சித்தர்கள் அருளிய உணவும் மருந்தும் ஓர் பார்வை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-4
Year of Publication : 2024
Authors : P.Thirupathi, Dr.M.Dhulasimani


Citation:
MLA Style: P.Thirupathi, Dr.M.Dhulasimani, "A vision of food and medicine blessed by the Siddhas" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I4 (2024): 41-47.
APA Style: P.Thirupathi, Dr.M.Dhulasimani, A vision of food and medicine blessed by the Siddhas, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i4), 41-47.

சுருக்கம்:
சித்தமருத்துவத்தின் அடிப்படை உணவே மருந்து, மருந்தே உணவு. எவையெல்லாம் உணவாக உள்ளதோ அவையெல்லாம் மருந்து. எவையெல்லாம் மருந்தாக உள்ளதோ அவையெல்லாம் உணவு. சித்த மருத்துவத்தில் உணவியல் என்ற தனித்துறையே இருந்துள்ளது. அக்காலத்தில் “பதார்த்தகுண சிந்தா மணி” எனும் நூல் இருந்தது. அந்நூலில் சித்தர்கள் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கும் எவ்வகையான மருத்துவகுணம் உள்ளது என்று எடுத்துக் கூறியுள்ளனர். உப்பு, நீர், பால், தாய்ப்பால் என்ன குணம், அரிசிக்கு, உளுந்துக்கு என்ன குணம் என்று நாம் உண்ணும் உணவு வகைளுக்கு உரிய குணங்களை நுட்பமாக ஆய்வு செய்து சொல்லி இருக்கிறார்கள். எக்காலத்தில் எந்த உணவுகளை உணவுகளைச் வேண்டும், எவ்வகையான உணவுகளை உட் கொண்டால் நோய்வராது என்று விரிவு படுத்தியுள்ளனர். மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவாக சித்தமருத்துவத்தின் உண்மைத் தன்மைகள் அழிய ஆரம்பித்தது. அதனால் நோய்களும் அதிகமாகவந்தது. எனவே உணவுதான் முக்கியம். அந்த உணவை முதன்மையாக் கொண்டது சித்த மருத்துவம். அத்தகைய மிக உன்னதமான சில உணவு முறைகளையும் அதன் மருத்துவ குணங்களையும் இக்கட்டூரையில் காண்போம்.

முக்கிய வார்த்தைகள்:
சித்தர்கள், உணவு, மருந்தும், உப்பு, நீர், பால், தாய்ப்பால், குணம், அரிசி, உளுந்து .