குரு வழிபாடும் ஆன்ம ஈடேற்றமும் - ஓர் நோக்கு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-2 Year of Publication : 2024 Authors : N. Subraj, E. Babyshalini |

|
Citation:
MLA Style: N. Subraj, E. Babyshalini, "Guru worship and spiritual attainment - a goal" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I2 (2024): 26-34.
APA Style: N. Subraj, E. Babyshalini, Guru worship and spiritual attainment - a goal, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i2), 26-34.
|
சுருக்கம்:
குரு, இலிங்க, சங்கம வழிபாடு ஆன்ம ஈடேற்றச் சாதனங்களாக சுட்டப்படுகின்றன. உலகியல் இன்பங்களே நிலையானவை என்று எண்ணி உயிர்கள் உலகப் பற்றுக்களை துறக்காது வாழ்கின்றன. அதற்குக் காரணம் ஒவ்வொரு உயிரையும் பீடித்துள்ள மலங்களினது தாக்கமாகும். இத்தகைய மலங்களின் பிடியிலிருந்து ஆன்மாவினை விடுவித்து இறைவனது திருவடியை அடைவதற்கு துணை செய்வதே ஆன்ம ஈடேற்றச் சாதனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.சைவ சித்தாந்தத்தின் தொகுப்பாக போற்றப்படுகின்ற மெய்கண்ட சாத்திரங்கள் இறைவன், ஆன்மா, உலகம், திருவருள் மற்றும் ஆன்ம ஈடேற்றம் எனப் பல விடயப்பரப்புக்களை தன்னகத்தே கொண்டமைந்ததாக விளங்குகின்றது. அந்தவகையில் இச்சாத்திரங்களில் ஆன்ம ஈடேற்றத்திற்குரிய பல்வேறு வழிமுறைகள் பற்றி எடுத்துரைக்கப்படுகின்றன.அதற்கமைய மெய்கண்ட சாத்திரங்களில் காணப்படுகின்ற குரு வழிபாடு பற்றி கருத்தியல்களை அடையாளம் காண்பதே இவ்வாய்வின் பிரதான நோக்கம் ஆகும். அத்துடன் ஆன்மீக ஈடேற்றத்திற்கு சாதனமாக குரு வழிபாடானது அமையுமாற்றினை எடுத்துரைத்தல், துணைநோக்கமாக அமைகின்றது. இவ்வாய்வானது பண்புசார் ஆய்வாக அமைந்துள்ளதோடு சைவ சித்தாந்த சாத்திரங்களில் காணப்படுகின்ற குரு வழிபாடு பற்றிய கருத்துக்களுடன் ஒப்பிட்டு ஆராய்வதினால் ஒப்பீட்டாய்வு மூலமும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் பிரதான நோக்கத்தினை நிறுவுவதற்காக முதலாம் நிலைத் தரவுகளே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
|
முக்கிய வார்த்தைகள்: குரு, இலிங்க, சங்கம், வழிபாடு, சைவ சித்தாந்தம், இறைவன், ஆன்மா, உலகம், திருவருள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] கந்தசாமி.சோ.ந. இந்திய தத்துவ களஞ்சியம், தென்னகத் தத்துவங்கள்,தொகுதி-3,மெய்யப்பன் பதிப்பகம், சென்னை-2003.
[2] மகாதேவன்.வு.ஆ.P.இந்து சமய தத்துவங்கள், தமிழ் வெளியீட்டுக் கழகம், சென்னை, 1964.
[3] Dasgupta.S. A History of Indian Philosophy, Volume-IV, Motilal Banarsidass Publication, Delhi, 1991.
[4] Subaraj, N., & Rathithevi, S. (2022). Educational thoughts of swami Vipulananda.
[5] Radhakrishnan.S. Indian Philosophy, Volume –2, Centenary Edition, OxfordUniversity Press, 1991.
[6] Sharma.C. A Critical Survey of Indian Philosophy, Motilal Banarsidass Publication, Varanasi, 1994.
|