இலங்கையில் உள்ளூராட்சி அரசாங்கமும் அது எதிர்நோக்கும் சவால்களும்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-1
Year of Publication : 2024
Authors : Arumugam Yogaraja


Citation:
MLA Style: Arumugam Yogaraja, "Local Government in Sri Lanka and the challenges it faces" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I1 (2024): 38-44.
APA Style: Arumugam Yogaraja, Local Government in Sri Lanka and the challenges it faces, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i1), 38-44.

சுருக்கம்:
இன்றைய நவீன ஜனநாயக முறையில் சுய அரசாங்க மாதிரியினை வளர்ப்பதில் உள்ளுராட்சி அரசாங்கங்கள் மிகுந்த பங்களிப்பு செய்யக்கூடியவை என தேசிய, சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும் இதனால் எல்லா அதிகாரங்களையும் ஆணைகளையும் மத்தியிலிருந்து கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்காமல் உள்ர் அமைப்புகளுக்கு அதிகாரத்தை பன்முகப்படுத்துகின்ற செயல்முறையினூடாக அரசியல் மற்றும் நிர்வாக முறைமை அபிவிருத்தி திட்டங்கள் வலுப்படுத்தப்படலாம். இதனால் ஜனநாயக நடைமுறைகளை மக்களுக்கு அருகாமையில் கொண்டுவர உள்ளூர் அரசாங்க முறை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. உள்ளூராட்சி மற்றும் சுய அரசாங்கம் பற்றிய கருத்தியல் அதன் பல் பரிமாணத் தன்மை காரணமாக கல்வியியல் கலந்துரையாடல்கள் மற்றும் நடைமுறையிலும் சவால்கள் பலவற்றை கொண்டதாக அமைந்துள்ளது. அத்துடன் உள்ளூராட்சி அரசாங்கங்களுக்கு எந்த அளவிற்கு மத்திய அரசு உள்ர் சுயாட்சி வழங்க வேண்டும் என்பதில் உலகளாவிய பொது உடன்பாடொன்றும் கிடையாது. இந்த நிலையில் எவ்வளவு அதிகாரம் பன்முகப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டு சூழ்நிலைக்கேற்ப அவற்றை வெளிப்படுத்துகின்றன. அமெரிக்கா, இந்தியா, சுவிசர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ்; மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் சமச்சீரற்ற வகையில் இவ்வாறான பரவலாக்கம் இடம் பெற்றிருக்கின்றமை அந்த நாடுகளின் உள்ளூராட்சி முறைமையை ஆழமாக நோக்குகையில் புலனாகும். இந்தப் பின்னணியில் மூன்றாம் மண்டல நாடாகவும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவும் அமையப்பெற்றுள்ள இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் தனது செயற்பாட்டின் போது எதிர்நோக்கும் சவால்களை ஆய்வு செய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

முக்கிய வார்த்தைகள்:
அதிகாரப்பரவலாக்கம், சுயாட்சி, அதிகார சபைகள், நிதி சுயாதீனம், தேசிய கொள்கை, சட்டமன்ற அமைப்பு.

துணைநூற்பட்டியல்:
[1] Akurugeda, I.R, (2014) The politics government and Development in SriLanka : An analysis of the contribution of non- governmental organizations(NGOs) PHD. Thesis
[2] Akurugoda, I.R( 2015). Strengthening Local Government: Issues contrions angd proposels for reform.
[3] Eastern. D, (1973), System Anaysis and its classiacal critics. Political Science Review, 3
[4] Krishnamohan.T, (2016), Challenges towards Local self- Government: Sri Lanka, International journal of Research in commerce, It, Engineering and Social sciences (IJRCIESS), 3(III), 1- 16
[5] Uyagoda,J.(2015), Local government in the decentralization, Devolution and Local self- government discourses in Sri Lanka. In J. uyangoda (EDS), Local government and Local Democracy in Sri Lanka: institutional and Social dimensions, Social Scientistis’ Association (149 - 196)