வடமொழி மரபில் சைவசித்தாந்தம்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-3
Year of Publication : 2024
Authors : Kalanithi N. Vaman


Citation:
MLA Style: Kalanithi N. Vaman, "Saivism in Vernacular Tradition" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 88-100.
APA Style: Kalanithi N. Vaman, Saivism in Vernacular Tradition, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 88-100.

சுருக்கம்:
சைவசித்தாந்தம் என்பது சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் மக்களின் பிரதானதத்துவக் கொள்கையாக இன்று வரை காணப்படுகின்றது. சிவனை முழுமுதற்தெய்வமாகக் கொண்ட சைவ சமயத்திற்குள் வேறுபட்ட தத்துவமரபுகள் ஆரம்பகாலம் முதல் நிலவிவந்தாலும் சைவசித்தாந்தக் கொள்கைக்குத் தனித்துவமான பண்பாட்டு வரலாறும், வாழ்வியல் முறைகளும் காணப்படுகின்றன. குறிப்பாகவே தாகமத்துடன் சைவசித்தாந்தம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. வேதத்தைப் பொதுவாகவும் ஆகமத்தைச் சிறப்பாகவும் தனது பிரமாணநூல்களாகக் கொண்டுள்ளது. இந்திய மெய்யியல்கள் தனியே அறிவுக் கொள்கையாகவோ, ஒழுக்கக் கொள்கையாகவோ அல்லது இவை இரண்டையும் உள்ளடக்கியனவாகவோ நிற்கின்றன. சைவசித்தாந்த மெய்யியலானது ஒருவனை வாழ்வியலினூடு ஆன்மீகத்திற்கு இட்டுச்செல்கின்றது என்பர். அந்தவகையில் அது தன்னை ஒரு சமயமாகவும் மெய்யியலாகவும் நிலை நிறுத்திக் கொள்கின்றது. சைவ சித்தாந்திகள் உண்மைப்பொருள்களாக பதி, பசு, பாசம் என்பவற்றை ஏற்றுநிற்பர். அநாதியான பசு உலகில் மீண்டும் மீண்டும் பிறந்து உழல்கின்றமைக்குக் காரணமாவது பாசமாகும். அப்பாசம் அநாதியாகவே பசுவைப் பீடித்திருக்கின்றது. பாசத்தினின்றும் நீங்கிப்பதியை அடைவதே பசுவின் இலட்சியம். இதுவே முக்தி என்பர். சைவ சித்தாந்த சிந்தனைகள் வடமொழியிலும், தமிழ் மொழியிலும் இடம் பெற்றுள்ள போதும்; வடமொழி மரபில் அதன் செல்வாக்குக் குறித்த ஆய்வுகள் மிக அரிதாகவே இடம் பெற்றுள்ளன. எனவே இவ்வாய்வானது வடமொழி மரபில் சைவவசித்தாந்தம் எனும் தலைப்பில் நிகழ்த்தப்பட்டுள்ளது. வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், புராண இதிகாசங்கள், அஷ்டப்பிரகரணங்கள் ஆகிய இலக்கியங்கள் இவ்வாய்விற்குப் பயன் படுத்தப்பட்டுள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
சைவசித்தாந்தம், வேதங்கள், ஆகமங்கள், அஷ்டப்பிரகரணங்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] அண்ணா (உரை), 1989, 108 உபநிஷத்சாரம், ஸ்ரீராமகிருஷ்ணமடம், மயிலாப்பூர்.
[2] சாங்கிருத்தியாயன்,தா., 1985, இந்துதத்துவஇயல், நியுசெஞ்சுரிபுக்ஹவுஸ், சென்னை.
[3] கலைவாணி,இரா., 1992, வேதபாரம்பரியமும்சைவசித்தாந்தமும், ஸ்ரீரெங்காபிரிண்டர்ஸ், மதுரை.
[4] சண்முகசுந்தரமுதலியார்,கொ., (பதி.), 1950, பௌஷ்கராகமம், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை.
[5] ஞானகுமாரன்,நா., 2012, சைவசித்தாந்தத்தெளிவு, தூண்டி, யாழ்ப்பாணம்.
[6] சிறிரதிதேவி, மா., 2000, மெய்கண்டசாத்திரங்களுக்குமுன்சைவசித்தாந்தம், (முதுதத்துவமாணிஆய்வேடு), யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், இலங்கை.
[7] சித்தாந்தசாத்திரம்பதினான்குமூலமும்உரையும், 1934, சைவசித்தாந்தமகாசமாசம், திருவருளகம், சென்னை.
[8] இந்துக்கலைக்களஞ்சியம்(தொகுதி-1), 1990, இந்துசமயகலாசாரஅலுவல்கள்திணைக்களம், கொழும்பு.
[9] Dunuwila, R., 1985, Saiva Siddhanta Theology, Motital Banarsidass, Delhi.
[10] Chakravatic M., 1986, Concept of Rudra – Siva through the ages, Motital Banarsidass, Delhi, Varanasi Patna – Madras.
[11] Piet. Johnh, 1952, Saiva Siddhanta Philosophy, The Christian literature Society for India, Medras.