திருகோணமலை வன்னியர்களின் அரசியல் அதிகாரப் போக்கு - ஒரு வரலாற்றுப் பார்வை |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-1 Year of Publication : 2024 Authors : S.Suthirsana, Mrs. Gauri Laxmikanthan |

|
Citation:
MLA Style: S.Suthirsana, Mrs. Gauri Laxmikanthan, "Political Power Trend of Trincomalee Vanniyyas - A Historical Perspective" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I1 (2024): 66-72.
APA Style: S.Suthirsana, Mrs. Gauri Laxmikanthan, Political Power Trend of Trincomalee Vanniyyas - A Historical Perspective, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i1), 66-72.
|
சுருக்கம்:
இலங்கையின் மத்திய காலப்பகுதிகளில் தமிழர் வாழும் அனேகமான பிரதேசங்கள் வன்னிச் சிற்றரசர்களின் ஆட்சியின் கீழ் ஆளப்பட்டன. திருகோணமலைப் பிராந்தியத்தில் திருகோணமலைப் பற்று, கட்டுக்குளப் பற்று, தம்பலகாமப் பற்று, கொட்டியாரப் பற்று என்ற நான்கு வன்னிப் பற்றுக்கள் காணப்பட்டுள்ளன. பிரித்தானியர் ஆட்சி வலுப்பெறும் வரை இலங்கையின் அரசியல் வரலாற்றிலும், நிர்வாக முறையிலும் வன்னியர்கள் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்துள்ளனர். ஒரு பிரதேசத்தின் ஆட்சியாளர்கள் என்ற வகையில் வன்னிமைகள் பொருளாதாரத்தில் வளம் பெற்றே இருந்துள்ளனர். ஆட்சியதிகாரம், சமூக வழமைகள் பொருளாதார நிலை போன்றவற்றில் உயர்ந்ததொரு நிலையிலேயே இருந்துள்ளனர். எனினும் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் ஆகிய ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்களின் கீழ் திருகோணமலை வன்னிமைகளின் சுதந்திரமான ஆட்சியானது பல சவால்களுக்குட்பட்டது. மத்திய காலம் முதலாகப் பரம்பரை பரம்பரையாக வன்னியர்கள் பதவி வகித்து வந்த போதிலும் பிற்பட்ட காலங்களில் பிரித்தானியர்களே வன்னிபங்களை நியமித்து வந்துள்ளனர். காலனித்துவ காலத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர்கள் வரி செலுத்தியே வந்துள்ளனர். மேலும் ஐரோப்பியர்களின் கட்டுப்பாட்டினுள்ளே வன்னிப் பற்றுக்கள் இருந்துள்ளன. ஆட்சியதிகாரத்திலும், சமூக வழமைகளிலும், பொருளாதார நிலையிலும் வன்னிமைகள் பெற்றிருந்த முக்கியத்துவம் படிப்படியாகக் குறைந்து கொண்டே போயுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
|
முக்கிய வார்த்தைகள்: வன்னியர், காலனித்துவம், பற்று.
|
துணைநூற்பட்டியல்:
[1] வடிவேல்.இ (ப.ஆ). (1993). கோணேசர் கல்வெட்டு. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம். கொழும்பு.
[2] பத்மநாதன்.சி. (2002). இலங்கைத் தமிழர் தேசவழமைகளும் சமூக வழமைகளும். குமரன் புத்தக இல்லம். கொழும்பு – சென்னை.
[3] Thomas.G.P. (1940). The History of Trincomalee. Colombo: The Times of Ceylon Ltd, Colombo.
[4] சரவணபவன்.க. (2010). காலனித்துவ திருகோணமலை. திருகோணமலை வெளியீட்டாளர்கள். திருகோணமலை.
|