| சோழர்காலச் சமூக–மதப்பிண்ணனியில் தேவதாசிகளின் கலைப் பணி–ஓர் ஆய்வுப் பார்வை |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2026 by IRJTSR Journal Volume-8 Issue-1 Year of Publication : 2025 Authors : Dr. Thakshayini Paramadevan |

|
Citation:
MLA Style: Dr. Thakshayini Paramadevan, "The Artistic Service of Devadasis in the Socio-Religious Context of the Chola Period: An Analytical Perspective" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V8.I1 (2026): 30-39.
APA Style: Dr. Thakshayini Paramadevan, The Artistic Service of Devadasis in the Socio-Religious Context of the Chola Period: An Analytical Perspective, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v8(i1), 30-39.
|
சுருக்கம்:
சோழர் ஆட்சி காலம் (9–13ஆம் நூற்றாண்டுகள்) தென்னிந்திய வரலாற்றில் கலை சமயம் மற்றும் சமூக அமைப்புகள் சிறப்பாக வளர்ச்சியடைந்தகாலமாகும். இக்காலத்தில் கோயில்மையப் படுத்தப்பட்ட சமூக அமைப்புவலுவடைந்தது. சைவவைணவசமயப்பரப்புகளின் வளர்ச்சியோடு கோயில்கள் ஆன்மீகத்தளமாக மட்டு மன்றி, பொருளாதார மற்றும் கலைமையங்களாகவும் விளங்கின. இந்நிலையில் தேவதாசிகள் (தேவடியார்கள்) கோயில் அமைப்பின் ஒரு அங்கமாக இருந்துசமயச்சடங்குகளிலும் கலைநிகழ்வுகளிலும் குறிப்பிடத்தக்கபங்காற்றினர். தேவதாசிகள் கோயிலில் தினசரிவழிபாடுகள் திருவிழாக்கள் மற்றும் உற்சவங்களின்போதுஇசை–நடனச்சேவையை ஆற்றினர். இவர்களின் கலைப்பணி வெறும் பொழுதுபோக்காக அல்லாது தெய்வத்திற்கான அர்ப்பணிப்பாகவும், பக்திப்பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவும் அமைந்தது. சோழர்காலகல் வெட்டுகள் தேவதாசிகளுக்கு நிலங்கள் பொருளாதார ஆதரவு மற்றும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதை வெளிப்படுத்துகின்றன. இதன் மூலம் அவர்களின் சமூகப்பங்கு மற்றும் கலைத்திறமை அரசால் அங்கீகரிக்கப்பட்டதைக்காண முடிகிறது.
மேலும் சோழர் காலக்கோயில் சிற்பங்கள் நடனக்கரணங்களைப் பிரதி பலிக்கும் கலைச்சான்றுகளாக விளங்குகின்றன. இவைதேவதாசிகளின் நடனமரபு அந்நாளைய நாட்யசாஸ்திரக் கோட்பாடுகளோடு தொடர்புடைய தெனசுட்டுகின்றன. சமூக–மதப்பின்னணியில் தேவதாசிகள் கலைப்பணியை ஆய்வு செய்வது சோழர்காலக்கலை வரலாற்றை மட்டு மன்றி பெண்களின் சமூக நிலை சமயச்சேவை மற்றும் கலை அடையாளத்தைப் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இவ்வாய்வு வரலாற்று ஆவணங்கள் கல்வெட்டுச் சான்றுகள் கோயில் சிற்பங்கள் மற்றும் தொடர்புடைய ஆய்வு நூல்களை அடிப்படையாகக் கொண்டு தேவதாசிகளின் கலைப்பணியை சமூக–மதப்பிண்ணனியில் ஆராய்கிறது.
|
முக்கிய வார்த்தைகள்: தேவதாசிகள் / தேவடியார்கள் கோயில் அமைப்பு, சமயச் சடங்குகள், நடனச்சேவை, இசைமரபு, கல்வெட்டுச்சான்றுகள், கோயில் சிற்பங்கள், பெண்கள் சமூக நிலை.
|
துணைநூற்பட்டியல்:
[1] இரகுராமன். சே. (2006) தமிழர்நடனவரலாறுவானதிபதிப்பகம் சென்னை.
[2] இராசா. பா. (2001) தமிழர் நாட்டிய மரபில் பரதநாட்டியம்,பாவேந்தர்பதிப்பகம்சென்னை.
[3] இராசமாணிக்கர். பா. (1987) தமிழர்கலைகள்,கற்பகம் அச்சகம்சென்னை.
[4] கலாராணி. பா. (2004) தஞ்சை வளர்த்தபரதக்கலைசந்தோஷ்ஆப்செட் பிரிண்டர்ஸ்தஞ்சாவூர்.
[5] கார்த்திகா கணேசன் (1979)காலந்தோறும் நாட்டியகலை, பூபாலசிங்கம் புத்தகசாலைசெட்டித்தெரு கொழும்பு.
[6] சிவசாமி. வி. (2005) பரதக்கலையாழ்ப்பாணம்.
[7] பத்மநாதன். சி.(2006) சோழர்காலத்து கோயில்களும் சமூகமும்,குமரன் பதிப்பகம் கொழும்பு.
[8] மகேந்திரன். சி. (1979) தொன்மைச்சான்றுகள் புலப்படுத்தும்ஆடலமைதி,பூபாலசிங்கம் புத்தகசாலைகொழும்பு.
[9] மகேஸ்வரன். வ.(2011) உருத்திரகணிகையர் கதாசரத்திரட்டுஇந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம்கொழும்பு.
|