சிலம்பு காட்டும் சமூகமும் சமூகம் காட்டும் அறமும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-1 Year of Publication : 2025 Authors : Tanishra Anandaraja |

|
Citation:
MLA Style: Tanishra Anandaraja, "The society that shows the flag and the morality that society shows" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 97-105.
APA Style: Tanishra Anandaraja, The society that shows the flag and the morality that society shows, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 97-105.
|
சுருக்கம்:
தமிழிலுள்ள ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக சிறப்பித்துக் கூறப்படும் சிலப்பதிகாரமானது சேர அரச மரபைச் சேர்ந்த இளங்கோ அடிகளினால் ஆக்கப்பட்டதாகும். இந்நூல் பிற்காலத்தில் எழுதப்பட்டதமிழ் காப்பியங்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அமைந்திருந்தது.சங்கமருவிய காலம் என்றாலே அது அறநெறிக்காலம் எனக் கூறுமளவுக்கு அறம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இக்காலத்தில் ஆக்கப்பட்டதாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில் முன்வைக்கப்பட்ட அறக்கருத்துக்களை இன்றைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளிலும் அவதானிக்க முடிகின்றது. தொன்மையான காலத்திலிருந்தே ஒரு குறிப்பிட்ட பண்பாட்டுக்குட்பட்ட மக்கள் சமூகமாய் இணைந்து வாழப்பழகிக் கொண்டார்கள். சமூகமாக வாழ்ந்த போதிலும் பல்நோக்குஇ பல்நிலைத்தன்மை உடையவர்களாக இம்மக்கள் காணப்பட்டனர். சமூகவாழ்வியல் செயற்பாடுகளிலும் வேறுபாடுகள்இ முரண்பாடுகள் கலந்திருந்தன. இவ்வடிப்படையில் சிலப்பதிகாரமானது அக்காலச் சமூகத்திற்கு பல அறக்கருத்துக்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும்இ உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏற்றலும்இ ஊழ்வினை வந்துருத்தும் போன்ற அறக்கருத்துக்கள் சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தின் அத்திவாரமாக அமைவதனைக் காணலாம்.அக்கால மக்களின் வாழ்க்கை முறைஇ பண்பாடுஇ சமயம்இ சமூகத்தில் பெண்களின் நிலைஇஅரசியல் நீதிஇ சட்ட மரபுகள் போன்ற பல விடயங்களை சிலப்பதிகாரம் காவிய மரபுடன் எடுத்துக் கூறியுள்ளது. சிலப்பதிகாரத்தில்சமூக ரீதியிலாக முன்வைக்கப்பட்டுள்ள அறக்கருத்துக்களை எடுத்துக்காட்டுதல், அவ் அறக்கருத்துக்கள் தமிழ் சமூகத்திற்கு எந்தளவுக்கு பயனுள்ளதாக அமைகின்றது என்பதனை வெளிப்படுத்துதல் என்பன இவ்வாய்வுக்கான நோக்கங்களாக அமைகின்றன. மேலும் சிலம்பு காட்டும் சமூகமும் சமூகம் காட்டும் அறமும் எனும் தலைப்பைக் கொண்ட இவ்வாய்வானது சிலப்பதிகார காவியத்தில் வெளிப்படுத்துகின்ற அறம் சார்ந்த மரபு முறைமைகளை அக்கால சமூக கட்டமைப்பில் எந்தளவுக்கு பின்பற்றி செயற்பட்டிருந்தென்பதனை எடுத்துக்காட்டி, அன்றைய கால சமூகத்திற்கு அறக்கருத்துக்கள் எந்தளவுக்கு பொருத்தமாக இருந்தன: இன்றைய கால சமூகத்திற்கு அக்கருத்துக்கள் எந்தளவுக்கு ஏற்புடையனவாக அமைகின்றன என்பதனை இவ்வாய்வானது வெளிப்படுத்துவதாக அமைகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: சமூகம், துறவு, பண்பாடு, பெண்கள், வாழ்க்கை முறை.
|
துணைநூற்பட்டியல்:
[1] சாமிநாதையர் .உ. (1985). சிலப்பதிகாரம். தமிழ்ப்பல்கலைக்கழகம்.
[2] இரகுபரன்.க.;: (2003).; சிலப்பதிகாரத்தில் பண்பாட்டுக்கோலங்கள் .;இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம்.
[3] மேகராசா .த.(2015).சிலப்பதிகாரப் பாத்திரங்களும் கண்ணகி வழக்குரைப் பாத்திரங்களும். ஒப்பியல் ஆய்வு . பட்டிப்பளைப் பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியம் மட்டக்களப்பு.
[4] சரளா இராசகோபாலன் .(2003). கண்ணகி வழிபாடு . ஒளிப்பதிப்பகம் சென்னை.
[5] சிவஞானம் .ம.பொ. (2006) . சிலப்பதிகாரத் திறனாய்வு. பூங்கொடி பதிப்பகம்.
[6] வரதராசன் மு. (1985). கண்ணகி . பாரி நிலையம்.
[7] பழனிச்சாமி இரா. (2019). சிலப்பதிகாரம் காட்டும் இல்லற நெறிகள் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ்.
|