திருக்குறளில் பரிமேலழகரின் உரைச்சிறப்புக்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-1
Year of Publication : 2025
Authors : Dr. V. Renuka


Citation:
MLA Style: Dr. V. Renuka, "Parimelazhagara's Discourses in Thirukkural" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 83-89.
APA Style: Dr. V. Renuka, Parimelazhagara's Discourses in Thirukkural, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 83-89.

சுருக்கம்:
இவ்வுலகில் அறம் கூறும் நூல்கள் பல உள்ளன. எனினும், திருக்குறள் மட்டுமே அறங்கள் பலவற்றைக் கூறி, அதனை ஏற்பதால் தனிமனிதனுக்கும், மனித குலத்திற்கும், இவ்வுலகிற்கும் கிடைக்கும் தீர்வுகளை எடுத்துரைக்கின்றது. அரசனை தெய்வம் என்று கூறாது அவன் செய்யும் கடமைகளின் வழி நின்றே மக்கள் அவனை ஏற்பர் என்று கூறுகின்றது. உழவின் மேன்மையை மிகத் தெளிவாகவும், உயர்வாகவும் எடுத்துரைக்கின்றது. இன்பத்துப்பாலை களவு, கற்பென இருநிலையில் பிரித்து அன்பு வாழ்க்கையை முறைப்படுத்திக் காட்டுகின்றது. அவ்வகையில், 'வள்ளுவரோ மனு ஆதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி" எனும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் கூற்றிற்கு ஏற்ப, தமிழ்ச் சமூகத்தின் அணையா விளக்காம் திருக்குறளை பரிமேலழகரின் உரையின் துணை கொண்டு ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

முக்கிய வார்த்தைகள்:
அறம், திருக்குறள், தனிமனிதனுக்கும், மனித குலத்திற்கும், தெய்வம், மக்கள், இன்பத்துப்பாலை.

துணைநூற்பட்டியல்:
[1] பி. இரத்தினம், திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், இரத்தினநாயகர் சன்ஸ், சென்னை, 1951
[2] இராகவையங்கார், சாசனத் தமிழ்க் கவி சரிதம், பாரதி புத்தகாலயம், சென்னை.
[3] ச. சீனிவாசன், திருக்குறள் பரிமேலழகர் உரை, மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2002
[4] முத்து இராமமூர்த்தி, தொண்டை மண்டல சதகம், கௌரா பதிப்பகம், சென்னை
[5] அருணை வேலு முதலியார், சிவஞான போத மாபாடியம், தமிழ் பல்கலைக் கழக வெளியீடு, தஞ்சை, 1991.
[6] சிவப்பிரகாச சுவாமிகள், பிரபுலிங்கலீலை, கழக வெளியீடு, திருநெல்வேலி, 1954.