இருபா இருபஃது காட்டும் அவத்தைகளின் நிலை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-2
Year of Publication : 2025
Authors : Subala. K., Dr.Geetha.M


Citation:
MLA Style: Subala. K., Dr.Geetha.M, "The State of Suffering as Depicted in Irupa Irupathu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I2 (2026): 76-83.
APA Style: Subala. K., Dr.Geetha.M, The State of Suffering as Depicted in Irupa Irupathu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i2), 76-83.

சுருக்கம்:
உலகில் முதன்மையும் முழுமையும் வாய்ந்து விளங்கி வருவது சைவ சமயம். சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படுபவன் பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவபெருமான் ஆவான். இச்சமயத்தின் கொள்கைகளும் கோட்பாடுகளும் சைவ சித்தாந்தம் என்றழைக்கப்படுகிறது. சிந்துவெளி நாகரிகத்திற்கும் முற்பட்ட சைவ சமயம், அநாதி பொருளாகக் கால எல்லைகளைக் கடந்து நிற்கின்றது. சித்தாந்த சைவசெந்நெறி என்று போற்றப்படும் இதன் தத்துவங்களைப் பதினான்கு மெய்கண்ட சாத்திர நூல்கள் விளக்குகின்றது. அப்பதினான்கு நூல்களுள் மெய்கண்ட தேவ நாயனாரின் மாணவரான அருணந்தி சிவாச்சாரியார் அருளிய இருபா இருபஃது நூல் சித்தாந்த நுண்பொருளைத் திறம்பட ஆராய்ந்து உணர்த்துவதைக் காணமுடிகின்றது. சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் என்ற மூன்று உண்மை பொருள்களை ஆராய்கின்றது. பதியான இறைவனிடத்தில் ஆன்மாக்கள் சென்றடைதலே வீடுபேறு எனப்படும். பாசத்தளைகளால் கட்டுண்ட பசுக்கள் அதனை விடுத்து இறைவனை அடைவதற்கு அவத்தைகள் உதவுகின்றன. கேவல நிலையிலிருக்கும் உயிரானது ஐந்து அவத்தைகளின் தொழிற்படுதல் காரணமாக வீடுபேற்று நிலையினை அடைகின்றது. அவ் அவத்தைகள் ஐந்தும் உயிர்களிடம் தொழிற்படுதலைப் பற்றி ஆராயமுற்படுகின்றது இக்கட்டுரை. 'இருபா இருபஃது காட்டும் அவத்தைகளின் நிலை' என்னும் தலைப்பிலான இக்கட்டுரை 'முன்னுரை, இருபா இருபஃது, முப்பொருள் உண்மை, உயிர்க்காட்சி, ஐந்து அவத்தைகள், உயிரியல்புகள் ஆகிய துணைத்தலைப்புகளின் கீழ் ஆராயப்பட்டுள்ளது. கட்டுரையின் நிறைவாக முடிவுரை வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
இருபா இருபஃது, அவத்தை, பேருறக்கம், உயிர்ப்படங்கல், ஆன்ம இயல்பு.

துணைநூற்பட்டியல்:
[1] அருணை வடிவேலு முதலியார், சி. சிவஞானபோதத் திருநெறியுரை. பேரூரதீன வெளியீடு, கோயம்புத்தூர் - 641 010, மூன்றாம்பதிப்பு - 2015.
[2] காஞ்சி நாகலிங்க முதலியார் (உ.ஆ). மெய்கண்ட சாத்திரம் மூலமும் உரையும். திருவாவடுதுறை ஆதீனம், மயிலாடுதுறை - 609 803, முதற் பதிப்பு - 1897.
[3] சுப்புரெட்டியார், ந. சைவ சித்தாந்தம் ஓர் அறிமுகம். திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை - 600 018, முதற் பதிப்பு - 2001.
[4] தருமை ஆதீனம் (ப.குழு). பன்னிரு திருமுறைகள் (முழுவதும்), தருமை ஆதீனம், ஞானசம்பந்தம் பதிப்பகம், மயிலாடுதுறை - 609001, முதற் பதிப்பு - 2023.
[5] பொன்னையா.ஆ.(உ.ஆ). இருபா இருபஃது (பொருளுரையும் விரிவுரையும்). திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட்., சென்னை - 600 018, முதற் பதிப்பு - 2003.
[6] மூர்த்தி, அ.கி. சைவ சித்தாந்த அகராதி.தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை - 600 018, முதற் பதிப்பு - 1998.