இலிங்க புராணத்தினூடாகப் புலப்படும் சைவசித்தாந்தக் கருத்துக்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2025 by IRJTSR Journal
Volume-7 Issue-1
Year of Publication : 2025
Authors : Ms. Duhaya. Peranatham


Citation:
MLA Style: Ms. Duhaya. Peranatham, "Shaivism ideas revealed through the Linga Purana" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V7.I1 (2025): 31-36.
APA Style: Ms. Duhaya. Peranatham, Shaivism ideas revealed through the Linga Purana, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v7(i1), 31-36.

சுருக்கம்:
புராணங்கள் சைவக் கருவூலங்களாக திகழும் சிறப்பினையுடையன. சைவப் பண்பாட்டின் பல்வேறு பரிமாணங்களை விரித்துரைக்கும் நூல்களாக விளங்குகின்றன. சைவத்தின் முடிந்த முடிவான தத்துவம் சைவ சித்தாந்த தத்துவமாகும். சைவ சித்தாந்த தத்துவ மரபு மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். இதன் கூறுகளை சிவாகமங்களிலும் திருமுறைகளிலும் காண முடிகின்றது. புராணங்களானவை தெய்வீகக்கதைகளினூடாக சைவசித்தாந்த தத்துவக் கருத்துக்களை இலகுவாக எடுத்தியம்பியுள்ளன. வடமொழிப் புராணங்கள், தமிழ் மொழி புராணங்கள் என்ற கட்டமைப்பில் வடமொழிப்புராணங்களில் இருக்கின்ற சிவபுராணம் பத்தினுன் ஒன்றுதான் இலிங்க புராணமாகும். இலிங்கபுராணமானது ‘சைவபுராணம்’ என சிறப்பிக்கப்படுவதனால் அதில் சைவத்தின் முடிந்த முடிவாகிய சைவசித்தாந்த தத்துவ கருத்துக்கள் விரவிக்கிடப்பதனைக் காணலாம். இந்த வகையில் ஸ்ரீ லிங்க புராணத்தினை முதன்மை மூலாதாரமாகக் கொண்டு அந்தப் புராணம் புலப்படுத்தும் சைவ சித்தாந்தச் சிந்தனைகளை வெளிப்படுத்துவது இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வாய்வானது விபரண ஆய்வு, வரலாற்று ஆய்வு முறையில் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. சைவ சித்தாந்த சாஸ்திரங்களுடனும் ஏனைய சைவ நூல்களுடனும் ஒப்பிட்டு ஆராய்வதினால் ஒப்பிட்டு ஆய்வு முறையியலும் பயன்படுத்தப்பட உள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
இலிங்க புராணம், சைவ சித்தாந்தம், சிவன், சைவம், முப்பொருள்.

துணைநூற்பட்டியல்:
[1] இந்துக்கலைக்களஞ்சியம், பகுதி ஐஇ(அ-ஈ)இ(1990), இந்துசமய இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு.
[2] கார்த்திகேயன், (1969), ஸ்ரீ லிங்கபுராணம், வாசுபிரசுரம், சென்னை.
[3] கிருஷ்ணமாச்சாரியார், (2013), அஷ்டா தசபுராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள், நர்மதா பதிப்பகம்,சென்னை.
[4] சுகந்தினி.சி., (2020), இலங்கை சைவத் தலபுராணங்கள் ஒரு பண்பாட்டியல் ஆய்வு, கரிகணன் நிறுவனம், யாழ்ப்பாணம்.
[5] ஞானகுமாரன்.நா., (2012), சைவசித்தாந்தத்தெளிவு, தூண்டி, யாழ்ப்பாணம்.
[6] நமசிவாயம்.இ., (1997), சைவசித்தாந்தம் கூறும் தத்துவங்களும் தாத்துவிகங்களும், அண்ணாசலை, சென்னை.