இஸ்லாத்தின் பால் நிலை சமத்துவமும் நீதியும் ஓர் பன்முகப் பார்வை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-2
Year of Publication : 2025
Authors : Muhammad Thambi Muhammad Rizvi


Citation:
MLA Style: Muhammad Thambi Muhammad Rizvi, "Gender Equality and Justice in Islam: A Multidimensional Perspective" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I2 (2026): 37-49.
APA Style: Muhammad Thambi Muhammad Rizvi, Gender Equality and Justice in Islam: A Multidimensional Perspective, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i2), 37-49.

சுருக்கம்:
இருபாலார் என்பது ஆண் பெண் என்ற இரு நிலைகளைக்குறிக்கிறது.அந்நிலை மனித இனத்தில மாத்திரமின்றி இறைவனின் ஏனைய படைப்புகளிலும் காணப்படுகின்றன.உலகில் மனித இனமே மிக அழகான அமைப்பியலுடைய உயர்நிலை படைப்பாகும். “நிச்சயமாக நாம் மனிதனை மிக அழகான அமைப்பில் படைத்தருக்கின்றோம்”(95:04)அதற்குள் ஆண் பெண் என்ற பால் வேறுபாடு உயர் நிலை தாழ் நிலை குறியீடல்ல.மாறாக இருபாலாரும் சமபாதி சரிபாதி என்பதே இஸ்லாம் சமயத்தின் நிலைப்பாடாகும். இஸ்லாத்தின் போதனையில் ஆணை உயர்த்தியும் பெண்னைத் தாழ்த்தியும் அல்லது பெண்னை உயர்த்தியும் ஆண்வர்க்கத்தை தாழ்த்தியும் ஒரு போதும் காண முடியவில்லை.அய்யாமுல் ஜாஹிலிய்யா என்ற இஸ்லாம் மார்க்கம் அறேபியாவில் தோன்று வதற்கு முன்னரான அறியாமை மக்கள் வாழ்ந்த காலப்பகுpயில் குறிப்பாக இருன்ட ஐரோப்பா காலப்பகுதியில் பெண்கள் உயிரோடு புதைக்கப்பட்ட,தீண்டத்தகாத,ஒதுக்கப்பட்ட பாலிணமாக கையாளப்பட்ட காலத்தில், இஸ்லாத்தின் வருகை அவர்களுக்கு விடுதலையும் பாதுகாப்பும் உரிமையும் வழங்கி, பெண்களை கௌரவப்படுத்தி சமத்துவம்,நீதி என்ற கோட்பாட்டை முன்வைத்தது.ஆன்மீகம்,கல்வி,பொருளாதாரம்,குடும்ப வாழ்வு,சமூக வாழ்வு என அனைத்திலும் ஆண்களுக்கு சமமானதும்,பெண்களது உடல் நிலை,உளநிலை, இயல்பு நிலை இவைகளுக்கு ஏற்புடையதுமான கடமைகளையும் உரிமைகளையும் வழங்கியது.சமத்துவம் நீதி என்பன இரு வேறுபட்ட பதங்களாகும். சமத்துவம் (நுஙரயடவைல) என்பது ஒரு விடயத்தில் எல்லோருக்கும் சம நிலைத் தன்மை வழங்கப்படுவதை அல்லது பேனுவதைக்குறிக்கும்.நீதி (துரளவiஉந)என்பது அச் சமநிலை விதிமுறைகளுக்கு மத்தியில், ஒரு விடயம் பொதுச்சட்ட விதியாக இருக்கத்தக்கதாகஆண், பெண் இரு பாலாருடைய இயல்பு, அமைப்பு, உணர்வு, தண்மை, பண்பு, வேறுபாடுகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை, சட்டம், அனுமதி, தடை எனலாம்.இஸ்லாம் பெண்களை தாழ்வாக கருதுகிறதா? அது ஆணாதிக்கத்தை வழியுருத்துகிறதா? பெண்களை இரண்டாம்பட்சமாகவா நோக்குகிறது? என்பன போன்ற வினாக்கள் இங்கு ஆய்வுப் பிரச்சினையாக கருதப்படுகிறது.இஸ்லாத்தின் பால்நிலை சமத்துவம் நீதி பற்றிய கருத்தயில்களை வெளிக்கொணருவதும் இது குறித்த ஏனையவர்களது தப்பபிப்பிராயங்களை களைவதும் ஆய்வின் நோக்கமாகக் கொண்டு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் இக்கட்டுரை சமரப்பிக்கப்படுகிறது. குறிப்பாக அல் குர்ஆனிலிருந்து இஸ்லாத்தில் ஆண்,பெண் இரு பால் சமத்துவம், நீதி பற்றிய சிந்தனைகளை இக்கட்டுரையில் முன்வைப்பதோடு,குறிப்பாக ஆண்,பெண் இருபால் சமத்துவம் நீதி பற்றிய அல் குர்ஆனிய கருத்துக்கள், இஸ்லாமிய திருமண முறைமையில் காணப்படும் இரு பால் சமத்துவ நடைமுறைகள் மற்றும் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கையில் காணப்படும் இருபால்நீதி சமத்துவம் பற்றிய தெளிவுகளை இங்கு இவ் ஆய்வு வெளிக்கொணருகிறது.இதற்கான முதற்தர தரவுகளாக இஸ்லாமிய மார்க்க மூல நூல்களான அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸ_ன்னாவும் இரண்டாம் நிலைத்தரவுகளாக ஏனைய பல நூல்களும்,கட்டுரைகளும் பெறப்பட்டுள்ளதுடன், பன்புசார் ஆய்வு முறையைக்கையாண்டு இவ்ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் பால்நிலை சமத்துவம்,நீதி பற்றிய பார்வை நேர்மையானதும் தெளிவானதும் என்பதை முடிவாக இங்கு இக்கட்டுரை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது.

