இலங்கையில் 2024ஆம் ஆண்டு நடை பெற்ற ஜனாதிபதித் தேர்தலும் மக்களின் வாக்களிப்பு நடாத்தையும்: ஓர் ஒப்பீட்டு ஆய்வு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal Volume-7 Issue-1 Year of Publication : 2025 Authors : A.Kanneraj |

|
Citation:
MLA Style: A.Kanneraj, "The 2024 Presidential Election and the Voting Process in Sri Lanka: A Comparative Study" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 50-57.
APA Style: A.Kanneraj, The 2024 Presidential Election and the Voting Process in Sri Lanka: A Comparative Study, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 50-57.
|
சுருக்கம்:
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எனப் பல்வேறுவகையான தேர்தல்கள் நடைபெறுகின்றன. அவற்றில் வாக்களிக்கும் மக்களின் வாக்களிப்புநடத்தை என்பது ஒரேமாதிரியாக இருந்தது இல்லை. இங்குமக்களின் வாக்களிப்பு நடத்தையினைகட்சிகளின் கொள்கைகள் தீர்மானிக்கின்றது என்பதற்கு அப்பால் சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றது. அதேவேளை இலங்கைமக்களின் வாக்களிப்பு நடத்தை பிரதேசரீதியாக வேறுபடுவதனையம் அவதானிக்க முடிகின்றது. இந்தவிடயத்தை கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களில்(2019, 2024) மக்களின் வாக்களிப்பு நடாத்தை எவ்வகையில் அமைந்திருந்து என்பதையும், அதுஎந்தவகையில் வெற்றி பெற்ற வேட்பாளருக்குசாதாகமாக அமைந்தது என்பதனையும் ஒரு ஒப்பீட்டு அடிப்படையில் இவ்வாய்வு நோக்குகின்றது.
கடந்த இருஜனாதிபதித் தேர்தல்களும் வரலாற்றில் தடம்பதித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருந்த தேர்தல்களாகும். குறித்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்றவாக்காளர்களின் வெற்றியில் மக்களின் வாக்களிப்புநடாத்தை எத்தகையதாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது என்பதனை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்விற்குத் தேவையானதகவல்கள் இரண்டாம் நிலைத் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன். அவைதரவுகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுவிவரணப் பகுப்பாய்வின் அடிப்படையில் அய்வின் முடிவுஎட்டப்பட்டிருந்தது. இவ்வாய்வானது ஒருகலப்பு ஆய்வு முறையியலை அடிப்படையாகக் கொண்டதுஆகும். இவ்வாய்வின் முடிவாக 2019ஆம் ஆண்டுத் தேர்தலானது இனரீதியிலானகாரணிகள் மக்களின் வாக்களிப்பு நடாத்தையினைத் தீர்மானித்திருந்ததையும், 2024ஆம் ஆண்டுத் தேர்தலானது கடந்த ஆட்சியில் மக்கள் எதிர்நோக்கியவரிசையுகத்தை மாற்றியமைக்கவும் அதற்குகாரணமாணவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதைவலியுறுத்தியும் மக்களின் வாக்களிப்புநடாத்தை இருந்தததையும் சுட்டிக்காட்டுகின்றது. ஆயினும், வடகிழக்கு மக்களின் வாக்களிப்புநடாத்தை ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தமட்டில் ஒரேமாதிரியாக இருந்துவருவதையும், குறிப்பாகபெரும்பான்மை சிங்களமக்களின் வாக்களிப்புநடத்தைக்கு எதிர்மறையாக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
|
முக்கிய வார்த்தைகள்: இலங்கை, ஜனாதிபதி, தேர்தல், உள்ளுராட்சி, வெற்றி.
|
துணைநூற்பட்டியல்:
[1] ரமே~; இரா. ரூ இஃஜாஸ் (2024), இலங்கைத் தேர்தல் அரசியலில் மாற்றமுறும் தன்மை: 2024 ஜனாதிபதித் தேர்தலும் அதன் தாக்கமும். மாற்றம்,துழரசயெடளைஅ கழச உவைணைநளெ
[2] பிரசாத் ர. (2024),கடந்ததேர்தலில் வெறும் 3வீத வாக்குமட்டுமேபெற்ற இவர், இம்முறைவென்றதுஎப்படி?,பிபிசி,கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
[3] இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு,hவவிள:ஃஃநடநஉவழைளெ.பழஎ.டமஃவயஃநடநஉவழைளெஃPசுநு_நடநஉவழைn_2024_வு.hவஅட
[4] கீனன் அ. ரூ இக்பால் ஹ. (2019), ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ச இலங்கைமக்களைஒருமுகப்படுத்துவாரா? விடிவெள்ளி
|