பாதுகாக்கப்படவேண்டிய பழங்குடிமக்களின் கலைப்பாரம்பரியம்இலங்கையின் வேடுவ சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-4 Year of Publication : 2024 Authors : Mrs. Prashanthi Ilango |

|
Citation:
MLA Style: Mrs. Prashanthi Ilango, "of the tribes to be protected Art traditionA study based on the Veduwa community of Sri Lanka" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I4 (2024): 48-57.
APA Style: Mrs. Prashanthi Ilango, of the tribes to be protected Art traditionA study based on the Veduwa community of Sri Lanka, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i4), 48-57.
|
சுருக்கம்:
‘தேசத்தின் முதல் மனிதர்கள்’ என்ற பெருமையுடன் ஆதிக்குடிகளாக வாழ்ந்துவரும் மக்கள் தொகுதியே பழங்குடிமக்கள். உலகில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு நாகரீகங்களைக் கொண்ட பழங்குடிமக்கள் வாழ்ந்துவருகின்றனர். தாம் வாழ்கின்ற சூழலில் தமக்கேயுரித்தான சமூகப் பொருளாதாரபண்பாட்டுவிழுமியங்களை உள்வாங்கிவாழ்ந்துவரும் பழங்குடிமக்கள் தமக்கென தனித்துவமான கலைப்பாரம்பரியத்தையும் கொண்டுள்ளவர்கள்.
வேடுவர்கள் இலங்கையில் வாழும் பழங்குடியினரின் ஒருபிரிவினர்.காடுகளே இவர்களின் பூர்வீகம். இவர்களுடைய பண்பாட்டிலே கலைப்பாரம்பரியங்களுக்குத் தனியிடம் உண்டு. இவர்தம் வாழ்வியல் செயற்பாடுகளிலிருந்து கலைகளைத் தனியாகப்பிரித்துப் பார்க்கமுடியாதளவிற்குவாழ்வின் ஒவ்வொரு கூறுகளிலும் கலைச் செயற்பாடுகள் இணைந்துள்ளன. புலிக்கூத்து, கரடிக்கூத்து, சடங்குப் பாடல்கள், கொட்டுப்பறை, சங்கு, குழல் போன்ற இசைக்கருவிகள,; மண்ணாலும் மரத்தாலும் செய்யப்பட்ட சிற்பங்கள், கிரிகொரஹ நடனம், மூங்கில,; பண்புல,; பனையோலை, களி கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்கள் என்பன இலங்கையின் வேடுவப் பழங்குடிகளின் தனித்துவமான கலையம்சங்களாகும்.
இயற்கைதமக்களித்த ஒவ்வொரு நன்மைகளுக்காகவும் தமது ஆடல் களாலும், பாடல்களாலும், படையல்களாலும், ஓவியங்கள் மூலமும் நன்றிசெலுத்தினர். பயிற்சியோ, எதவிதமுன்னாயத்தங்களோ இல்லாமல் அக்கணத்தில் தோன்றி உருவாகும் சிறப்புத் தன்மை இவர்தம் கலைகளுக்கு உணடு. எகிப்தியபிரமிட்டுகளும், சிந்துவெளியின் கலை எச்சங்களும் பண்டைய நாகரீகங்களையும் அங்குவாழ்ந்த மக்களின் பண்பாட்டு வாழ்வியலையும் வெளிப்படுத்தி நிற்பதைப் போல பழங்குடிமக்களின் வாழ்வியலையும் அவர்தம் பண்பாடுகளையும் அறிந்துகொள்ளக் கூடிய மூலங்களாய் பழங்குடிமக்களின் கலைச்வெளிப்பாடுகள் அமைந்துள்ளன.