முக்கிய வார்த்தைகள்:
இயல்பு, சமத்துவம், தப்பபிப்பிராயம், நீதி, பால்நிலை.

துணைநூற்பட்டியல்:
[1] ஆயnயெnஇ ஆ.யு (1991)இ ஐளடயஅiஉ நுஉழழெஅiஉள வுhநழசல யனெ Pசயஉவiஉநஇ டுயாழசநஇஆயு pரடிடiளாநசள
[2] ஆழாயஅநன ர்யஅனைரடடயாஇ(னே)இவுhந ஆரளடiஅ றுழஅயnஇஐளடயஅயடியனஇனுய’றயா யுஉயனநஅல.
[3] ஆழாயஅநன ர்யளயn (னே)இ வுhயகளநநசறய டீயலயn ஆரகசயவாயவாரட ஞரசயnஇ டீநசைரவஇ னுசு pரடி.
[4] ளுயலலயன ஞரவடிஇ (1994)இ குi டடையடடை ஞரசஙnஇ டீநசைரவஇ னுயசரளாளாரசரங pரடி.
[5] ஆராயஅஅயன ஞரவடிஇ(2000)இ ஐளடயஅ வாந ஆளைரனெநசளவழழன சுநடபைழைn னுiடாiஇடீஐP Pரடி.
[6] அல் குர்ஆன் மொழி பெயர்ப்பு, (2002) சவூதி அறேபியா,மதீனா மன்னர் பஹ்த் குர்ஆனிய அச்சகம்
[7] அப்துஸ் ஸமது, (2004),இஸ்லாமிய ஷரீஆவில் பெண்களின் நிலை,சென்னை,இக்ரா பதிப்பகம்.
[8] அமீன்.எம்.ஐ.எம்.(2008), இஸ்லாமிய குடும்ப வாழ்வு,ஹெம்மாத்துகம,அல்ஹஸனாத் பதிப்பகம்.
[9] மன்ஸ_ர்,எம்.ஏ.எம். (2006),முஸ்லிம் பெண்களுக்கான சில விளக்கங்கள், பேருவளை,கலாம் பதிப்பகம்.
[10] முகம்மது அல் கஸ்ஸாலி (2002),இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள்,சென்னை, இக்ரா பதிப்பகம்.