தமிழ் அற இலக்கியங்களில் கொல்லாமைச் சிந்தனைகள்


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-1
Year of Publication : 2024
Authors : M.Muvin


Citation:
MLA Style: M.Muvin, "Thoughts of Kollam in Tamil literature" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I1 (2024): 18-28.
APA Style: M.Muvin, Thoughts of Kollam in Tamil literature, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i1), 18-28.

சுருக்கம்:
உலக மக்களின் முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துக் கொடுப்பதில் அற இலக்கியங்களின் பங்குஅதிகமாக உள்ளது.பலநன்னெறிகள், உலகின் உன்னதமான வாழ்க்கைக்குமனிதனைஇட்டுச்செல்லும்நிலையில், தமிழிலும் பல அற இலக்கியங்கள் மனித வாழ்வின் உயர்ந்த அறங்களைப்போதிக்கின்றன. அனைத்துஅறங்களுக்கும் அடிப்படையான ஓர் அறமான, பிற உயிர்களைக்காத்தல் மற்றும் மதித்தல் எனும் தகுதியை உடைய கொல்லாமை எனும் அறம் உயர்வு மிக்கதாக கருதப்படுகிறது. மனிதன், விலங்குகள், பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றைக் கொல்லாதிருத்தல் கொல்லாமையாகும். எக்காரணம் கொண்டும் எவ்வுயிரையும் கொல்லாது அனைத்து உயிர்களுக்குமான உரிமையான உயிர்வாழும் உரிமையை உறுதி செய்தல் மனிதன் எனும் பண்பட்ட இனத்தின் ஆகப்பெரும் பண்பாட்டு உச்சமாகும். மனிதனின் பண்பட்டமனத்திற்குத் தக்கசான்றாகத் திகழ்வது கொல்லாமைச் சிந்தனையாகும். இன்று உலகில் கொலைகள்அதிகஅளவில் நிகழ்கின்றன. இதைத் தவிர்த்து, தனிமனிதன் மகிழ்ச்சியுடன்வாழவும், பிற உயிர்களை வாழவிடுவதற்கும், கொல்லாமைஎனும் உயர்நெறி அவசியமாகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் கொல்லாமை எனும் சிந்தனையுடன் இருத்தல் என்பது இன்று காலத்தின் தேவை என்பதன் முக்கிய அடிப்படையில், இத்தகைய கொல்லாமை தமிழ்ச் சமூகத்தில் தோன்றியபிறகு, காலத்தை வரையறுக்கும் அளவிற்கு நிலை பெற்ற சங்கம்மருவிய கால இலக்கியங்கள், அதாவது நீதி இலக்கியங்கள் பல்வேறு பட்ட அறங்களை வலியுறுத்தும் போதிலும், கொல்லாமை எனும் உயர்ந்த அறத்தின்முக்கியத்துவத்தையும், தமிழ்அறஇலக்கியங்களில்அவ்வறம் வலியுறுத்தப்பட்டிருக்கும் கருத்தாக்கத்தையும் தெள்ளிதின் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது.

முக்கிய வார்த்தைகள்:
கொல்லாமை, அறம், இலக்கியங்கள், நன்னெறிகள், மனிதன்.

துணைநூற்பட்டியல்:
[1] இராசாராம்துரை ( உஆ ), பதினெண்கீழ்க்கணக்கு 1,3, ( மூஉ ), முல்லைநிலையம், சென்னை, 2007
[2] சரவணன்ப ( உஆ ), நாலடியார் ( மூஉ ), சந்தியாபதிப்பகம், சென்னை, 2015
[3] பாலசுப்ரமணியன்குவெ, ( உஆ ), புறநானூறு 1 ( மூஉ ), நியூசெஞ்சரிபுக்ஹவுஸ், சென்னை, 2014
[4] புலியூர்க்கேசிகன் ( உஆ ), திருக்குறள் ( மூஉ ), பூம்புகார்பதிப்பகம், சென்னை, 2010
[5] மாணிக்கவாசகன்ஞா, ( உஆ ), சிறுபஞ்சமூலம் ( மூஉ ), சென்னை, 2016
[6] மாணிக்கவாசகன்ஞா, ( உஆ ), பழமொழிநானூறு ( மூஉ ), உமாபதிப்பகம், சென்னை, 2007
[7] மாதவன்சு, தமிழ்அறஇலக்கியங்களும்பௌத்தசமணஅறங்களும், நியூசெஞ்சரிபுக்ஹவுஸ், சென்னை 2017