சைவக்கல்வி வளர்ச்சியில் ஆறுமுகநாவலரின் பங்களிப்பு


International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal
Volume-6 Issue-1
Year of Publication : 2024
Authors : Mr. G. Balraj


Citation:
MLA Style: Mr. G. Balraj, "Arumukhanavar's contribution to the development of vegetarian education" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I1 (2024): 7-17.
APA Style: Mr. G. Balraj, Arumukhanavar's contribution to the development of vegetarian education, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i1), 7-17.

சுருக்கம்:
இலங்கை வரலாற்றினைப் பொறுத்தவரையில் சைவசமயமும் அதனோடு இணைந்த சைவக்கல்விப் பாரம்பரியமும் தொன்மைவாய்ந்தவையாகும். இவை யாழ்ப்பாணத்தமிழ் மன்னர் காலம்வரை செழிப்பான நிலையில் இருந்து வந்துள்ளதனை வரலாற்று ஆதாரங்கள் உணர்த்திநிற்கின்றன. இவ்வாறு சிறப்பானநிலையில் பேணப்பட்டு வந்தசைவசமயமும், சைவக்கல்விப்பாரம் பரியமும் ஐரோப்பியர்களின் ஆட்சியில் நிலைகுலையத் தொடங்கின. குறிப்பாக இலங்கையில் பிரித்தானியர்களின் ஆட்சியில் சைவசமயத்தவர்களின் பிரதேசங்களில் கிறிஸ்தவசமயமும் ஆங்கிலக்கல்வியுடன் கூடிய கிறிஸ்தவக்கல்வியும் வலிந்து பரப்பப்பட்டன. இதனால் சைவசமயத்தவர்கள் பாரம்பரியமாகபின் பற்றி வந்தசைவக்கல்விப்பாரம் பரியம் வழக்கொழியத் தொடங்கியது. இது சைவசமயத்தினை வெகுவாகப்பாதித்தது. இத்தகைய சூழலில்தான் ஆறுமுகநாவலர் தோற்றம் பெற்றார். தன்னை முழுமையாக சைவசமயத்திற்காக அர்ப்பணித்து, மிகத்தீவிரமாக சமயப்பணிகளையும் பிரசாரப்பணிகளையும் மேற்கொண்டார். இவரது பணிகளால் சைவக்கல்விப்பாரம் பரியம் மீண்டும் புத்துயிர் பெற்று சைவசமயம்மேலோங்கியது. ஆகவே பிரித்தானியர்களின் ஆட்சியில் நிலைகுலைந்திருந்த சைவக்கல்விப்பாரம் பரியத்தினைவளர்ச்சி பெறச்செய்வதற்காக ஆறுமுகநாவலர் ஆற்றியபணிகளை ஆராய்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்விற்கு வரலாற்றியல் ஆய்வுஅணுகுமுறையும்(Historical methodology), விபரணஆய்வு அணுகுமுறையும் (Discriptive methodology) உபயோகிக்கப்பட்டுள்ளன.

முக்கிய வார்த்தைகள்:
சைவசமயம், சைவக்கல்வி, பங்களிப்பு, ஆறுமுகநாவலர்.

துணைநூற்பட்டியல்:
[1] அறிவுடைநம்பி .ம.சா., (2012), 'சுவடிப்பதிப்புமுன்னோடிகள்', உலகத்தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
[2] கந்தசத்தியதாசன். செ.,(2010), 'சைவக்கல்விப்பாரம் பரியமும் சைவப்புலவர்களின் பங்களிப்பும்', பி.வி.ஆர்.ஆஃப்செட், சென்னை.
[3] பாக்கியம்.பொன்., (1970), 'நாவலர்சரித்திர ஆராய்ச்சி', வட்டுக்கோட்டைத் தமிழ்ச்சங்கம், சுழிபுரம்.
[4] சீவரத்தினம். சீ., (1962), நாவலர்சமயப்பணி', நாவலர் வித்தியாசாலை, யாழ்ப்பாணம்.
[5] சைவசமயம், (1978), விவேகானந்தசபைவெளியீடு.
[6] குமாரவடிவேல்.இ., (2003), 'நாவலர்கல்விமரபும் இன்றையதேவையும்', சைவசித்தாந்த மன்றம், கனடா.
[7] செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்., (2012), 'ஆறுமுகநாவலர் அவர்களின் பன்முகப்பணிகள்', சங்கத்தமிழ், கொழும்புத் தமிழ்ச்சங்கம், கொழும்பு.
[8] முருகையன்.இ.,(1979), 'கல்வியியல்நோக்கில்நாவலர்', நாவலர்நூற்றாண்டுமலர், ஸ்ரீலஸ்ரீஆறுமுகநாவலர்சபை.