Citation:
MLA Style: Kalanidhi N. Vaman, "Saiva ideology in the Tamil language tradition" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I2 (2024): 6-14.
APA Style: Kalanidhi N. Vaman, Saiva ideology in the Tamil language tradition, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i2), 6-14.
|
சுருக்கம்:
இந்திய தத்துவச்சிந்தனை மரபில் இன்றும் நிலைத்து வாழும் ஒரு சமயதத்துவமாக விளங்கு வது சைவசித்தாந்தமாகும். சிவனை முழுமுதல் இறைவனாகக் கொண்டமைந்த சைவ சித்தாந்தமானது தத்துவரீதியிலும், சமய நிலையிலும் செழுமைக்குரிய வகையில் அமைந்துள்ளது. பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளும் உண்மை என்பதே அத்தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையாகும். சைவ சித்தாந்தக் கருத்துக்களின் தோற்றம் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. தமிழரின் தொன்மை இலக்கியங்களாக எடுத்தாளப்படும் சங்க இலக்கியங்கள், திருக்குறள், திருமுறைகள் போன்றவற்றில் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ள போதும், முறைப்படுத்தப் பட்ட ஒரு தத்துவ நெறியாக தமிழரிடையே தமிழ் மொழியில் 13ஆம், 14 ஆம் நூற்றாண்டளவிலேயே வளர்ச்சியடைந்த தென்பதைப் பலரும் வலியுறுத்தியுள்ளனர். அதாவது சைவ சித்தாந்தத்தின் மூலநூல்களாகிய மெய்கண்டசாஸ்திர நூல்களின் தோற்றத்துடன் சைவ சித்தாந்தம் தமிழர் தத்துவமாக உருவாக்கம் பெற்றதை இந்திய தத்துவஞான வரலாறு எடுத்துக்காட்டும்.
|
துணைநூற்பட்டியல்:
[1] Piet, John,H., 1952, Saiva Siddnanta Philosophy, The Christian Literature Society for India, Medras.
[2] Sivapadasundaram,S., 1951, An Out line of Sivagnanapodam, Sivaprakasa Press, Jaffna.
[3] Dunuwila,R., 1985, Saiva Siddhanta Theology, Motital Banarsidass, Delhi.
[4] குன்றக்குடிஅடிகளார், 1965, தமிழர்கண்டநெறி, குரும்பசிட்டிசன்மார்க்கசபை 30ஆம்ஆண்டுநிறைவுவிழாமலர், சன்மார்க்கசபை, குரும்பசிட்டி.
[5] ஞானகுமாரன்,நா., 2012, சைவசித்தாந்தத்தெளிவு, தூண்டி, யாழ்ப்பாணம்.
[6] கலைவாணி,இரா., 1992, வேதபாரம்பரியமும்சைவசித்தாந்தமும், ஸ்ரீரெங்காபிரிண்டர்ஸ், மதுரை.
[7] சித்தாந்தசாத்திரம்பதினான்குமூலமும்உரையும், 1934, சைவசித்தாந்தமகாசமாசம், திருவருளகம், சென்னை.
|