ஆறுமுக நாவலரின் வழிகாட்டலில் சைவ ஒழுக்க வாழ்வியல் - ஒரு சமகால நோக்கு |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2024 by IRJTSR Journal Volume-6 Issue-1 Year of Publication : 2024 Authors : Marimuthu Prakashan |

|
Citation:
MLA Style: Marimuthu Prakashan, "Saiva Ethical Bioethics under the guidance of Arumukha Novel - A Contemporary Perspective" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V6.I1 (2024): 1-6.
APA Style: Marimuthu Prakashan, Saiva Ethical Bioethics under the guidance of Arumukha Novel - A Contemporary Perspective, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v6(i1), 1-6.
|
சுருக்கம்:
சமயங்கள் மனித வாழ்க்கையினை மேம்படுத்தி ஒவ்வொருவரும் சமூகத்தில் சிறந்த நிலையை அடைவதுடன் மறுமையிலும் நற்பேறு பெறுவதற்கான வழிகாட்டல்களை வழங்குபவையாக உள்ளன. ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெருஞ்சோதியான சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவ சமயத்தின் வழிகாட்டல்கள் இவற்றில் மிகச் சிறப்புடையவையாகும். தமிழர் நாகரிக வளர்ச்சியும் சைவ சமயமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் புற மதங்களின் தாக்கத்தினால் சைவ வாழ்வியல் சவாலுக்கு உள்ளாக்கப்பட்ட போது பல்வேறு சமயக் குரவர்கள் அதனைப் பாதுகாத்து, நெறிப்படுத்தியுள்ளனர். அவ்வாறான ஒரு சவாலே ஆறுமுக நாவலரின் காலத்தில் ஆங்கிலேயேர்களினால் ஏற்படுத்தப்பட்டது. இதன்போது சைவம் பின்பற்றுவதற்குரியதல்ல, அதன் தெய்வங்கள் வணங்குவதற்குரியவை அல்ல என்று கூறப்பட்டு சைவ வாழ்வியலை கீழ் நிலையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது ஒரு அவதார புருசராக, சமயக் குரவராக தன்னுடைய தனித்த ஆளுமையினால் சைவ ஒழுக்க வாழ்வியலின் சிறப்பினை பிரசங்கங்கள், எழுத்துக்கள் ஊடாக வெளிப்படுத்தி அதனை காத்துத் தந்தவர் நாவலர் பெருமான். இன்று சைவம் உலகெங்கும் பரவியிருந்தும் அதன் தத்துவார்த்தங்களை புரிந்து கொண்டு பின்பற்றுவது இல்லாமையானது பல்வேறு சமய சமூக ஒழுக்கவியல் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறான ஒரு நிலையிலேயே நாவலரின் பெருநோக்கான சைவத்தின் ஒழுக்க வாழ்க்கைக்கான வழிகாட்டல்களை கசடற அறிந்து பின்பற்றுகின்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதனை மனதில் கொண்டு அதன் பொருட்டு அவர் பின்பற்றிய முறைகளையும், முன்வைத்துள்ள ஆலோசனைகளையும் சம காலத் தேவைக்கு இணங்க பொருத்தப்பாடுடையதாக பிரயோகிப்பதற்கான வாய்ப்புக்களை ஆராய்வதாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: நாவலர், சைவம், சமயம், ஒழுக்கம்.
|
துணைநூற்பட்டியல்:
[1] அம்மன்கிளி, மு. 1991. கைலாசபதியும் நாவலர் ஆய்வுகளும் இல் தாயகம் - கலை இலக்கிய மாத இதழ். (பக் 13 – 21). இலங்கை: தாயகம் பதிப்பகம்
[2] அறிவுடைநம்ப, ம. சா. (2012). சுவடிப்பதிப்பு முன்னோடிகள். இந்தியா: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
[3] ஆறுமுக நாவலர். (2003). பாலபாடம் இரண்டாம் புத்தகம். யாழ்ப்பாணம்: ஆறுமுகநாவலர் தர்மகர்த்தா சபை
[4] ஆறுமுக நாவலர். (1956). சைவதூஷண பரிகாரம். இந்தியா: வித்தியாநுபாலன அச்சகம்
[5] ஆறுமுக நாவலர். (1937). யாழ்ப்பாணச் சமயநிலை. இலங்கை: சைவவித்தியாவிருத்திச் சங்கம்
[6] இரத்தினம், கா.பொ. (1938). நாவலர் நினைவு மலர். சுன்னாகம்: ஈழகேசரி வெளியீடு
[7] பத்மநாதன், சி, ரூ இரகுபரன், க. (2012). பிரித்தானியர் ஆட்சியும் நவீனமயமாக்கமும் (தொகு.). இலங்கை: இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்
[8] கொழும்பு தமிழ்ச் சங்கம். (2012). சங்கத் தமிழ் - நாவலர் சிறப்பிதல். இலங்கை: ஆசிரியர்
[9] குமாரவடிவேல், இ. (2021). நாவலர் கல்வி மரபும் இன்றைய தேவையும். கனடா: சைவசித்தாந்த மன்றம்
[10] சீவரத்தினம், சி. (1962). நாவலர் சமயப் பணி. யாழ்ப்பாணம்: நாவலர் வித்தியாசாலை
[11] பூலோகசிங்கம், பொ. (2000). நாவலர் பண்பாடு. இந்தியா: காந்தளகம் வெளியீடு
[12] பாக்கியம், பொ. (1970). நாவலர் சரித்திர ஆராய்ச்சி. யாழ்ப்பாணம்: வட்டுக்கோட்டை தமிழ்ச் சங்கம்
|