குறிஞ்சிப்பாட்டு எனும் பூக்காட்டில் பீர்க்கம்பூ


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-3
Year of Publication : 2025
Authors : M.Andrisha, Dr.J. Penny


Citation:
MLA Style: M.Andrisha, Dr.J. Penny, "Birch flowers in the flower forest called Kurinjipattu" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I3 (2025): 84-87.
APA Style: M.Andrisha, Dr.J. Penny, Birch flowers in the flower forest called Kurinjipattu, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i3), 84-87.

சுருக்கம்:
இயற்கையையும் மனிதவாழ்க்கையும் பிரிக்க முடியாதது. ஏனெனில் இயற்கையின் கருவிலிருந்து தான் மனிதவாழ்வின் சாராம்சம் ஆரம்பமாகிறது. சங்க இலக்கிய இயற்கைப் புனைவுகளில் இடம் பெற்றுள்ள கூறுகளில் ஒன்று அக்காலத்தின் மலர்களின் பெயர்கள். அது மட்டு மின்றி சங்க இலக்கியத்தின் முக்கிய நூல்களில் ஒன்று குறிஞ்சிப்பாட்டு. குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள் குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முக்கியமான மலர் பீர்க்கம்மலர். பீர்க்கம் கொடிமுள் வேலிகளில் படர்ந்து காணப்படும். மழைக்காலத்தில் தலைவியைத்தலைவன் திருமணம் செய்வதாக கூறிப்பிரிகின்றான். மழைக்காலமான பீர்க்கம்பூக்கள் மலரும் காலம் வந்ததால் தலைவன் திருமணம் செய்து கொள்ளும் காலம் வந்ததாக கூறித் தோழித் தலைவியை ஆற்றுப்படுத்துகிறாள். பீர்க்கம்பூ மஞ்சள் நிறம் கொண்டது. தலைவிக்குப்பசலை நோய் தோன்றும் போது நெற்றியில் பீர்க்கம்பூ வின்மஞ்சள் நிறம் தோன்றும். தலைவனைத் தலைவி பிரிந்திருக்கும் போது உடல் மெலிந்து பீர்க்கம்பூ வின் நிறம் உடலில் பரவும். மேற் கண்டவாறு புலவர்கள் தங்கள் திறனைப்பயன்படுத்தி பீர்க்கம்பூ வினைமனிதவாழ்வோடு தொடர்பு படுத்தி இலக்கியம் படைத்துள்ளனர்.

முக்கிய வார்த்தைகள்:
இயற்கை, மனிதவாழ்க்கை, சங்க இலக்கியம், குறிஞ்சிப்பாட்டு, பீர்க்கம்மலர், தலைவி, தலைவன்.

துணைநூற்பட்டியல்:
[1] ஒளைவை. துரைசாமிபிள்ளை, நற்றிணைமூலமும் உரையும், சாரதாபதிப்பகம், முதற்பதிப்பு 2016.
[2]ஒளைவை. துரைசாமிபிள்ளை, ஐங்குறுநூறு மூலமும் விளக்க உரையும், அண்ணாமலைபல்கலைக்கழக வெளியீடு, முதல்பதிப்பு 1957.
[3] நித்தியாஅறவேந்தன், குறிஞ்சிப்பாட்டு உரைவேறுபாடு, நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ் (பி) லிட், முதற்பதிப்பு 2024.
[4]திராவிடமணி.பொ,தமிழ் இலக்கியங்களில் பீர்க்கம்பூ, தமிழ்பண்பாடு மற்றும் இலக்கிய ஆய்விதழ், வெளியீடு30.7.2024.
[5] இளம்பூரணர்(உ.ஆ), தொல்காப்பியம் எழுத்ததிகாரம்,சாரதாபதிப்பகம்,சென்னை.