விசேட கல்வி அலகிலுள்ள மாணவர்களது கல்வியை மேம்படுத்துவதில் அதிபர்கள் எதிர்நோக்கும் சவால்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-2
Year of Publication : 2025
Authors : Mrs. D. Vithukshana


Citation:
MLA Style: Mrs. D. Vithukshana, "Challenges faced by principals in improving the education of students in special education units" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I2 (2025): 49-69.
APA Style: Mrs. D. Vithukshana, Challenges faced by principals in improving the education of students in special education units, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i2), 49-69.

சுருக்கம்:
இலங்கையில் அனைவருக்கும் கல்வியை உறுதி செய்வதற்கு விசேட தேவையுடைய மாணவர்களுக்கு தரமான கல்வியைப் பெறுவற்கான வாய்ப்பை நிச்சயப்படுத்திக் கொள்வது தற்காலத்தினுடைய ஒரு அத்தியாவசியத் தேவையாக உள்ளது. இருப்பினும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் காணப்படும் விசேட கல்வி அலகுகளில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வி மேம்பாடானது கிழக்கு மாகாணத்திலுள்ள மற்றைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் தாழ்நிலையில் உள்ளது. இக் கல்வி மேம்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக அப்பாடசாலைகளின் அதிபர்கள் காணப்படுகின்றனர். இதனை எடுத்தியம்புவதாக இவ் அளவை நிலை ஆய்வானது விசேட கல்வி அலகுகளிலுள்ள விசேட தேவையுடைய மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் விசேட கல்வி அலகுகளை உடைய ஆறு 1யுடீஇ 12 1ஊ, இரண்டு வகை ஐஐஇ ஒரு வகை ஐஐஐ பாடசாலைகளின் அதிபர்கள் (21), விசேட கல்வி அலகிற்கான ஆசிரியர்கள் (21), தன்னார்வலர்கள் (25), விசேட தேவையுடைய மாணவர்கள் (143), அவர்களின் பெற்றோர்கள் (143), விசேட கல்வி அலகிற்கான சேவைக்கால ஆலோசகர்கள் (5) போன்றோரை நோக்க மாதிரியினூடாகத் தெரிவு செய்து வினாக்கொத்து, நேர்காணல், அவதானம், ஆவணம் மூலமாக அவர்களிடமிருந்து அளவு மற்றும் பண்பு ரீதியாக தரவுகள் பெறப்பட்டுள்ளன. இவை எண் சதவீத அளவீட்டு முறையில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் யாவும்விசேட கல்வி அலகிலுள்ள மாணவர்கள், அதிபர்கள் பற்றி அறிதல், அவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அதிபர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளை மதிப்பிடல், அவர்களுக்கான கல்வியை மேம்படுத்துவதில் அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அவற்றைக் குறைப்பதற்கான வழிமுறைகளும் போன்ற ஆய்வு நோக்கத்தின் அடிப்படையில் அளவு, பண்பு ரீதியாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளான ஆய்வுப்பிரதேசத்தில் 143 விசேட தேவை கொண்ட மாணவர்களில் 23மூ ஆனவர்கள் மனவளர்ச்சிக் குறைபாட்டாலும், 14மூ ஆனவர்கள் டவுண் சகசத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர், விசேட கல்வி அலகிலுள்ள 90மூ ஆன அதிபர்கள் விசேட தேவைக் கல்வி தொடர்பான மிகக் குறைந்த கல்வித் தகைமையோடு காணப்படுகின்றனர், 85மூ ஆன அதிபர்கள் விசேட கல்வி அலகுகளை உள்வாங்கிய வகையில் வள ஒதுக்கீடுகளையோ, மேற்பார்வைகளையோ மேற்கொள்வதில்லை, 100 சதவீதமான அதிபர்கள் விசேட தேவையுடைய மாணவர்களின் பெற்றோர்களுடனான கூட்டங்களில் பங்கு கொள்வதில்லை, விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதில் வள ஒதுக்கீடு, பெற்றோர்களின் வகிபங்கு, ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாட்டின் வாண்மை, அதிபர்களின் விசேட தேவைக் கல்வி பற்றிய எண்ணம் போன்ற காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன போன்ற முடிவுகளுக்கு விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வியின் அவசியம் தொடர்பில் அதிபர்களுக்கும், பாடசாலை உள்ளக உறுப்பினர்களுக்கும் விழிப்புணர்வளித்தல், அதிபர் வள ஒதுக்கீட்டை மேற்கொள்ளும் போது விசேட கல்வி அலகை உள்வாங்கிய வகையில் வளங்களை வழங்குதல், வலய மட்ட மேற்பார்வைகள் விசேட கல்வி அலகினை உள்ளடக்கிய வகையில் இடம்பெறுவதை பாடசாலை அதிபர்கள் வலய கல்வி பணிப்பாளருக்கு உறுதி செய்தல், விசேட கல்வி அலகுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் விசேட தேவையுடைய மாணவர்கள் பற்றிய அறிவுடனும், அவர்களை முகாமை செய்யக் கூடிய திறனையும் கொண்டிருத்தல், அத்திறனை குறித்த வளவாளர்களினூடாக அதிபர்களுக்கு வழங்க வலய மட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற விதப்புரைகளும் இவ்வாய்வில் வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
அதிபர்கள், கல்வி மேம்பாடு, சவால்கள், விசேட கல்வி அலகு, விசேட தேவையுடைய மாணவர்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] அருள்மொழி, செ. (2008). கல்வி ஆய்வு முறைகள், துர்க்கா அச்சகம், கொக்குவில், மட்டக்களப்பு.
[2] அருள்மொழி, செ. (2017). கற்பித்தலுக்கான உளவியல், துர்க்கா அச்சகம், கொக்குவில், மட்டக்களப்பு.
[3] இலங்கை திறந்த பல்கலைக்கழகம், (2010). உள்ளடங்கல் கல்வி,இலங்கை திறந்த பல்கலைக்கழக வெளியீடு, நுகேகொட.
[4] இலங்கை திறந்த பல்கலைக்கழகம், (2010). விசேட தேவைகள் சார் கல்விக்கான பல்துறை அணுகுமுறைகள், நாவல, நுகேகொட.
[5] கருணாநிதி, மா. (2013). கற்றல், கற்பித்தல் மேம்பாட்டுக்கான வழிமுறைகள், சேமமடு புத்தகசாலை, கொழும்பு.
[6] சிவகுமார், த. (2009). விசேட கல்வி அறிமுகமும் பிரயோகங்களும்,குரு பிரிண்டர்ஸ், திருநெல்வேலி.
[7] Bariroh, S. (2018). The Influence of parents’ involvement on children with Special Needs’ motivation and learning achievement, International Education Studies.
[8] Juma Hellen, J. (2020). Challenges facing the implementation of inclusive education, Kampal International University, Kenya.
[9] Ketheeswaran, K. (2019). The operation of Special Education Unit in the regular schools and future possibilities for supporting the implementation of inclusive education system in Ampara District, JUICE journal, University of Jaffna.
[10] Mokgaetsi, S. R. (2019). Factor contributing toward poor performance of special needs students at Mokwatedi High Schools, Unpublished Med thesis, teraflop graduate school, South Africa.