Citation:
MLA Style: Karalasingam Atputhan, "Role of observers in educational institutions" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I3 (2024): 1-7.
APA Style: Karalasingam Atputhan, Role of observers in educational institutions, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i3), 1-7.
|
சுருக்கம்:
இவ்வாய்வானது மட்டக்களப்பு மாவட்ட பாரம்பரிய தமிழ் அரங்குகளில் ஒன்றான வடமோடி தென்மோடி கூத்துக்களில் இன்றைய பார்வையாளர்களின் பங்கு கல்விசார் நிறுவனங்களில் எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை ஆய்வு செய்வதாக அமைகின்றது.
பாரம்பரிய அரங்குகள் கல்விசார் நிறுவனங்களில் குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளில் பாடத்திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அங்கும் தனக்கென பார்வையாளர்களையும்இ பங்காளர்களையும் இவ்வரங்கு கொண்டுள்ளது. இப்பார்வையாளர்களின் பங்கு தற்கால பாரம்பரிய அரங்கில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பதனை ஆய்வு செய்வது இவ்வாய்வின் முக்கிய நோக்கமாக அமைகின்றது.
நவீனகாலத்தின் தாக்கம் பாரம்பரிய அரங்கில் செல்வாக்குச் செலுத்தினாலும் இவ்வரங்கானது தனக்கான தன்மையினையும் தனித்துவத்தினையும், பண்பினையும் இன்றைய சூழ்நிலையிலும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய அரங்குகள் பல்வேறுபட்ட வகைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இன்றைய சூழ்நிலையில் பார்ப்போரின் (ளிநஉவயவழச); பங்கினை ஆராய்வது மிக முக்கியமானதாகவே காணப்படுகின்றது. இவ்வாய்வானது இரண்டு முறைகளில் தரவு சேகரிக்கப்படுகின்றது. ஆய்வு முறையில் முதல் நிலைத் தரவாக ஆய்வாளரினுடைய நேரடிப்பார்வை, பங்குபற்றல், நேர்காணல் என்பன அமைகின்றன. இரண்டாம் நிலைத்தரவாக பத்திரிகைகள், சஞ்சிகைகள், புத்தகங்கள், இணையங்கள் போன்றன பயன்படுத்தப்படுகின்றன.
|
துணைநூற்பட்டியல்:
[1] மௌனகுரு.சி, பழையதும் புதியதும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, 2015.
[2] நூலக நிறுவனம், 9ஆவது ஆண்டு விழா மலர், இலங்கை, 2013.
[3] குகநாதன்.இ, கூத்துக் கலைஞர், நேர்காணல், வயது 27, முனைக்காடு.
[4] மோகனதாசன்.க, கூத்தின் மீளுருவாக்கம்,விமோசனா, மட்டக்களப்பு, 2007.
[5] மௌனகுரு.சி, ஈழத்து தமிழ் நாடக அரங்கு, குமரன் புத்தகஇல்லம், கொழும்பு, 2008.
[6] மௌனகுரு.சி மட்டக்களப்பு மரபுவழி நாடகம குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2014.
[7] விவேகானந்தராசா.த, கூத்துக்கலைஞர், சி.விஜேந்திரனுடனான நேர்காணல்,மூன்றாம்கண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழு, மட்டக்களப்பு,2012.
[8] ஜெய்சங்கர்.சி,கூத்து மீளுருவாக்கம், கருத்து – பட்டறை, மிதேஷ் வளாகம், மதுரை,2011.
[9] கதிர்கமநாதன்இ அண்ணாவியார்இ நேர்காணல் கொக்கட்டிச்சோலை.
|