பிரதேச அபிவிருத்தியில் இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் வகிபாகம் - ஒரு கோட்பாட்டுப் பகுப்பாய்வு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-1
Year of Publication : 2024
Authors : Professor Velupillai Gunaratnam


Citation:
MLA Style: Professor Velupillai Gunaratnam, "Role of Local Government Institutions in Regional Development in Sri Lanka - A Theoretical Analysis" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I1 (2024): 45-57.
APA Style: Professor Velupillai Gunaratnam, Role of Local Government Institutions in Regional Development in Sri Lanka - A Theoretical Analysis, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i1), 45-57.

சுருக்கம்:
இலங்கையில் பிரதேச அபிவிருத்திச் செயற்பாடுகளில் உள்ளூராட்சி நிறுவனங்களின் வகிபாகம் மிகவும் உயர்வனதாகும். இலங்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் தோற்றுவாய் நீண்ட வரலாற்று ஓட்டத்தைக் கொண்டது. இலங்கையில் மன்னர்களின் நிர்வாகத்தில் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உள்ளூராட்சி முறை வழக்கத்தில் இருந்ததாக மகாவம்சத்திலும், பண்டைய நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயினும் சனநாயக ரீதியில் அமைந்த உள்ளூராட்சி அமைப்புக்கு 1920ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமே உந்துசக்தியாக அமைந்தது. ஆகவே, ஆசியாவிலே முதன்முதலாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நகரசபை நிறுவப்பட்டது இலங்கையிலேயேயாகும். அதுமட்டுமன்றி, இலங்கையில் முதலாவதாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட நகர முதல்வராக பதவியேற்றவர் டாக்டர் இரத்தினஜோதி சரவணமுத்து என்னும் தமிழர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். உள்ளூராட்சி அரசாங்கம் என்பது மத்தியரசிற்கு உதவியளிப்பதற்காக பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்டு மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட, சுயாட்சி உரிமை உடைய நேரடியானதும் மறைமுகமானதுமான வழிகளில் பலவிதமான சேவைகளை மக்களுக்கு வழங்குகின்ற உள்ளூர் வரிகளினால் பகுதியளவில் நிதியூட்டப்படுகின்ற சபைகளை குறிப்பதாகும் என வரையறுக்கலாம். இந்த ஆய்வுக்கட்டுரையானது இலங்கையில் கட்டமைக்கப்பட்டுள்ள பல்வேறு உள்ளூராட்சி அரசமைப்புக்கள் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அவற்றின் செயற்பாடுகள், எதிர்கொள்கின்ற சவால்கள் என்பவற்றினையும் சிறப்பான வகையில் செயற்படுவதற்காக பின்பற்றுகின்ற முறைகளையும் கோட்பாட்டுப் பகுப்பாய்வுக் உள்ளாக்கி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

முக்கிய வார்த்தைகள்:
உள்ளூராட்சி நிறுவனங்கள், பிரதேச அபிவிருத்தி, இலங்கை அரசியல்.

துணைநூற்பட்டியல்:
[1] Allean. H.J.B, (1990), Cultivating the grass roots: Why local goverment matters, The Hague: International Union of Local Authorities.
[2] Clarke. M, & Stewart. J, (1991), The Choices for local government for the 1990s and beyond. Harlow: Longman.
[3] Fowsar. M.A.M, (2020), State and Local Government in Sri Lanka, SEUSL.
[4] Gomme, G.L, (1987), Lectures on the principles of the local government. UK:A. Constable and Co.
[5] G.R.Tressie Leitar, (1978), Local Government and Decentralized Administration in Sri Lanka, Lake House Investment LTD, Colombo.
[6] Heymans. C, & Totemeyer. G, (1988), Government by the people : the politics of local government in South Africa, Cape Town: Juta & Co Ltd.
[7] Hicks. U.K, (1957) - Local Government and Finance in Ceylon Planning Secretarial Colombo.
[8] Manor. J, (1997) The Political Economy of democratic decentralization, Washington : World Bank.
[9] Mawhood. P, (1983), Local government in the third world, New York : Wiley and Sons.
[10] Nanaya Kara. V.K, (1989), Local government In : Navaratna. V.T, Public Administration in Sri Lanka, A Symposium, Sri Lanka Institute of Development Administration.
[11] Wiswa Warnapala. W.A, (1993), Local Politics in Sri Lanka, An Analysis of the Local Government Election of May 1991. South Asian Publisher LTD, New Delhi.
[12] Sunday Observer, (2018 January 07), Testina New Hybrid Election System.
[13] தம்ம திசாநாயக்கா, (2007), பிரதேச அரசாங்க ஆட்சி CPA, கொழும்பு.