காம மறுதலிப்பு : இந்து சமய இலக்கியங்களை மையப்படுத்திய ஆய்வு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-1 Year of Publication : 2025 Authors : N.Subaraj, P.Dharani |

|
Citation:
MLA Style: N.Subaraj, P.Dharani, "Refutation of lust: A study focusing on Hindu literature" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 106-114.
APA Style: N.Subaraj, P.Dharani, Refutation of lust: A study focusing on Hindu literature, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 106-114.
|
சுருக்கம்:
இந்துசமயம் பண்டைய காலத்தில் இருந்துஇன்று வரை செல்வாக்கு பெற்ற சமயமாக காணப்படுகிறது. ஆதி அந்தமில்லா இந்து சமயத்திற்கு “சனாதன தர்மம்” என்ற பெயரும் உண்டு. அதன் பொருள் ‘என்றுமுள்ள வாழ்க்கை நெறி’ என்பதாகும். இந்து மதம் பல்வேறு வகையிலும் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய தர்மங்கள் பற்றி எடுத்துக்கூறியுள்ளது. தனி மனித தர்மம் அல்லது வியக்தி தர்மம் என்பது ஒரு தனி மனிதன் அன்றாடம்கடைப்பிடிக்க வேண்டிய தர்மமாகும்.வேதாந்த சாத்திரங்கள் கூறும் இல்லற தர்மம்,சமூக தர்மம், இராஷ்டிர தர்மம், மானவ தர்மம் ஆகிய தர்மங்களில் தனி மனிதன்கடைபிடிக்க வேண்டிய வியக்தி தர்மங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து சமயம் பஞ்சமா பாதகங்களான கொலை, களவு, கள், காமம், குருநிந்தை ஆகியவற்றில் ஒன்றான காமத்தை இந்து ஒழுக்க நெறிக்கு புறம்பாக குறித்து நிற்கின்றது.காமம்என்பது ஆசை,விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின்பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடியசொல்லாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: காமம், இந்து சமயம், மறுதலிப்பு, இந்து இலக்கியங்கள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] கண்ணதாசன்.(1973).அர்த்தமுள்ள இந்துமதம்.வானதி பதிப்பகம்.
[2] சீனிவாசன்,பா.(2000).மனம் மலரட்டும்.விகடன் பிரசுரம்.
[3] தீனதயாளன்,பா.(2005).பரமஹம்சர் : பொழியும் கருணை மழை.கிழக்கு பதிப்பகம்.
[4] துர்க்காதாஸ்,எஸ்,கே.(1970).சிவமஹா புராணம்:இரண்டாவது பாகம்.பிரேமா பிரசுரம்.
[5] மாத்ருபூதேஸ்வரன்,எஸ்,எஸ்.(2005).பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம்.நர்மதா பதிப்பகம்.
[6] ராமநாதன்,அரு.(1975).ஸ்ரீகந்தபுராணம் : இரண்டாம் பாகம்.பிரேமா பிரசுரம்.
[7] வசந்தா வைத்தியநாதன்.(2013).இந்து பௌத்த சமயங்களில் அறக்கோட்பாடு.(261-277).இரகுபரன்,க.,பிரசாந்தன்,ஸ்ரீ.(தொகு.).இந்து சமயமும் அத்வைத நெறிகளும். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
[8] ஜெகாதா.(2003).கடவுளை காதலித்த கன்னியர்.ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்.
[9] Subaraj,N. Kesavan.S. (2016). Conspiracy case in Hinduism - A Critical view. Research Gate.https://www.researchgate.net/publication/323541258_conspiracy_case_in_Hinduism_-_A_Critical_view
|