இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இளைஞர்களின் பங்களிப்புகளும் சவால்களும் : ஒலுவில் பிரதேச இளைஞர்களை மையப்படுத்திய ஆய்வு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-4 Year of Publication : 2024 Authors : T. Mohamed Mufas |

|
Citation:
MLA Style: T. Mohamed Mufas, "Contributions and Challenges of Youth in Ethnic Reconciliation: A Focused Study on Youth in Oluville Region" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I4 (2024): 5-20.
APA Style: T. Mohamed Mufas, Contributions and Challenges of Youth in Ethnic Reconciliation: A Focused Study on Youth in Oluville Region, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i4), 5-20.
|
சுருக்கம்:
பொதுவாக உலகில் உள்ள பல நாடுகள் பல்லின சமூக அமைப்பினை கொண்டுள்ளது. அவற்றில் இலங்கையும் ஒன்றாகும். இவ்வாறு பல்லின மக்களைக்கொண்ட நாடுகளில் இனங்களுக்கிடையில் அவ்வப்போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன இதற்கு இலங்கையும் ஒரு எடுத்துக்காட்டாகும். அந்த வகையில் இலங்கையிலுள்ள இளைஞர்கள் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அண்மைக்காலங்களில் பாரிய பங்களிப்புகளை வழங்கிவருகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வானது ஒலுவில் பிரதேச இளைஞர்கள் பல்லின மக்களுக்கிடையிலான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள், அதற்காக இளைஞர்களின் பங்களிப்புகள் என்பன குறித்துக் கவனம் செலுத்தப்படுகின்றது. அத்தோடு பல்லின சமூகங்களை ஒன்றிணைப்பதற்காக இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளும், அதன் போது அவர்கள் எதிர்நோக்கக்கூடிய சவால்கள் போன்ற விடயங்களை ஆராய்ந்து வெளிக்கொண்டுவருவதே இவ்வாய்வின் நோக்கங்களாகும். இன்றைய சூழலில் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பல தொண்டு நிறுவனங்கள் இளைஞர்களை இணைத்து பயிற்சிப் பட்டறைகளையும் இதன் மூலமாக பல்வேறு வேலைத்திட்டங்களையும் செயற்படுத்தி இன நல்லிணக்கத்திற்கு பங்களிப்பினை வழங்கி வருகின்றது. இவ் வேலைத்திட்டங்களின் மூலமாக ஒலுவில் பிரதேச இளைஞர்களிடையே இனப் பாகுபாடுகளும் முரண்பாடுகளும் இழிவளவாக்கப்பட்டு இலங்கையில் காணப்படுகின்ற பல்லின சமூக கட்டமைப்புக்கிடையே புரிந்துணைர்வும் ஒற்றுமையும் இன நல்லுறவும் உயர்வடையும் என்ற அடிப்படையில் இளைஞர்களை மையப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி ஒலுவில் பிரதேச இளைஞர்கள் ஆரம்ப காலங்களை விட அண்மைக்காலமாக பல்லின மக்களுக்கிடையிலான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதுடன் இதற்கு இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதை இலக்காக கொண்ட தொண்டு நிறுவனங்கள், இப்பிரதேச இளைஞர்கள், ஊடகம் என்ற வகையில் ஒலுவில் ஊடகம் (Oluvil Media) மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் போன்றோரின் பங்களிப்புகள் முக்கியமானதாக காணப்படுவதனை இவ் ஆய்வின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இப்பிரதேசத்தின் பொது மக்களும் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது துணை நிற்பதனையும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் இப்பிரதேச இளைஞர்கள் இன நல்லிணக்க ஏற்படுத்த பல செயற்பாடுகளையும் பங்களிப்புகளையும் மேற்கொண்டாலும் இன நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இளைஞர்கள் மொழிப்பிரச்சனை, இன நல்லிணக்கப்பற்றிய விழிப்புணர்வு போதானைமை, கடந்த காலங்களில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை நிகழ்வுகளை மறக்காமை, இப்பிரதேச இளைஞர்களை ஒன்றிணைப்பதிலுள்ள சிக்கல், இளைஞர் சமுதாயத்தின் ஒரு பகுதியினர் சமூக அக்கறையற்றவர்களாக காணப்படுதல், மாற்றுமத சகோதரர்கள் இப்பிரதேசத்திலிருந்து தூரப்பிரதேசங்களில் வசிப்பது போன்ற பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கின்றனர். ஆகவேதான் ஆய்வுப்பிரதேசத்தில் இன நல்லுறவினை ஏற்படுத்ததுவதில் இவ்வாறான சவால்களின் காரணமாக இவர்களுடைய பங்களிப்பும் போதாத நிலையும் காணப்படுகின்றது என்பதனை ஆய்வுப்பிரச்சினையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வாய்வானது பண்பு ரீதியான விவரணப் பகுப்பாய்வு முறையாக காணப்படுவதோடு இதற்கான தரவுகள் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. முதலாம் நிலைத்தரவுகள் அவதானம், நேர்காணல் மூலம் பெறப்பட்டுள்ளதுடன் இரண்டாம் நிலைத் தரவுகள் நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இணையத்தளங்களிலிருந்து பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: இளைஞர்கள், பல்லின மக்கள், இன நல்லிணக்கம், ஒலுவில் பிரதேசம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] Aliff, S.M. (2016). Reconciliation in post war Sri Lanka. Retrieved from : http://www.researchgate.net/publication/307905734.
