சமய இலக்கியங்களில் – சிற்றிலக்கிய வாழ்வியல் கோட்பாடுகள் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-2 Year of Publication : 2024 Authors : Dr.D.Samuthiraraj |

|
Citation:
MLA Style: Dr.D.Samuthiraraj, "In religious literature – biographical principles of small literature" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I2 (2024): 15-19.
APA Style: Dr.D.Samuthiraraj, In religious literature – biographical principles of small literature, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i2), 15-19.
|
சுருக்கம்:
மொழி என்பது இறைவனைப் போன்று அனாதி ஆனது அன்று. மனிதசமுதாயம் எப்படிச் சிந்திக்கின்றதோ அந்த நிலையில் வளர்வது மொழியாகும். அவ்வகையில் தமிழோடு தொடர்பு கொண்டு மனித சமுதாயத்தைப் பண்படுத்தியவை சமய இலக்கியங்கள் ஆகும். சமய இலக்கியங்கள் இம்மை வாழ்வில் செம்மையாக வாழ்ந்தால் இறைவனின் திருவடி அரிதாகக் கிடைக்கும் என்பதை வலியுறுத்துகின்றன. சமண, பெளத்த இலக்கியங்களும் சைவ, வைணவ இலக்கியங்களும், கிறிஸ்தவ, இசுலாமிய இலக்கியங்களும் தமிழோடு உறவாடியமையும் தமிழைவளர்த்தமையும் போற்றற்குரியன. மனித வாழ்வைப் பக்குவப்படுத்தி, தனிமனித, சமுதாய ஒழுகலாறுகளைக் கற்பித்தவை இச்சமய இலக்கியங்களே எனலாம். இருப்பினும், சைவசமயம் பன்னிரு திருமுறைகள் வழியும் சைவசித்தாந்த சாத்திரங்கள் வழியும் தமிழுக்குச் செய்துள்ள தொண்டு அளப்பரியது ஆகும். சைவத்தைப் போன்றே வைணவமும் தமிழை வளர்ப்பதையும் தமிழ் வைணவத்தை வளர்ப்பதையும் பன்னிரு ஆழ்வார்களின் சமயத் தொண்டு வழியாகவும் அவர்களது பாசுரங்களின் தொகுப்பாகிய நாலாயிரத்திவ்யப்பிரபந்தத்தின் வழியாகவும் அறிய முடிகின்றன. இருப்பினும், தமிழ்மொழி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப இலக்கியங்களைப் பெற்றுள்ளது. தமிழால் சமயங்களும் சமயங்களால் தமிழும் வாழ்ந்து வருவதை இன்றும் காணமுடிகின்றன. உலகத்தில் பலநாடுகளில் பக்தியுணர்வும் சமயவளர்ச்சியும் இருப்பினும் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் தொடர்பாகத் தோன்றிய பக்தி உணர்வும் சமயவளர்ச்சியும் தனித்தன்மை வாய்ந்தவை. இதனால், தமிழ் மொழியை முறையே ‘சங்கத்தமிழ்’ ‘தெய்வத்தமிழ்’ ‘வளரும்தமிழ்’ என வழங்குவது மிகப்பொருத்தமாகும். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பதினேழாம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதியை இடைக்காலத் தமிழ் என்று வரையறை செய்யப்படுகின்றன. காரைக்காலம்மையார் புராணம், சமய இலக்கியங்கள், கம்ப இராமாயணம், வில்லிப்பாரதம், போன்ற நூல்களில் காணப்படும் சிற்றிலக்கிய வாழ்வியல் நெறிமுறைகள் சார்ந்தக் கருத்துக்கள் அதிகம் என்றாலும் இலக்கண நூலான தொல்காப்பியம் மற்றும் பக்தி இலக்கியமான தேவராம், நாலாயிரத்திவ்யப்பிரபந்தம் வெளிப்படுத்தும் வாழ்வியல் கருத்துக்கள் அன்றாடவாழ்க்கை முறையில் நம்மோடு செயல்வடிவமாக பயணிக்கிறசூழலில், சமய இலக்கியங்களில் சிற்றிலக்கியம் எடுத்துரைக்கும் சிலவாழ்வியல் செய்திகளை இக்கட்டுரையின் வாயிலாக சான்றுகளோடுபார்ப்போம்.
|
முக்கிய வார்த்தைகள்: மொழி, இலக்கியங்கள், சமய, வாழ்வில், சைவ, வைணவ, கிறிஸ்தவ, இசுலாமிய, சங்கத்தமிழ், தெய்வத்தமிழ், வளரும்தமிழ்.
|
துணைநூற்பட்டியல்:
[1] டாக்டர்கி. ஆதிநாராயணன், சிற்றிலக்கியவகையும் வகைமையும், பக்.1,16,19,21, பாரிநிலையம், சென்னை.
[2] ஞர.மாணிக்கவாசகன், பதிற்றுப்பத்து, பக், 161, உமாபதிப்பகம், சென்னை.
[3] டாக்டர் ப. அருணாசலம், பக்தி இலக்கியம், பக், 28, பாரிபுத்தகப்பண்ணை, சென்னை.
[4] முனைவர் க.திலகவதி, புறநானூறு, பக், 3, நியூ செஞ்சுரிபுக்ஹவுஸ் (பி) லிட், சென்னை.
[5] டாக்டர் சு.சக்திவேல், தமிழ்மொழி வரலாறு, பக், 155, 12, மாணிக்கவாசர்பதிப்பகம், சென்னை.
|