பாரதியாரின்எங்கள் காங்கிரஸ் யாத்திரை –மொழிநடையும் புனைவு மொழியும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-2
Year of Publication : 2025
Authors : Dr. S. Bharatiprakash


Citation:
MLA Style: Dr. S. Bharatiprakash, "Bharatiyar's Our Congress Yatra - Language Practice and Fiction" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I2 (2025): 70-73.
APA Style: Dr. S. Bharatiprakash, Bharatiyar's Our Congress Yatra - Language Practice and Fiction, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i2), 70-73.

சுருக்கம்:
தமிழ்இலக்கிய வரலாற்றில் பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இக்கால கட்டத்தில் தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்த ஐரோப்பியர்களால் தமிழ் இலக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய விடுதலைப் போராட்டமும் அது சார்ந்துதமிழ் நாட்டில் நிகழ்ந்த நிகழ்வுகளும் கல்வி கற்ற மக்களிடம் “நம்நாடு இந்தியா, நாம் அனைவரும் இந்தியர்” என்ற கருத்துருவாக்கத்தை வலுவாக்கியது. இதன் தொடர்ச்சியாக,தமது நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழ்நாட்டு மக்களும் பயணிக்கத் துவங்கினர். அவர்களின் பயணங்கள் பயணப்பதிவுகளாக மலர்ந்தன.இது தொடர்பாக இதுவரை நடைபெற்றுள்ள ஆய்வுகளும் பயண இலக்கியத்தின் பொதுமைக் கூறுகளை மட்டும் ஆராய்ந்துள்ளன. கால வரிசையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் பயணஇலக்கியம் பற்றிய அடிப்படைத் தகவல்களைத் தருவனவாக அமைகின்றன.வகைமை நோக்கிலும் உத்திகளை அடிப்படையாகக் கொண்டும் நடைபெற்ற ஆய்வுகள் அனைத்தும் வெளி நாட்டுப் பயணஅனுபவங்களைச்சார்ந்து மட்டுமே அமைந்துள்ளன.உள்நாட்டுப் பயண அனுபவங்களை (ஆசிரியர் சார்ந்து) ஆய்வு நோக்கில் அணுகும் முயற்சி மிகக் குறைவானஎண்ணிக்கையில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. மேற்கண்ட செய்திகளின் பின்னணியில் பாரதியாரின் பயணப் பதிவுகளை மொழிநடையும்புனைவு மொழியும் என்ற நோக்கில் தனியே அடிக்கோடிட்டு காட்டும் முயற்சியே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

முக்கிய வார்த்தைகள்:
பயணம், யாத்திரை, செலவு,பயணப்பாதை, பயணப்பதிவு, பாரதியார்,பயணஇலக்கியமரபு, காங்கிரஸ் யாத்திரை.

துணைநூற்பட்டியல்:
[1] கிருட்டிணசாமி,வெ.(2003),தமிழ்இலக்கியத்தில் பயணச் செய்திகள்,மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
[2] ஞானபுஷ்பம், இரா. (1990), தமிழில்பயணஇலக்கியம், ஐந்திணைப்பதிப்பகம், சென்னை.
[3] பத்மநாபன் ரா. அ. ( தொகுப்பாசிரியர்) (1982), பாரதி புதையல் பெருந்திரட்டு, வானதி பதிப்பகம் , சென்னை-17.