கலிங்கமாகோன் - மீள்வரலாற்று பதிப்பு - |

|
International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR)
© 2023 by IRJTSR Journal Volume-5 Issue-4 Year of Publication : 2023 Authors : S.K.Shivaganeshan |

|
Citation:
MLA Style: S.K.Shivaganeshan, "Kalinka Maacon - Historical revisions" International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR) V5.I4 (2023): 27-35.
APA Style: S.K.Shivaganeshan, Kalinka Maacon - Historical revisions, International Refereed Journal of Tamil Studies Research (IRJTSR), v5(i4), 27-35.
|
சுருக்கம்:
இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பிராந்திய வரலாற்றைக் கூறும் பலநூல்கள் எழுந்துள்ளன. யாழ்ப்பாணவை பவமாலை, கையாலயமாலை, கோணேசர்கல்வெட்டு, மட்டக்களப்புமான்மியம், மட்டக்களப்பு பூர்வசரித்திரம் போன்ற வற்றை எடுத்துக்காட்டமுடியும். இவற்றுள் பிராந்திய வரலாற்றைக்கூறும் நூல்களுள் மட்டக்களப்புபூர்வசரித்திரம் பல சிறப்புக்களைக் கொண்டுள்ளது. இந்நூல்யாரால், எப்போது எழுதப்பட்டது என்பது நூலில் காட்டப்பட்டிருக்கவில்லை. ஆனால் நூலில் ஆங்காங்கே ஒல்லாந்தர் மற்றும் கண்டிமன்னர்கள் பற்றிய குறிப்புகள் காட்டப்பட்டுள்ளன. இத்த கவல்களைக் கொண்டு பார்க்குமிடத்து ஒல்லாந்தர்காலத்தில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம்.
இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை ஆட்சி செய்த ஒல்லாந்தர் வரிவருமானம், நீதிபரிபாலனம், நிருவாகபதவிகள், கரையோரத்தின் பொது நிருவாகம் போன்ற நடவடிக்கைகளில் தேசவழமைகளை பின்பற்றி ஒழுகவிரும்பினர். இதன் ஊடாகசுதேசிகளுடன் சுமுகமானநிருவாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள எதிர்பார்த்தனர். அதன் காரணமாகவே அப்போது வட இலங்கையில் ஆட்சி புரிந்த ஒல்லாந்த அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய யாழ்ப்பாணவை பவமாலை எழுதப்பட்டது. அதே போன்று கிழக்கு ஒல்லாந்த அதிகாரிகளின் வேண்டு கோளினால் மட்டக்களப்பு பூர்வசரித்திரம் எழுதப்பட்டது. ஒல்லாந்தர் காலத்தில் தான் வடகிழக்கு தமிழரின்பண்பாடு, வழக்காறுகள், மரபுகள் போன்றவற்றை அறியும் பொருட்டு தேசவழமைச் சட்டம் மற்றும் முக்குவர் சட்டம் ஆகிய தொகுப்புகள் தொகுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகளாகும்.
இவ்வாறு தொகுக்கப்பட்ட மட்டக்களப்பு பூர்வசரித்திரம் நூல் பல சிறப்புக்களைக் கொண்டது. இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பிலான பல பரம்பரைக் கதைகளைக் கொண்டதாக அந்நூல் எழுதப்பட்டுள்ளது. இயக்கர், நாகர் என வழைக்கப்பட்ட பூர்வகுடிகள், புரதானகாலத்து அனுராதபுரம் மற்றும் பொலனறுவைகாலத்து அரசர்கள், அவர்கள் காலத்தில் இடம் பெற்ற முக்கிய வரலாற்று சம்பவங்கள், கிழக்கிலங்கையின் ஆட்சியாளர்கள் என பல வரலாற்றுத் தகவல்களைக் காட்டி நிற்கின்றது.
இந்நூலின் காவியநாயகனாக மாகோன் என்ற மன்னன் காட்டப்பட்டுள்ளான். இவன் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் கலிங்க தேசத்திலிருந்து படைகளோடு வந்து பொலனறுவை இராச்சியத்தைக் கைப்பற்றி சுமார் 40 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செலுத்தியிருந்தான். அம்மன்னன் கிழக்கிலங்கையோடு நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தான். அந்நூல் காட்டிய தகவல் களை உறுதிப்படுத்திக் கொள்ள நேரடியான தொல்பொருள் சான்றுகள் கிடைக்கவில்லை. அதனால் அந்நூலை ஆதாரமாகக் கொண்டே ஆராய்ச்சியாளர்களினால் மாகோன் தொடர் பிலானகருத்துக்கள் முன்வைக்கப் பட்டுவந்தன. இருந்த போதிலும் தற்போது திருகோணமலை – கோமரசன் கடவல என்ற இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளகல் வெட்டு ஒன்று மாகோன் தொடர் பிலானதகவல் களை மீள்வாசிப்புக் குள்ளாக்கி, உறுதிப்படுத்தியுள்ளது. அவ்வாறு முன்வைக்கப் பட்டுள்ளகருத்துகள் தொடர்பில் ஆய்வில்கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
|
முக்கிய வார்த்தைகள்: சரித்திரம், மான்மியம், முக்குவர், குடிகள், மாகோன், தொல்பொருள், கல்வெட்டு.
|
துணைநூற்பட்டியல்:
[1] வடிவேல், இ., (ப.ஆ), 1993 கோணேசர்கல்வெட்டு, இந்துகலாசார
அலுவல்கள்திணைக்களம், கொழும்பு.
[2] கமலநாதன்,சா.இ., 2005 மட்டக்களப்புபூர்வசரித்திரம்,கொழும்பு - சென்னை.
[3] நடராசா, எவ். எக்ஸ். சி., 1998 மட்டக்களப்புமான்மியம், இரண்டாம்
பதிப்பு, மட்டக்களப்புகலாசாரபேரவை, மட்டக்களப்பு.
[4] இந்திரபாலா, கா., 2006 இலங்கையில்தமிழர்,ஓர்இனக்குழு- ஆக்கம்பெற்றவரலாறு,. ஆ.மு.300 – பொ.ஆ. 1200, சென்னைஃகொழும்பு.
[5] தங்கேஸ்வரி, க., 2005 தமிழ்மன்னன்மாகோனின்மகத்தான
வரலாறு, சென்னை.
|