தொல்காப்பிய உரையாசிரியர்களும் அகப்பாட்டு உருவமைப்புக் கூறுகளும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-2
Year of Publication : 2025
Authors : P. Shankari, Dr. P. Jaiganesh


Citation:
MLA Style: P. Shankari, Dr. P. Jaiganesh, "A Perspective on Tolkāppiyam commentators and the structural elements in Akam poetry" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I2 (2026): 66-75.
APA Style: P. Shankari, Dr. P. Jaiganesh, A Perspective on Tolkāppiyam commentators and the structural elements in Akam poetry, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i2), 66-75.

சுருக்கம்:
உலகில் உள்ள காட்சிப்பொருள், கருத்துப் பொருள்களை வகைபடுத்தி மூவகையாக முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எனவாழ்க்கை முறையினை உரைப்பது பொருள் இலக்கணம். தொல்காப்பியர்தம் நூலில் இவற்றைப் பற்றிவிரித் துரைத்துள்ளார். பல்வேறு அரசியல் மற்றும் இலக்கணமரபு மாற்றங்களுக்குப்பின் உரையாசியர்கள் விளக்கம் கூறுகின்றனர். அதனால், உரையாசிரியர்கள் தொல்காப்பியரின் காலநிலைமையை நன்கு உணரும்வாய்ப்பினைத்தம் காலத்துப் பெற்றவர்கள் அல்லர். தொல்காப்பியத்திற்கு உரைஎழுதிய ஆசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவர் இளம்பூரணர். இவர்காலத்தில் வழங்கியமரபுகளைக் கருத்தில் கொண்டு பொருள் என்பதற்கு முதல், கரு, உரிஎன்கிறார். நச்சினார்க்கினியர் தண்டியலங்காரத்திற்கு பின் இயற்றியதனால் பொருள் என்பதற்கு அறம், பொருள், இன்பம், வீடு என்றுரைத்து அவற்றின் உட்பொருளாகக் கூறுவதன் வழி மாற்றத்தினை அறியலாம். உரையில் முதற் பொருளில் முதன்மை பெறும் நிலப்பகுதியின் பெயர்களுக்கு விளக்கம் தரும் போது குறிப்பிட்ட நிலத்தில் தோன்றும் மலர்களின் பெயரால் நிலத்திற்கும் பின்பே ஒழுக்கமானது என்றும் நச்சினார்க்கினியர் ஒழுக்கத்தினை முதன்மை படுத்து வதற்கானகாரணம் அறத்தினை முதலில் கொண்டேதன் உரையினைவடிவமைத் திருப்பதனை அறியலாம். இவ்வாறாக உரையாசிரியர்களின் வழிமுப்பொருள்களின் தேவைகளையும் அவர் தம் தேடல்களையும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
தொல்காப்பியர், உரையாசியர்கள், முப்பொருள்கள், தேவைகள், தேடல்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] அடிகளாசிரியர், தொல்காப்பியம்பொருளதிகாரம்இளம்பூரணர்உரை (செய்யுளியல்நீங்கலாக). தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2008.
[2]சிவலிங்கனார்.ஆ, தொல்காப்பியம்பொருளதிகாரம்அகத்திணையியல்உரைவளம், உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம், 2015.
[3] அறவாணன், க.ப. அற்றைநாட்காதலும்வீரமும். பாரிநிலையம், சென்னை, 1978.
[4] சுப்புரெட்டியார், ந. டாக்டா். அகத்திணைக்கொள்கைகள். பாரிநிலையம்,சென்னை, 1981.
[5] சுப்புரெட்டியார், ந. டாக்டா். தொல்காப்பியம்காட்டும்வாழ்க்கை. பழனியப்பாபிரதர்ஸ், சென்னை,2002.
[6] மாணிக்கம், வ.சுப. தொல்காப்பியப்புதுமை. செல்விபதிப்பகம், காரைக்குடி, 1958.
[7] மாணிக்கம், வ.சுப. தமிழ்க்காதல். மெய்யப்பன்பதிப்பகம், சிதம்பரம், 2005