முல்லைப்பாட்டில் மாந்தர்களின் மனநிலை


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-3
Year of Publication : 2024
Authors : G. Sindhu, Dr. R. Ravichandran


Citation:
MLA Style: G. Sindhu, Dr. R. Ravichandran, "Mood of Mandars in the bud" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 22-30.
APA Style: G. Sindhu, Dr. R. Ravichandran, Mood of Mandars in the bud, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 22-30.

சுருக்கம்:
தமிழிலக்கியங்கள் பழமையும், புதுமையும் நிறைந்த கருத்துக்களைக் கொண்டது. இதுவே கற்பு சார்ந்த அகப்பாடலாகக் காணப்படுகிறது. இந்நூலில் மாந்தர்கள் அனைவரும் தனக்காக மட்டுமின்றிப் பிறருக்காக வாழும் இயல்பினைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். முல்லை நிலம் கற்பிற்குப் பெயர் போனதாகும். ஐந்திணைகளில் குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற நான்கிற்கு இல்லாத, சிறப்பு முல்லைக்கு மட்டுமே உரியதாகும். திணை அடிப்படையில் அமைந்த நூல்களில் இதுவும் ஒன்றாகும். போரின் காரணமாகப் பிரிந்துச் சென்ற தலைவனை எண்ணித் தலைவி துயருற்றாள். தலைவியைத் தேற்றும் முகமாக முதுபெண்டிர் நற்சொல் கேட்டு திருமாலை வணங்கிநின்றனர். முல்லை நில பெண்ணான ஆயர் மகளின் கூற்றுத் தலைவிக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. கன்றினுடையப் பசிக்கு ஆய்ச்சியரின் பதில் ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. யானையைப் பழக்கப்் பழக்கக் கூடிய பாகர் வடமொழியறிவைப் பெற்றிருந்தனர். பாசறையில் மன்னனுக்கு உற்ற துணையாகப் பெண்கள் வலிமையுடனும், திண்ணிய நெஞ்சுடனும் காணப்பட்டனர். அரசனுக்கு போர்க்களத்தில் உதவியாக மெய்க்காப்பளர்கள் ஊமை மிலேச்சர்கள் எனக் காவல் பணியில் சிறப்பாகப் பணியாற்றினார். அரசனுக்கு கிரேக்க நாட்டு ஊமை மிலேச்சர்கள் போர்த்தொழிலில் ஈடுபட்டு உதவி புரிந்துள்ளனர். என்பதை முல்லைப்பாட்டின் வழி அறியலாகும் செய்திகளாகும். அரசன் பாசறையில் போர்த்தொழிலை விடுத்து, வேறு சிந்திக்காதத் தலைவனின் கடமையும், இல்லில் அரசனைத் தவிர வேறு எண்ணமில்லாத தலைவியின் மாண்பும் போற்றத்தக்கது ஆகும். இதனை விரிவாக பின்வரும் ஆய்வுக் கட்டுரையின் வழி காண்போம்.

முக்கிய வார்த்தைகள்:
பாலை, முல்லை, திணை, தலைவி, பெண்கள்.

துணைநூற்பட்டியல்:
[1] கெளமாரிஸ்வரி, திருக்குறள் தெளிவுரை, குறள்.595, இராமையா பதிப்பகம், முதற்பதிப்பு ஏப்ரல்-2008, சென்னை – 600014.
[2] சுபாஷ் சந்திரபோஸ் (உரை), தொல்.பொருள் நூ.6, தமிழ்க்களஞ்சியம் – 3, தஞ்சாவூர் – 613001.
[3] முருகேசன் க.ப. (உரை),பத்துப்பாட்டு மூலமும் உரையும் ப.134, அ.11, சாரதா பதிப்பகம், முதற்பதிப்பு – 2009, சென்னை – 14.
[4] தட்சிணாமூர்த்தி.அ, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ப.249, யாழ் வெளியீடு, சென்னை – 05.
[5] முருகேசன் க.ப. (உரை), பத்துப்பாட்டு மூலமும் உரையும் ப. 135, அ.16, சாரதா பதிப்பகம், முதற்பதிப்பு – 2009, சென்னை – 14.
[6] தமிழமுதன் (உரை), கலித்தொகை மூலமும் உரையும், ப.260, சாரதா பதிப்பகம், சென்னை- 14.
[7] முருகேசன் க.ப. (உரை), பத்துப்பாட்டு மூலமும் உரையும் ப. 30, அ.16, சாரதா பதிப்பகம், முதற்பதிப்பு – 2009, சென்னை – 14.
[8] மேலது நூல், ப. 135, அ.23.
[9] மேலது நூல், அ.23.
[10] கெளமாரிஸ்வரி, திருக்குறள் தெளிவுரை, குறள்.393, இராமையா பதிப்பகம், முதற்பதிப்பு ஏப்ரல் – 2008, சென்னை – 600014.
[11] பாலையன் அ.ப. (உரை), பத்துப்பாட்டு மூலமும் உரையும், ப.137, அ.49)
[12] முருகேசன் க.ப. (உரை), பத்துப்பாட்டு மூலமும் உரையும் ப. 49, அ.16, சாரதா பதிப்பகம், முதற்பதிப்பு – 2009, சென்னை – 14.
[13] மேலது நூல், ப.224, அ. 101-103
[14] மேலது நூல், ப.138, அ 55-56
[15] மேலது நூல், ப. 138, அ.65-66
[16] சுபாஷ் சந்திரபோஸ் (உரை), தொல்.பொருள் நூ.64, தமிழ்க்களஞ்சியம்-3, தஞ்சாவூர் – 613001.
[17] முருகேசன் க.ப. (உரை), பத்துப்பாட்டு மூலமும் உரையும் ப. 139, அ.16, சாரதா பதிப்பகம், முதற்பதிப்பு – 2009, சென்னை – 14.
[18] சுபாஷ் சந்திரபோஷ் (உரை), தொல்.பொருள் நூ.192, தமிழ்க்களஞ்சியம்-3, தஞ்சாவூர் – 613001.
[19] சற்குணம்.மா (தொ.ஆ), பத்துப்பாட்டு ஆய்வுத்துணர், ப.73, சங்க இலக்கியப் பொதும்பர், விழுப்புரம்
[20] கிருட்டிணன்.அ, தமிழர் பண்பாட்டியல் (தொகுதி – 1), ப. 237, மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 01.