பழமொழி நானூறு காட்டும் அரசனின் பண்புகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-1
Year of Publication : 2025
Authors : M.Muvin


Citation:
MLA Style: M.Muvin, "The proverb shows four hundred qualities of a king" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 115-123.
APA Style: M.Muvin, The proverb shows four hundred qualities of a king, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 115-123.

சுருக்கம்:
மனிதன் தன்னைத்தானே வழி நடத்திக் கொள்வது அவனது சுய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். ஆனால் மனிதர்கள் குறிப்பிட்ட அரசியல் மற்றும் பண்பாட்டு நெறிகளுக்கு உட்பட்டு, ஒரு சமூகமாகவாழும் நிலையில், சமூகத்தை வழி நடத்துவதற்கு அந்த சமூகமே ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அல்லது நெருக்கடியான சூழலில் சமூகம் சிக்கிக் கொள்ளும் போது அதிலிருந்து அவர்களை மீட்கசரியான தருணத்தில் தலைவன் ஒருவன் அக்கூட்டத்திலிருந்து உருவாகிறான். இவ்வழியில், தலைவன் உருவாதல் அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதனால், ஆபத்திலிருந்து தங்களை மீட்ட தலைமை மாந்தரைப்பின் பற்றும், அல்லது வழி படும் நிலை இயல்பாகவே அச்ச மூகத்திற்கு உண்டாகிறது. இதுவே பின்னாளில் அதிகாரங்கள் குவிக்கப்பட்ட மன்னன் என்ற உச்சபட்ச அதிகாரம் கொண்டதலைமை உருவாகக் காரணமாகிறது. இத்தகைய அதிகாரம் கொண்ட அரசன் தவறு செய்யும் போது அல்லது இயல்பாகவே மன்னனுக்கு அறிவுரை வழங்க சங்ககாலத்தில் புலவர்பலர் இருந்துள்ளனர். செல்வம், அதிகாரம் போன்ற மிகுதியான எதுவும் அரசனின் கண்களை மறைக்கும் போது அவனைப்புலவர்கள்தம் அறிவுரைகள் மூலம் அறத்தின் வழி கொண்டு வந்த செய்திகள் தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. ஒரு முறை அதிகாரத்தை அனுபவித்துப் பழகிய மனிதன், அதை எந்த சூழலிலும் இழக்கவிரும்பமாட்டான் என்பதற்கு உலக வரலாற்றில் சான்றுகள் அதிக முள்ளன. அரசனின் கடமையென்பது மக்களை அல்லது நாட்டைக் காத்தல் என்றாக வெளிப்படையாக இருப்பினும், உளப்பூர்வமாக அதிகாரத்தை நிலைநிறுத்த, அவன் எடுக்கும் எல்லாநடவடிக்கைளும் கேட்பாரற்று நிகழ்த்தப்படுவன. அவை அனைத்தும் அறம் கடந்த அதிகாரம் தக்கவைத்தல் என்ற நிலையை நோக்கியே செல்லும். நாட்டில் மன்னராட்சி முறை என்றாலும், அறிவிற் சிறந்த ஆன்ற புலவர் பெருமக்கள், மன்னன் அறம் தவறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அவ்வாறு, மக்களுக்கு கொடுமை நேரும் போதும், நாட்டின் நலனைக்கருத்தில் கொண்டு சொங்கோல் வழுவாத ஆட்சியை வழங்க வேண்டு மென்று கருதி, அரசனுக்கான ஆட்சியியல் நெறிமுறைகளை பல அற இலக்கியங்களில் பாடிவைத்துள்ளனர். அவ்வகையில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறுகாட்டும் அரசனுக்கானபண்புகளை ஆராய்தல் இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
அரசன், தலைமை, செங்கோன்மை, அதிகாரம், அரசியல், மக்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] இறையன்பு. வெ, சிம்மாசனசீக்ரெட், நியூசெஞ்சரிபுக்ஹவுஸ்,சென்னை, 2019
[2] சிவஞானம். வீ, பழமொழிநானூறு ( மூலமும்உரையும்), விஜயாபதிப்பகம், கோயம்புத்தூர், 2017
[3] தண்டபாணி. துரை, இன்னாநாற்பது(மூலமும்உரையும்),உமாபதிப்பகம், சென்னை, 2022
[4] மாணிக்கவாசகன். ஞா, சிறுபஞ்சமூலம்(மூலமும்உரையும்), உமாபதிப்பகம், சென்னை, 2021
[5] மாணிக்கவாசகன். ஞா, திரிகடுகம்(மூலமும்உரையும்), உமாபதிப்பகம், சென்னை, 2022
[6] மாணிக்கவாசகன். ஞா, முதுமொழிக்காஞ்சி(மூலமும்உரையும்), உமாபதிப்பகம், சென்னை, 2021
[7] ஹெலினா. தே, திருக்குறள்புதியஉரை, விதைவெளியீடு, ஈரோடு, 2016