| இனியவை நாற்பதில் கல்விச் சிந்தனைகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-4 Year of Publication : 2024 Authors : M.Muvin |

|
Citation:
MLA Style: M.Muvin, "Educational Thoughts in the Pleasant Forty" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I4 (2024): 58-64.
APA Style: M.Muvin, Educational Thoughts in the Pleasant Forty, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i4), 58-64.
|
சுருக்கம்:
ஆதிமனிதன் கற்காலத்தில் தன்னிடம் இல்லாத அறிவை, அன்றையசூழலில் தன்னிலும் அறிவிற்சிறந்த பறவையிடமிருந்தோ அல்லது விலங்கிடமிருந்தோ ஏதோ ஒன்றைக் கற்றிருக்க வேண்டும். ஏனெனில் முதன் முதலில் பூமியில் பிறந்த மனிதர்கள் அறிவிற்சிறந்தவர்களாக இருந்திருக்க இயலாது. உதாரணமாக பறவைகள் அங்கும் இங்கும் பறந்து இரைதேடி இறுதியில் தேடிய இரையை உண்பதை மனிதன் கண்டிருப்பான். விலங்குகள் பசியில் தன்னிலும் எளிய விலங்கைக் கொன்று உண்பதைக் கண்டிருப்பான். இவ்வாறு தனக்கும் உணவு தேவைப்படும் போது, தானும்மரங்களில், செடிகளில் கிடைக்கும் பழங்களையும், காய்களையும், சில நேரங்களில் விலங்குகளை வேட்டையாடியும் உண்ண வேண்டும் என்றெண்ணி பறவைகள் மற்றும் விலங்குகளைப் போல உண்ணத் தொடங்கியிருக்க வேண்டும். இப்படி உண்ணக்கற்றுக் கொண்ட மனிதன், சில விலங்குகள் குகைகளிலும், பறவைகள் கூடுகளிலும் வாழ்வதைக்கண்டு, இருப்பிடம் அமைத்து வாழ வேண்டும் என்ற அடுத்தகட்ட அறிவையும் பறவைகள் மற்றும் விலங்குகளிடமிருந்தே பெற்றிருக்கக்கூடும். இவ்வாறு தன்னிடம் இல்லாத அறிவைதன்னிலும் அறிவிற்சிறந்த பிற உயிரினங்களிடமிருந்து அல்லது சான்றோரிட மிருந்துதானேகற்றுக் கொள்வதும், தன்னிட முள்ள அறிவை ஆர்வமுள்ளவர்க்கும், தேவையுள்ளோருக்கும் கற்றுக் கொடுப்பதும் கல்வி எனப்படுகிறது. முன்னோர்கள் வாழ்ந்த ஆற்றங்கரைநாகரீகங்களில் கண்டெடுக்கப் படும்பானை ஓடுகளில் தங்களது பெயர்களைப் பொறித்து வைத்ததிலும், குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததைக் அடையாளமாகக் குறிப்பதற்காகவோ அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் சில விலங்குகளின் நடமாட்டத்தைக் குறிப்பதற்காகவோ குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதிலும், கல்வெட்டுக்களிலும், பனையோலைகளிலும் தொடங்கிய கல்வியறிவு இன்று கணினிகள் நிறைந்த இணையயுகத்திற்கு வந்துள்ளது. மனிதனிடம் கல்வியும், கற்பனையும் இருக்கும்வரை, இன்னும் அறிவியல் நுட்பங்கள் வளர்ந்து கொண்டே செல்லும். இன்றுநாம் இணையயுகத்தில் வாழும் நிலையில், அறம் உரைக்க எழுதப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகத்திகழும் பூதஞ்சேந்தனார் இயற்றிய இனியவைநாற்பதில், இடம் பெற்றுள்ள கல்வியியல் சிந்தனைகளை ஆராய்தலே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: கல்வி, மனிதன், அறம், கற்றல், கற்பித்தல், அறிவு.
|
துணைநூற்பட்டியல்:
[1] இறையன்பு வெ, இனிக்கும்இளமை, கற்பகம்புத்தகாலயம், சென்னை, 2020
[2] இறையன்பு வெ, வையத்தலைமைகொள், புதியதலை முறை பதிப்பகம், சென்னை, 2014
[3] சுப்ரமணியசர்மா ( உஆ ), வெற்றிவேற்கை, கணபதி அன்கம் பெனி, சென்னை, 1919
[4] மாதவன்சு, தமிழ் அற இலக்கியஙக்ளும் பௌத்தசமண அறங்களும், நியூசெஞ்சரிபுக்ஹவுஸ், சென்னை, 2017
[5] வேங்கடசாமி நாட்டார் நமு, இன்னாநாற்பது இனியவைநாற்பது, மூலமும் உரையும், கௌராபுக் ஏஜென்ஸிஸ், சென்னை, 2011
[6] ஹெலினாதே, திருக்குறள்புதியஉரை,விதைவெளியீடு, ஈரோடு, சென்னை, 2015
|