காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதியில் நடையியல் கூறுகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal
Volume-8 Issue-1
Year of Publication : 2025
Authors : Barathe. S, Prof. S. Ravi


Citation:
MLA Style: Barathe. S, Prof. S. Ravi, "Stylistic elements in Karaikkal Ammaiyar’s Arputha Thiruvandathi" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I1 (2026): 54-62.
APA Style: Barathe. S, Prof. S. Ravi, Stylistic elements in Karaikkal Ammaiyar’s Arputha Thiruvandathi, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i1), 54-62.

சுருக்கம்:
தமிழ் பக்தி இலக்கிய மரபில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி, அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்ட முதல் நூலாகக் கருதப்படுகிறது.இந்நூல் சிவபெருமானின் பெருமைகளையும், அடியாரின் ஆழ்ந்த பக்தி அனுபவத்தையும் மொழிநடையின் வழியாக வெளிப்படுத்துகிறது.மொழி, இலக்கியக் கலைஞனின் எண்ணங்களையும் உணர்வுகளையும் வடிவமைக்கும் முதன்மை கருவியாக விளங்குவதால், அதன் பயன்பாடு இலக்கியச் சிறப்பை தீர்மானிக்கிறது.இவ்வாய்வுக் கட்டுரை அற்புதத் திருவந்தாதியில் காணப்படும் நடையியல் கூறுகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.குறிப்பாக, அந்தாதி அமைப்பு, தொடைகள், வண்ணங்கள் ஆகியவை தொல்காப்பியக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.இதன் மூலம், காரைக்காலம்மையாரின் மொழிப்புலமையும், பக்தி உணர்வை அழகிய நடையியல் வடிவங்களில் வெளிப்படுத்திய திறனும் தெளிவுபடுத்தப்படுகின்றன.இவ்வாய்வு, பக்தி இலக்கியத்தின் மொழிநடைச் சிறப்பை விளக்கும் ஒரு முயற்சியாக அமைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
காரைக்காலம்மையார், அற்புதத் திருவந்தாதி, நடையியல், தொடை, வண்ணம், தொல்காப்பியம்.

துணைநூற்பட்டியல்:
[1] காரைக்காலம்மையார், அற்புதத் திருவந்தாதி, ஸ்ரீ காசி மடம் – திருப்பனந்தாள் வெளியீடு, திருப்பனந்தாள், 1949.
[2] சுந்தரமூர்த்தி.இ., நடையியல் அறிமுகம், அன்பு நூலகம், சென்னை, 1978.
[3] சுந்தரமூர்த்தி.இ., நடையியலும் இலக்கியமும், நியூ செஞ்சுரி பதிப்பகம், 2019.
[4] சுப்புலட்சுமி.செ., காரைக்கால் அம்மையார் பாடல்கள் ஓர் ஆய்வு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2010.
[5] தொல்காப்பியம் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2013.
[6] நடராசன். தி. சு., தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும், நியூ செஞ்சுரி பதிப்பகம், 2016.
[7] நுஃமான்.எம்.ஏ., மொழியும் இலக்கியமும், காலச்சுவடு வெளியீடு, நாகர்கோயில், 2022.