[2] Emelie molleli. (2012). Sri Lanka unites and reconciliation-Transformation through change agents of a war infected nation. www.diva-portal.org
[3] Minsara. J.F. (2020). A Study on social harmony based on Buddhist and Muslim relationship Sri Lanka, Department of Islamic Studies, South Eastern University of Sri Lanka.
[4] வினோதினி ராNஐந்திரன் (2021). இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்கேற்பு : தலவாக்கலை லிந்துலை பிரதேச இளைஞர்களின் இன நல்லுறவு சமாதான செயற்பாடுகளை மையப்படுத்திய ஓர் ஆய்வு, Plural Sri Lanka Exploring Paths to Reconciliation, National Peace Council of Sri Lanka (P 270-289).
[5] விஜயகுமார். ரா, மங்களதர்சினி சரந்தாமன் (2021). சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்கேற்பு - யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு, Plural Sri Lanka Exploring Paths to Reconciliation, National Peace Council of Sri Lanka (P 392-417).
[6] (n.d). இலங்கையை மீளிணக்கம் செய்தல் : இளைஞர்களின் கருத்துக்களை உள்வாங்குதல், சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம். Retrieved from : https://cejsrilanka.org/ wp-content/uploads/ ReconcilingVoices- of-Youth-Count- Tamil-Press-1-1.pdf
[7] பாத்திமா ஸஜீதா. ரீ. (2019). இலங்கை அரசியலில் சிங்கள-பௌத்த-முஸ்லிம் உறவு, Retrieved from : https://www.researchgate.net/ publication/ 343904658_Sinhala- Buddhist-Muslim_ relation_in_Sri _Lankan_Politics? _tp=eyJjb250ZXh 0Ijp7ImZpcnN0 UGFnZSI6InB1 YmxpY2F0aW9uI iwicGFnZSI6I nByb2ZpbGUifX0
[8] பழீல் எம்.ஏ. (2001). இலங்கையின் பன்மைச் சமூக கலாசாரக் கூறுகளிடையே நல்லிணக்கம், கல்முனை - கோல்டன் அச்சகம்
[9] நடசேன், ஜி. (2000). இலங்கை இன முரண்பாடுகளின் வரலாறு, அபிராமி விளம்பர நிறுவனம்
[10] நிஸ்பா. எம்.எஸ்.எப். (2019). சமகால இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முஸ்லிம்களின் பங்கு : களுத்துறை முஸ்லிம் சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு.
[11] சஜிதா. ரி.பா. (2017). யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையின் இன நல்லிணக்கம், அரசியல் விஞ்ஞானத்துறை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம். Retrieved from : https://www.researchgate.net/ publication/ 318348515/Ethnic_ Harmony in Post-war Sri Lanka
[12] (n.d). நல்லிணக்க மீள கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்கு, (வீரகேசரி) Retrieved from : https://www.virakesari.lk/article/64646 2019.09.20
[13] ஹபிதுல்லா. மு. (2019). இன நல்லுறவு, சமாதானம் எனபவற்றைக் கட்டியெழுப்புவதில் முஸ்லீம் சமய நிறுவனங்களின் பங்களிப்பு (கிண்ணியா ஐம்இய்யத்துல் உலமாவின் இன நல்லுறவு சமாதானச் செயற்பாடுகளை மையப்படுத்திய ஓர் ஆய்வு), கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை.
|