ஆனால் காடழிப்பு, நகரமயமாக்கல,; நவீனமயமாக்கல், அபிவிருத்தி செயற்பாடுகள,; அரசின் சட்டதிட்டங்கள் என்பன உள்நுழைந்தமையால் பழங்குடி வேடுவர்கள் பூர்வீக இடங்களை விட்டுகுடிபெயர்ப்புச் செய்யப்படவும், பலவந்தமாக வெளியேற்றப்படவும் நேரிட்டது. ஏனைய சமூகங்களுடன் இணைந்துவாழ நிர்ப்பந்திக்கப்பட்ட போது வேடுவக் குடிகளின் வாழ்வியலில் பலமாற்றங்கள் நிகழ்ந்தன. நவீனவாழ்வின் கூறுகளுக்குள் தம்மை இணைத்துக் கொள்ளநேரிட்டதால் அவர்தம் தனித்துவமானகலைச் செயற்பாடுகளில் கலப்படங்கள் நிகழ்ந்தன. பழங்குடிகள் கலைகளுக்குள் தமிழ் சிங்களகலைகள் கலந்துவிட்டன. பழங்குடிமக்களின் இளம்பரம்பரையினர் கூட இன்று அவர்களின் கலைகள் தெரியாதளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, உள ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளாகவும், பண்டைச் சமூகத்தின் நம்பிக்கைகள,; ஐதீகங்களின் வெளிப்பாடாகவும,; பண்பாட்டின் மூலங்களாகவும், கலைபற்றிய ஆய்வுகளின் அடிப்படையாகவும், அமைந்த பழங்குடிமக்களின் கலைகள் இன்னும் அழிந்துபோகாமல் பாதுகாக்கப்;பட வேண்டும்.
|
முக்கிய வார்த்தைகள்: பழங்குடிகள், வேடுவர்கள், கலைப்பாரம்பரியம், மீட்டெடுப்பு, பண்பாட்டுக்கலப்பு.
|
துணைநூற்பட்டியல்:
[1] இன்பமோகன்.வ. .இலங்கையில் வேடர். கொழும்பு–சென்னை. குமரன் புத்தக இல்லம்.(2020)
[2] கிரு~;ணராஜா.செ. இலங்கைவரலாறு: பாகம் 2(கி.பி.1505 -கி.பி 1796) யாழ்ப்பாணம்,பிறைநிலாவெளியீடு
[3] நவரெத்தினம். கு,இலங்கையில் கலைவளர்ச்சி. கொழும்பு,சென்னை. குமரன் புத்தக இல்லம்.,.(2007)
[4] சண்முகம்.கு.களுவன்கேணிவேடுவப்பரம்பரையினரின் வழக்காறுகள். கிழக்குமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம்..(2019).
[5] சரவணபவன்.க. கிழக்கின் பழங்குடிகள். திருகோணமலைவெளியீட்டாளர்கள்.(2020),
[6] இன்பமோகன் .வ. நெய்தல்,நகரமயமாக்கல் சுதேசகிராமியபண்பாட்டில் ஏற்படுத்தியபாதிப்புக்கள்,கலைகலாசாரபீடம் கிழக்குப் பல்கலைக்கழகம். இலங ;கை. தொகுதி 10,எண் 11.(2021),
[7] இன்பமோகன் .வ. மொழிதல். காலனித்துவபின்காலனித்துவகருத்தியலுக்குள் பழங்குடியினரின் கலைகள்,சுதந்திரஆய்வுவட்டவெளியீடு,மட்டக்களப்பு,தொகுதி– 5. எண்.(2018)
[8] மௌனகுரு. சி. மட்டக்களப்புமரபுவழிநாடகங்கள். மட்டக்களப்பு. விபுலம் வெளியீடு.(1998),
[9] நவரெத்தினம். கு,.இலங்கையில் கலைவளர்ச்சி. கொழும்பு,சென்னை. குமரன் புத்தக இல்லம்.,.(2007)
[10] பத்திநாதன்.க. எழுநா. இதழ் 4 வேடரும் காலனியமும். எழுநா. இதழ் 4,திருநெல்வேலி(2024)
|