இணையத்தில் தமிழ் பிழை திருத்திகளும் அவற்றின் அவசியங்களும் |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-1 Year of Publication : 2024 Authors : Dr.Iyyappan |

|
Citation:
MLA Style: Dr.Iyyappan, "Online Tamil Error Correctors and Their Needs" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I1 (2024): 29-37.
APA Style: Dr.Iyyappan, Online Tamil Error Correctors and Their Needs, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i1), 29-37.
|
சுருக்கம்:
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு கணினியின் பங்கு மகத்தானது. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தல், சரிபார்த்தல், தொகுத்தல் போன்ற பணிகள் கணினியின் மூலம் எளிதாக நிறைவேறிவிடுகிறது. தற்போது உள்ளீட்டுக் கருவியைப் பயன்படுத்தித் தமிழில் தட்டச்சுச் செய்து உள்ளிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ஆங்கிலத்தில் உள்ளது போலப் பிழை திருத்தும் (spell checker) வசதி தமிழில் இல்லாதது பெருங்குறையாயிருந்தது. எம்.எஸ் வேர்டு என்ற சொல் செயலி வழியாகத்தான் தமிழை உள்ளிடுவதும் வெளியிடுவதும் பெருமளவில் நடைபெற்று வருகிறது. இச்சொல் செயலி ஆங்கில சொல், தொடர் பிழைகளை வசதிகளைப் பெற்றிருக்கிறது. இதனைக் கொண்டு – தமிழ்ச் சொல், தொடர் பிழைகளை நீக்க இயலாது. எனவே இதற்கென தனித்த மென்பொருள் உருவாக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது சில பிழைதிருத்தி மென்பொருள்கள் கிடைத்துவருகின்றன.
நீச்சல்காரன் என்ற புனைபெயரைக் கொண்ட இராசாராமனால் வாணி என்ற சொற் பிழை திருத்தியும், நாவி என்ற தமிழ்ச் சந்திப்பிழை திருத்தி மென்பொருள் செயலியும் உருவாக்கப்பட்டது. இது ஆங்கிலத்தில் நாம் எழுதுபவற்றில் உள்ள இலக்கணப்பிழைகளைத் திருத்தம் செய்ய பல செயலிகள் உள்ளதை போல, தமிழிலும் சந்திப் பிழைகளைத் திருத்த, இந்த நாவி என்னும் செயலி பயன்படுகிறது. நாம் எழுதுவனவற்றை சிறு சிறு பத்திகளாக இச்செயலியினுள் உள்ளீடு செய்து சில நொடிகளில் அதிலுள்ள சந்திப்பிழைகளைத் திருத்தம் செய்துவிடலாம். இணையத்தில் இவர் உருவாக்கியது போன்ற மொழி திருத்திகள் முறையாக வேறு எந்த மொழிகளிலுமே கிடையாது. பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் உருவாக்கிய மென்தமிழ் சொல்லாளர் (அம்மா மென்பொருள்) என்ற சொல் செயலி தமிழைப் பிழையற எழுத உதவும் மென்பொருளாக விளங்குகிறது. இதனைக் கணினியில் நிறுவி, இதன்வழியாகவே உள்ளீடும் செய்யப்படவேண்டும். ஏறக்குறைய எம்.எஸ். வேர்டு சொல் செயலி போலவே இதனைத் தனிப்பட பயன்படுத்த இயலும். இது தமிழக அரசின் பரிந்துரையைப் பெற்றுத் தற்போது அம்மா மென்பொருள் என்ற நிலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இவை போன்ற சில தமிழ் பிழை திருத்திகள் கண்டுபிடித்திருப்பினும், ஒரு முமுமையான பிழை திருத்தி தமிழ்க் கணினி உலகத்திற்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதே உண்மை. இந்நிலையில் தற்போது கிடைத்துவரும் பிழைதிருத்திகள் பற்றியும் அவற்றின் அவசியத்தைப் பற்றியும் இக்கட்டுரை விளக்குகிறது.
|
முக்கிய வார்த்தைகள்: தமிழ் பிழை திருத்தி, நீச்சல் காரன், தெய்வசுந்தரம், வாணி, நாவி, அம்மா மென்பொருள்.
|
துணைநூற்பட்டியல்:
[1] R. krishnamoorthy, computer programming basic& fortran, j. j. publication, Madurai, reprint 1988, p.114.
[2] கா. செ. செல்லமுத்து, கணிப்பொறி ஒழுங்கும் பேசிக் மொழியும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1985, ப. 80.
[3] முனைவர் கு. சுப்பையா பிள்ளை, இயற்கை மொழியாய்வு தமிழ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003, ப.276.
[4] பேராசிரியர் இராசேந்திரன் சங்கரவேலாயுதன், முனைவர் இரா. அமுதா, தமிழில் எழுத்துப் பிழைத் திருத்தியும் இலக்கணப்பிழைத் திருத்தியும்,கோயம்புத்தூர், 2012, ப.199.
[5] பேராசிரியர் இராசேந்திரன் சங்கரவேலாயுதன், முனைவர் இரா. அமுதா, தமிழில் எழுத்துப் பிழைத் திருத்தியும் இலக்கணப்பிழைத் திருத்தியும்,கோயம்புத்தூர், 2012, ப.212-213.
[6] பேராசிரியர் இராசேந்திரன் சங்கரவேலாயுதன், முனைவர் இரா. அமுதா, தமிழில் எழுத்துப் பிழைத் திருத்தியும் இலக்கணப்பிழைத் திருத்தியும்,கோயம்புத்தூர், 2012, ப. 213.
[7] http://vaani.neechalkaran.com
[8] http://vaani.neechalkaran.com/classic.
[9] https://www.youtube.com/clip/UgkxgsqWLtiNvtWPY6CWjPBTpOw2Y6nrhu-8
[10] https://chrome.google.com/webstore/detail/egempnhgkhkmennejeammngadiigelbo
[11] https://www.youtube.com/watch?v=cVAmnKydY_I
[12] https://www.youtube.com/watch?v=BaOvrsQ8Urk
[13] http://apps.neechalkaran.com/oovan
[14] https://tech.neechalkaran.com/2022/02/blog-post.html
[15] https://vaanieditor.com/chatbot
[16] https://www.instagram.com/tamilgrammar/
[17] https://vaanieditor.com/grantham
[18] https://oss.neechalkaran.com/dictionary/
[19] https://oss.neechalkaran.com/tamilfonts/?preview=Tamilri_Chenet
[20] https://www.hindutamil.in/news/tamilnadu/168235-.html,15 Mar 2018
|