| விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி தொடர்பான கோட்பாடுகளும்அதன் நடைமுறைப் பொருத்தப்பாடும் | ||
![]() |
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) © 2026 by IRJTSR Journal Volume-8 Issue-2 Year of Publication : 2025 Authors : Paramadhayalan Madhusan |
|
| Citation: MLA Style: Paramadhayalan Madhusan, "Theories regarding education for students with special needs and their practical applicability" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I2 (2026): 56-65. APA Style: Paramadhayalan Madhusan, Theories regarding education for students with special needs and their practical applicability, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i2), 56-65. |
||
| சுருக்கம்: அனைவருக்கும் கல்வி என்ற எண்ணக்கருவோடு இணைந்த வகையில் விசேட கல்வி, விசேட தேவைசார் கல்வி, உள்ளடங்கல் கல்வி ஆகிய எண்ணக்கருக்களும் விருத்தி கண்டுள்ளன. இவ்வாய்வானது மட்டக்களப்புமாவட்டத்தை மையமாகக் கொண்டமைந்துள்ளதோடு விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கோட்பாடுகளையும் பாடசாலை மட்டத்தில் அதன் நடைமுறை பொருத்தப்பாட்டினையும் அறிந்து கொள்வதனையும் நோக்கமாகக் கொண்டு அளவை நிலை ஆய்வாக இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா கல்வி வலயத்தில்விசேட கல்வி அலகுகளைக் கொண்ட ஐந்து பாடசாலைகள் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இப்பாடசாலைகளிலிருந்து அனைத்து அதிபர்களும் உப அதிபர்களும் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும் இடைநிலைப்பிரிவு ஆசிரியர்களும், விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்களும், விசேட கல்விக்கான ஆலோசகரும் நோக்க மாதிரியின் அடிப்படையில் ஆய்வு மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு இவர்களிடமிருந்து வினாக்கொத்து,நேர்காணல்,அவதானம் முதலான ஆய்வுக் கருவிகளினூடாக தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு ஆய்வு நோக்கங்களின் அடிப்படையில்; கலப்பு ஆய்வு அணுகுமுறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வின் முடிவுகளாக விசேட கல்வி அலகுகளுக்கான வள ஒதுக்கீடு இன்மை, விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பொருத்தமான கற்றல் சூழல் இன்மை, விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பொருத்தமான தளபாட வசதியின்மை, அணுகல் வசதிகள் பொருத்தமின்மை, விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கோட்பாடுகள் வெறுமனே கோட்பாடுகளாகவே அமைந்துள்ளமை, சமூக ஆதரவு குறைவாக உள்ளமை முதலானவை இனங்காணப்பட்டதுடன், இதற்கான பரிந்துரைகளாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அந்நிறுவனங்களுடன் சுமூகமான தொடர்பினை பேணுதல்,க.பொ.த உயர்தர மாணவர்களின் செயற்றிட்டங்களை விசேட கல்வி மாணவர்களுக்கான வசதிகளாக பயன்படுத்திக் கொள்ளல், விசேட கல்வி தொடர்பான கோட்பாடுகளின் பிரயோகம் தொடர்பில் முறையாக அறிக்கைகளை பேணச் செய்தல், தொடர்ச்சியான மேற்பார்வைக்குட்படுத்துதல், விசேட கல்வி தொடர்பில் சமூகத்திடையே விழிப்புணர்வினை மேற்கொள்ளுதல் முதலானவைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. |
||
| முக்கிய வார்த்தைகள்: விசேட கல்வி, உள்ளடங்கல் கல்வி, சுற்றுநிரூபங்கள், அணுகல் வசதி. |
||
| துணைநூற்பட்டியல்: [1] அருள்மொழி, செ.(2017), கற்பித்தலுக்கான உளவியல், துர்க்கா அச்சகம், கொக்குவில், மட்டக்களப்பு. [2] தனபாலன், பா.(2019), கல்விப் பிரயோக உளவியல், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. [3] இலங்கை திறந்த பல்கலைக்கழகம், (2010). விசேட தேவைகள் சார் கல்விக்கான பல்துறை அணுகுமுறைகள், நாவல, நுகேகொட. [4] கல்வி அமைச்சு (2024), பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்கமைப்பு பற்றிய சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டுதல்கள், இசுருபாய, பத்தரமுல்ல. [5] கல்வி அமைச்சு (2024), விசேட தேவைகளுடன் கூடிய [6] மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் செயல்பாடு மற்றும் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இலகுவாக்குவதற்காக வெளியிடும் விசேட வசதிகள் வழங்கும் சுற்றறிக்கை மற்றும் ஆலோசனை கையேடு, இசுருபாய, பத்தரமுல்ல. [7] Arif Fakhrudin Maulana (2023), Systematic Literature Review The Role of Educational Facilities and Infrastructure for Children with Special Needs at School, link [8] Khushaboo and Kavita Dua (2022), Children with Special Needs, link [9] Mohd Faizul Ismail et al (2021), Provision of Students with Disabilities Facility at Public Universities: A Case Study, link [10] Ministry of social welfare.(2003). National policy on disability for Srilanka; Sethsiripaya Battaramulla SriLanka. Retrieved from: link |
||

