இந்துப் பண்பாட்டின் சர்வதேச வியாபகம்: இந்து சமய ஆளுமைகளின் வகிபாகம் – ஒரு மீள்வாசிப்பு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-1
Year of Publication : 2025
Authors : Mr. G. Palraj


Citation:
MLA Style: Mr. G. Palraj, "The International Spread of Hindu Culture: The Role of Hindu Religious Leaders – A Re-Reading" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 66-79.
APA Style: Mr. G. Palraj, The International Spread of Hindu Culture: The Role of Hindu Religious Leaders – A Re-Reading, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 66-79.

சுருக்கம்:
இந்தியாவிலே தோன்றிய இந்துப்பண்பாடானது வரலாற்றுக் காலம் தொடக்கம் பல நாடுகளில் பரவலுற்று, இன்று உலகம் பூராகவும் வாழும்மக்களின் வாழ்வியலிலும் இரண்டறக்கலந்து விட்ட ஒரு செழுமையான பண்பாடாகத்திகழ்கிறது. இந்துப்பண்பாட்டினை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்து, சர்வதேசவியாபக நிலையடையச் செய்தவர்களில் இந்துசமய ஆளுமைகள் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களது இந்துசமயம் தொடர்பான பிறமொழி ஆய்வுகளும் அவர்களது உலகளாவியபயணங்களும் அங்கு அவர்கள் நிகழ்த்திய உரைகளும், அவர்கள் உருவாக்கிய சமயநிறுவனங்களும் உலகெங்கும் இந்துப்பண்பாடுதன்னை அகலித்துக் கொள்வதற்கு காரணங்களாக அமைந்தன எனலாம். இந்துசமயம், மறுமலர்ச்சியினை அவாவிநின்றபத்தொன்பதாம் நூற்றாண்டுகாலச்சூழலில், பாரதத்தில்விவேகானந்தர், இராதாக்கிருஸ்ணன், ஸ்ரீஅரவிந்தர், சகோதரிநிவேதிதா போன்றவர்களும் ஈழத்தில் கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி, சுவாமிவிபுலாநந்தர், சேர்.பொன்னம்பலம் இராமநாதன், முதலிய இந்துசமய ஆளுமைகளும் தோற்றம் பெற்று இந்துசமயத்தினை மறுமலர்ச்சியடையச் செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை உலகளாவியநிலைக்கும் இட்டுச்சென்றனர். எனவே இது போன்ற இந்துசமய ஆளுமைகளின் ஊடாக இடம் பெற்ற இந்துப்பண்பாட்டின் சர்வதேசவியாபகச் செயன்முறை, அதுநிகழ்ந்தபாங்கு, அதன் முதன்மைப்பாடு மற்றும் சமூக, சமய, பண்பாட்டு விளைபேறுகள் பற்றிப்பருமட்டாகபரிசீலிப்பதே இந்த ஆய்வுக்கட்டுரையின்மைய இலக்காகும். அடிப்படையில் இது வொருதரரீதியான, விபரணவியல் மற்றும் மதிப்பீட்டு ஆய்வு. பிரதானதரவு மூலங்களாகநூல்கள், சஞ்சிகைகள் முதலானவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
இந்துசமய ஆளுமைகள். இந்துப்பண்பாடு, சர்வதேசவியாபகம், வகிபாகம்.

துணைநூற்பட்டியல்:
[1] பாலன்.பு., (2008), 'வரலாற்றில்வாழும்சாதனைச்சான்றோர்கள்', பக்.36-50.
[2] கோபாலகிருஸ்ணஐயர்.ப., (1993), 'கிழக்கிலும்மேற்கிலும்இந்துப்பண்பாடு – சிலஅண்மைக்காலப்போக்குகள்', லீலாவதிஇராமநாதன்பெருமாட்டிநினைவுப்பேருரை, பக்.34,35.
[3] கலைவாணி. இ., (2003), 'சேர்.பொன்.இராமநாதனதுஇந்துப்பண்பாட்டுச்சிந்தனைகளும்பணிகளும்', இரண்டாவதுஉலகஇந்துமாநாடுசிறப்புமலர், ப.309.
[4] கணேசலிங்கம்.ப., (2009), 'இந்துப்பண்பாட்டுச்சிந்தனைகளைஉலகஅரங்கில்பரப்பியஈழத்துஇந்துசமயப்பெரியார்கள்', நல்லைக்குமரன்மலர், ப.116.
[5] மங்கையர்க்கரசி. தி., ((2007), 'இலங்கைஇந்துமரபில்சேர்.பொன்.இராமநாதன்', இந்துஓளி – பொன்விழாசிறப்புமலர், ப.331.
[6] கௌரிமலர்.ம., (2007), 'சுவாமிவிபுலாநந்தரின்சமயப்பணிகள் - ஒருநோக்கு', இந்துஓளி – பொன்விழாசிறப்புமலர், ப.383.