சடங்கில் அழகியல் அம்சங்களும் அதன் அணுகுமுறைகளும் : மட்டக்களப்பின் களுமுந்தன்வெளி மாரியம்மன் சடங்குப் பாடல்களை மையமாகக் கொண்ட ஓர் ஆய்வு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-2 Year of Publication : 2025 Authors : K.Atputhan |

|
Citation:
MLA Style: K.Atputhan, "Aesthetic Aspects and Approaches in Ritual: A Study Focusing on the Kalumundhanveli Mariamman Ritual Songs of Batticaloa" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I2 (2025): 23-30.
APA Style: K.Atputhan, Aesthetic Aspects and Approaches in Ritual: A Study Focusing on the Kalumundhanveli Mariamman Ritual Songs of Batticaloa, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i2), 23-30.
|
சுருக்கம்:
இவ் ஆய்வானது மாரியம்மன் சடங்குப் பாடல்களை மையமாகக் கொண்டதாகும். தற்காலச் சூழலில் அழகியல் என்ற சொல்லுக்கு வலுவான முக்கியத்துவம் கொடுப்பதனை காணமுடிகின்றது. அந்தவகையில் ஆய்வாளர்கள் பரிசோதகர்கள், மெய்யியலாளர்கள் போன்றோர் பல்வேறு முறைகளில் அழகியலை வரையறுக்கின்றனர். அழகியலை விளங்கிக் கொள்வதற்கு பல வழிகளை கையாளுகின்றனர். அந்தவகையில் அழகியலானது பல துறைகளில் பரவிக் காணப்படுகின்றது. இந்த அடிப்படையில் சடங்குப் பாடல்களில் அழகியல் அம்சங்களை உற்று நோக்க முடிகின்றது.
இவ்வாய்வானது அழகியல் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு ஆராய்வதுடன் அதனூடாக அழகியல் வெளிப்பாடு எவ்வாறு சடங்கியல் பாடல்களில் வெளிப்படுத்தப்படுகின்றது என்பதை உற்று நோக்குவதாக அமைகின்றது. அழகியல் அம்சங்களுடைய வகிபங்கு சடங்குப் பாடல்களில் என்ன என்பதை இவ்வாய்வு உற்று நோக்குகின்றது. இவ்வாய்வானது அழகியல் கோட்பாடுகள் அழகியல் பயிற்சிகள், அழகியல் கூறுகள், அழகியல் உருவாக்கம், அழகியல் அணுகுமுறைகள் போன்ற விடயங்களை ஆராய்வதாக அமைகின்றது.
இவ்வாய்வில் சடங்குப் பாடல்கள் முதல் நிலைத்தரவாக அமைவதுடன் இதனோடு தொடர்புடைய இணையம், வெளியீடுகள், சஞ்சிகைகள், புத்தகங்கள், பத்திரிகைகள் இரண்டாம் நிலைத் தரவாக அமைகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: அழகியல், சடங்குப்பாடல்கள், கோட்பாடுகள், சடங்கு, சமுகம், அணுகுமுறை, கூறுகள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] பிரேம்குமார்,இ.(2013) மேலைநாட்டு அழகியல்இ குமரன் புத்தக இல்;லம், கொழும்பு
[2] மீனாட்சி, மு.(1992) அழகியல் அல்லது கலை கலைக்காகவே, உலக தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
[3] Hanns Eisler and Theodor Adorno .(1947) Element of aesthetics- chapter-5, Dobson Ltd. London
[4] Jonathan L. Friedmann. (2018) musical aesthetic, cambridge scholar publishing)
[5] Kevin Kessler. (.2021) codeless.lo./writing-aesthetic
[6] Na Zhou(2021) Analytic on the aesthetic characteristics of spots music and it’s communication channels-volume-02 no.06 ISSN 2523-58877
[7] Rikyan Dyah Bathari Widowati.(2019)The aesthetic studies of song lyrics volume1-no.1
[8] திருச்செல்வம், வ. தலமை குரு, வயது 42, களுமுந்தன்வெளி
[9] கோவர்த்தனன், உ விவசாயம், வயது 20, களுமுந்தன்வெளி
[10] யோகநாதன், ஆ விவசாயம், வயது 52, களுமுந்தன்வெளி
|