செம்மாந்த வாழ்விற்கு வழிகாட்டும் கலித்தொகை |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-2 Year of Publication : 2024 Authors : G.Karthika, P.Ilaiyappillai |

|
Citation:
MLA Style: G.Karthika, P.Ilaiyappillai, "A lesson that guides the eternal life" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I2 (2024): 20-25.
APA Style: G.Karthika, P.Ilaiyappillai, A lesson that guides the eternal life, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i2), 20-25.
|
சுருக்கம்:
சங்க இலக்கிய நூல்களில் வாழ்வியல் நெறிகள் என்கின்ற அறக்கோட்பாடுகளே தலையாய நோக்கமாக காணப்படுகிறது. சங்க கால செவ்வியல் இலக்கியமான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாக அமைந்திருப்பது கலித்தொகை ஆகும். கற்றறிந்தார் ஏத்தும் கலி என்று போற்றப்படுகின்ற சிறப்புக்குரிய இந்நூலில் பண்டைய தமிழர்கள் மேன்மையான பண்பாட்டுடன் வாழ்ந்ததை புலவர்கள் தங்களது பாடல்களின் மூலம் உலகிற்கு வெளிப்படுத்தி உள்ளார்கள். கலித்தொகைப் பாடல்கள் அறநெறிகளோடு வாழவேண்டும் என்கின்ற பொதுவான கருத்துக்களைத் தெளிவுபட விளக்குகின்றன. நீதி இலக்கியங்களில் காணப்படும் கருத்துச் செறிவைப் போலவே கலித்தொகையிலும் அறக்கருத்துக்கள் மிகுந்துள்ளதை அறியமுடிகின்றது. செம்மாந்த வாழ்வு வாழும் வழியினைக் குறித்த அறவாழ்க்கையின் நோக்கத்தைச் செம்மையாகவும் அழுத்தமாகவும் கலித்தொகைப் பாடல்கள் தெளிவிக்கின்றன. அக்காலத்திற்கு மட்டுமல்ல இக்காலதிற்கும், எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் புலவர்கள் பாடிய அறநெறி கருத்துக்களை வருங்கால சமுதாயத்திற்கு எடுத்துக்கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: சங்க இலக்கியம், எட்டுத்தொகை, கலித்தொகை.
|
துணைநூற்பட்டியல்:
[1] வ.சு.மாணிக்கனார், கலித்தொகை மூலமும் உரையும், பூம்புகர் பதிப்பகம் சென்னை, 2009.
[2] மயிலை சீனி. வேங்கடசாமி, சங்க கால மக்கள் வாழ்க்கை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்., சென்னை, முதல் பதிப்பு: மார்ச், 1974.
[3] சாமி சிதம்பரனார், எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும், இலக்கிய நிலையம்,சென்னை, 1974.
|