‘சந்திரகாசன்’ வாசகப்பா: இலக்கியமும் அதன் ஆற்றுகை முறைமையும் ஒர் அரங்கியல் பார்வை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-2
Year of Publication : 2025
Authors : Dr.Alagiah Vimalaraj


Citation:
MLA Style: Dr.Alagiah Vimalaraj, "‘Chandrakasan’ Vasakappa: Literature and its system of perception: a theatrical perspective" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I2 (2025): 10-22.
APA Style: Dr.Alagiah Vimalaraj, ‘Chandrakasan’ Vasakappa: Literature and its system of perception: a theatrical perspective, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i2), 10-22.

சுருக்கம்:
வாசகப்பா என்பதைப் பேச்சுவழக்கில் வாசாப்பு என்றும் அழைப்பர். வாசகப்பா என்றால் வசனம் கலந்த பாடல்கள் என்று குறிப்பிடுவர். இவ்வடிவம் போத்துக்கேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வடிவமாகும். தமிழர்களிடத்தில் மரபுக்கலை வடிவமாக கூத்து முதன்மை பெறுகின்றது. போர்த்துக்கேயர்கள் இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு வந்தபோது இங்கு கூத்துகலையானது முதன்மை பெற்றிருப்பதையறிந்து தங்களுக்கானதொரு கூத்து மரபை உருவாக்க விரும்பினர். கத்தோலிக்கக் கிறித்தவர்கள் தமிழர்களிடத்தில் இருந்த கூத்துவடிவத்தை தங்கள் கிறித்தவக் கதைகளை அடிப்படையாகவைத்து வடிவத்தை உருவாக்கினர். அவ்வாறு உருவாக்கப்பட்ட கூத்து வடிவத்தின் பெயரே வாசாப்பு என்று அழைக்கப்படுகின்ற வாசகப்பா ஆகும். வாசகப்பா கூத்துக்கள் அல்லது நாடகங்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் கத்தோலிக்கர்களிடம் பரவலாகவே காணப்படுகின்றது. வாசகப்பா ஒரு இரவு முதல் ஒன்பது இரவுகள்வரை நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த வாசகப்பா கூத்துக்கள் இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் உள்ள ‘பரப்பான்கண்டல்;;;;;;’ என்கின்ற கிராமத்தின் கூட்டத்து மாதா கோயில் என்று அழைக்கப்படுகின்ற ‘தூய பரலோக மாதா ஆரோகண தேவ’ அன்னையின் ஆலயத்தில் ‘சந்திரகாசன்’ என்கின்ற வாசகப்பா நாடகம் மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றது. இதன் ஆற்றுகை ஐந்து வருடங்களுக்கு ஒருதடவை இடம்பெறும். இறுதியாக இவ்வாற்றுகை 2017இல் நடைபெற்றது. அதற்குப்பின் இவ்வாற்றுகை இன்னும் நடைபெறவில்லை. இருபத்தியொன்பது ஊர் மக்கள் ஒன்று கூடி நிகழ்த்துகின்ற ஒரு கலைவடிவமாக இது இருக்கின்றது. ஒரே ஒரு நாடகத்தை இருபத்தியொன்பது ஊர்மக்கள் ஒன்று கூடி நிகழ்த்துவது என்பது அங்கு ஒரு சமூகக் கட்டமைப்பு வலுவாக இருப்பதைக்காட்டுகின்றது. குருகுல சமூகத்தினர் பரந்து வாழும் ஊர்களை ஒன்றினைத்து ஒரே இடத்தில் இந்த நிகழ்வை நிகழ்த்துகின்றனர். இம்மக்கள் சமூகமாக வலுவடைவதற்கு இந்த நிகழ்த்துகை இடமளிக்கின்றது. இன்றைய உலகமயமாதல் சிந்தனையில் மக்கள் தனியன்களாக ஆக்கப்பட, இங்கு மக்களை ஒன்றிணைக்கின்ற வடிவமாக இந்த வாசகப்பா வடிவம் முக்கியம் பெறுகின்றது. இந்தச் சந்திரகாசன் வாசகப்பா இலக்கியமாகவும் ஆற்றுகையாகவும் எவ்வாறு அமைந்திருக்கின்றது என்பதை ஒரு அரங்கியல் நோக்கில் இந்த ஆய்வுக்கட்டுரையின் மூலம் முன்வைக்கப்படுகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
வாசகப்பா, ஆற்றுகை, கூத்துக்கலை.

துணைநூற்பட்டியல்:
[1] சந்திரகாசன் நாடகம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வட மாகாணம், 2017.
[2] சுகிர்தா உத்திரியமரி.ஜோ., தமிழக வாசாப்புக்கள், பி.எச்.டி. பட்டத்திற்கு அள்க்கப்பெற்ற ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், அக்டோபர் 1993.
[3] தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். நீங்களும் சுவையுங்கள், மதுரை, 1978.
[4] விமலராஜ்.அ., இலங்கை இந்திய நாடுகளில் பாஸ்கா நாடக மரபு ஒரு பண்பாட்டு ஆய்வு, கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வேடு, காந்திக்கிராம கிராமியப் பல்கலைக்கழகம், 2022.