுதியிலே இருண்ட காலம் என்று கூறப்படும் களப்பிரர் காலம் சமணம் ஓங்கித் திகழ்ந்த காலம் எனலாம். களப்பிரர் முதலில் பௌத்தராக இருந்து பின்னர் சமண சமயர்கள் ஆயினர் என்ப. இக்காலப் பகுதியை அடுத்துப் பல ஆண்டுகள் சமண சமயம் தலை சிறந்து விளங்கியது என்று சமணமும்இ தமிழும் குறிப்பிடுகிறது. அந்த வகையில் தமிழ் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த சமணம் தமது கொள்கைகளைத் தமிழ் இலக்கிய நூல்களில் வெளிப்படுத்தியுள்ளது அவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.
|
முக்கிய வார்த்தைகள்: சமண சமயக் கொள்கைகளும் பிரிவும், சமணர்களும் தமிழ்ப் பணியும், பதினெண் கீழ்க்கணக்கில் சமணக் கொள்கை, வினையின் வலிமை, சுபாவ வாதம், இசை நாடகம் விரும்பாமை, மயிர்களைதலும், ஆடைகளைதலும்.
|
துணைநூற்பட்டியல்:
[1] நாலடியார், பாடல் எண்,101
[2] திருக்குறள், 380
[3] நாலடியார், பாடல் எண் 112
[4] நான்மணிக்கடிகை, பாடல் எண், 76
[5] ஆசாரக்கோவை, பாடல் எண், 10
[6] ஆசாரக்கோவை, பாடல் எண், 11
|