திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் எனும் ஈழத்துச் சிதம்ரபர புராணத்தில் சமுதாய விழுமியங்கள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-4
Year of Publication : 2024
Authors : Ms. Peranandhamduhaya


Citation:
MLA Style: Ms. Peranandhamduhaya, "Social Values ​​in Chithamrabara Puranam of Eelam, Tirutinnapurach Sundaresar Puranam" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I4 (2024): 32-40.
APA Style: Ms. Peranandhamduhaya, Social Values ​​in Chithamrabara Puranam of Eelam, Tirutinnapurach Sundaresar Puranam, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i4), 32-40.

சுருக்கம்:
ஈழத்தில் ஆங்கிலேயரது ஆட்சிக்காலம் முடிவுற்றதும் இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே தேசிய எழுச்சிக்காலம் உதயமாகியது. குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டுக்குரிய சமய இலக்கியங்களை நோக்கும் போது இலங்கையின் சிவாலயங்கள் மீது தோற்றம்பெற்ற சைவத்தலபுராணங்கள் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திருக்கேதீச்சர புராணம்,நகுலாசல புராணம்,நல்லூர் ஸ்ரீ கைலாசநாதர்தலம், திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் எனப்படும் ஈழத்துச்சிதம்பர புராணம் என்பவை இக்காலத்திற்குரிய தலபுராணங்களாகும். இத்தலங்கள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களின் சமுதாயக் கூறுகளின் அடிப்படையில் சைவம்சார்ந்த பண்பாட்டினை பிரதிபலித்துக் காட்டுவனவாக மேற்குறித்த தலங்களின் மீதுசைவத் தலபுராணங்கள் தோற்றம் பெற்றன. இச்சைவத் தலபுராணங்களானவை வெறுமனே சமயபக்தி இலக்கியம் என்பதனைத் தாண்டிசமூகப்பண்பாட்டுக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டவையாக விளங்குகின்றன. மகளிரைப் போற்றும்பண்பாடு, அறவியல் பண்பாடு போன்ற பல்வேறு சமூகக் கூறுகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. அந்தவகையில் இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிற் காரைநகரில் திண்ணபுரம் எனும் பிரிவிலுள்ள ஈழத்துச்சிதம்பரத்தில் கோயில் கொண்டருளிய சிவபிரான் மீது பாடப்பெற்றதே திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம் என்னும் ஈழத்துச்சிதம்பர புராணமாகும். இத்தல புராணத்தை புலவர் மணி இளமுருகனார் (1908-1975) இயற்றியுள்ளார். விழுமியம் என்பதை பொதுவாக அறம், ஒழுக்கம், நெறி என்று கருதுவர்.இப்புராணமானது கொண்டுள்ள சமுதாயப் பண்பாட்டிலே மக்கள் வாழ்வியல் கடைப்பிடித்தொழுக வேண்டிய விழுமியப்பண்பாட்டினை தன்னகத்தே கொண்டுள்ளமை சிறப்பிற்குரியதாகும். இப்புராணமானது விருந்தோம்பல் முறை, சத்தியம், தர்மம், ஓழுக்கவியல் என்பனவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆனாலும் இன்று சமூக விழுமியங்களானவை சமூகத்தின் மத்தியில் மெல்ல அருகிக் கொண்டே செல்கின்றது. ஆகவே ஈழத்துச்சிதம்பர புராணத்திலுள்ள சமூகவிழுமியங்களைவெளிக்கொணரலே இவ்வாய்;வின் பிரதான நோக்கமாக அமைகின்றது. இவ்வாய்வானது விபரண ஆய்வு முறையியல், வரலாற்றாய்வு முறையியல் மற்றும் ஒப்பீட்டாய்வு முறையியலை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

முக்கிய வார்த்தைகள்:
திருத்திண்ணபுரச் சுந்தரேசர் புராணம், தலபுராணம்,ஈழம், சமூகம், விழுமியம்.

துணைநூற்பட்டியல்:
[1] இளமுருகனார், சோ., வைத்தீசுவரக்குருக்கள்,க., (ப.ஆ.),(1972),ஈழத்துச் சிதம்பரபுராணம்,ஈழத்துச் சிதம்பர தேவத்தானம், காரைநகர்.
[2] இளநிலைக் கல்வியியல், சிறப்புக்கல்வி (டீ.நுன.ளுpட.நுன) பருவம்-1,ளுநுனு-12இ சமகால இந்தியாவில் கல்வி,சிறப்புக்கல்வி மற்றும் மறுவாழ்வுப்புலம் தமிழ்நாடு திறந்த மற்றும் மறுவாழ்வுப்புலம் தமிழ்நாடு திறந்த பல்;கலைக்கழம், சென்னை.
[3] சிவலிங்கராஜா,எஸ்.,(2009),ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி, குமரன் புத்தக இல்லம், கொழும்பு- சென்னை.
[4] சுகந்தினி, சி.,(2020), இலங்கை சைவத் தலபுராணங்கள் ஒரு பண்பாட்டியல் ஆய்வு, கரிகணன் நிறுவனம், யாழ்ப்பாணம் , இலங்கை.
[5] சோமசுந்தரம். கு., (1995). மனித விழுமியங்கள். ரஜி வெளியீடு. கொழும்பு.
[6] ….…………., (2010). மனித வாழ்க்கை விழுமியங்கள். ரஜி வெளியீடு, தெகிவளை.
[7] பக்த வற்சல பாரதி, 2003, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
[8] பிலேந்திரன். ஞா., (1996). விழுமியக்கல்வி. கிறிஸ்தவ மன்றம். யாழ்-பல்கலைக்கழகம்.